(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 27 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தில்லையோ அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த தனது தாய் தந்தையின் படத்திற்கு முன் நின்றான். கண்கள் கலங்கினான், நியாயத்துக்காக போராடி இறந்து போன தன் தந்தையும் அவருக்கு உதவியாக இருந்த ஒரே காரணத்திற்காக அநியாயமாக இறந்துப் போன தன் தாயும் அவர்களின் இறப்பிற்கு நியாயம் தேடி இறுதியில் தாதாவான தன் நிலைமையையும் நினைத்து கலங்கிப் போனான். 

   

தனக்கே இன்னும் நியாயம் கிடைக்காமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தன்னிடம் நியாயம் கேட்டு வந்த சம்யுக்தாவிற்கு என்ன நியாயம் வழங்குவது, உயிரை பணயம் வைத்து அவளை அழைத்துக் கொண்டு அவளின் தந்தையிடம் ஒப்படைத்து மன்னிப்பு கேட்க நினைத்தாலும் இன்னொரு பக்கம் தான் ஆற்ற வேண்டிய கடமை நிறைய உள்ளது, அதை செய்து முடிக்காமல் இந்த ஊரை விட்டு செல்லமுடியாது என தான் எடுத்த சபதம் அவன் கண் முன்னே தெரிந்தது 

   

சபதமா சம்யுக்தாவா 

   

தனது நியாயமா அவளின் நியாயமா 

   

எது இப்போது முக்கியம் என்பதை பலமாக யோசிக்கலானான் தில்லை. அதே போல இங்கு

   

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சிதம்பரமோ கொதித்துவிட்டான்

   

”அந்த தில்லை ரொம்ப ரொம்ப கெட்டவன், உங்க உயிரை பணயம் வைச்சானே அவன் மட்டும் இப்ப உயிரோட இருந்தா, நானே அவனை கொன்னிருப்பேன்” என கத்த அதற்கு சம்யுக்தாவோ அலறினாள்

   

”ஆபசர் அப்படி செய்யாதீங்க, அவர் என் புருஷன் ப்ளீஸ் அவரை தேடிக்கொடுங்க அதுவே போதும்”

   

”உங்களை என்னால புரிஞ்சிக்க முடியலை, உங்க உயிரோட விளையாடியிருக்கான், அவனுக்கு உங்க மேல அக்கறையே இல்லை, அவனைப் போய் தேடிக் கொடுங்கன்னு சொல்றீங்களே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.