(Reading time: 7 - 13 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 11 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

குழந்தை மோனிக்கா மட்டும் பெரியவர்களின் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் தன் விளையாட்டை தொடர்ந்துக் கொண்டிருக்க, மித்ரன் மற்றவர்களின் பார்வையை கவனித்து அலுப்புடன் தோளை ஏற்றி இறக்கினான்!

   

மித்ரனின் அசட்டையான செயல் கோபத்தைக் கொடுத்தாலும், மைத்ரேயி உடனடியாக அவனின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. பொறுமையாக யோசித்துப் பேசினாள்.

   

“சரண்யா என் கிட்ட பேசினதுல என்ன ஆச்சர்யம் இருக்கு? எனக்கு அவங்க ஹஸ்பன்ட் கோபியை நல்லா தெரியும்... இன்னைக்கு நாங்க இரண்டு பேரும் எதிர்பார்க்காமல் மீட் செய்தோம்... அப்போ என் கிட்ட ஷேர் செஞ்சாங்க... இன்ஃபாக்ட் அவங்க உன் பேர் எல்லாம் என் கிட்ட சொல்லலை, பொதுவா சொன்னாங்க... நான் தான் அப்புறமா விசாரிச்சு கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்...”

   

“ஓ, ஐ சீ,” என்றான் மித்ரன் இளக்காரமாக.

   

“சரண்யாவுக்கு நான் உன் தங்கைன்னு அப்போவும் தெரியாது, இப்போவும் தெரியாது...”

   

மித்ரன் இப்போது பதில் சொல்லவில்லை, ஆனால், அவனின் உதடுகள் ஏளனத்துடன் வளைந்தது.

   

அவர்களின் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த நளினி, “யாரு இந்த சரண்யா??? எதை பத்தி பேசுறீங்க இரண்டு பேரும்?” என்று புரியாமல் கேட்டாள்.

   

மித்ரன் பக்கம் மீண்டும் ஒரு முறை பார்த்து சூடாக முறைத்து விட்டு, அம்மா பக்கம் திரும்பி பேசினாள் மைத்ரேயி.

   

“அம்மா, சரண்யாவோட ஹஸ்பன்ட் கோபி எனக்கு அஃபிஷியலா தெரிஞ்சவர்... ரொம்ப நல்ல மனுஷன்... ஒரு ஆக்சிடன்ட்ல அவர் இறந்து மூணு வருஷம் ஆகுது! சின்ன குழந்தையோட தனியா அவங்க ஹஸ்பன்ட் ஸ்டார்ட் செய்த கம்பெனியை கவனிச்சுட்டு இருந்தாங்க சரண்யா... இப்போ ஏதோ பண தேவைக்காக கம்பெனியை மித்ரனுக்கு வித்துட்டாங்க... 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.