(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

கதைக்குள் சென்றாள்.

   

விடிகாலையில் சோபாவில் படுத்திருந்த தில்லை உறக்கம் கலைந்து மெல்ல கண்கள் திறந்தான். எதிரில் ஒரு சேரில் அவன் முன் கோபமாக அமர்ந்து இருந்த சம்யுக்தாவின் உருவம் தெரிந்தது

   

”காலையில இவள்கிட்ட பேசவே கூடாது, முடிஞ்சவரைக்கும் நாம ஒதுங்கி போறதுதான் நல்லது” என நினைத்தவன் அவளிடம் பேசாமலே எழுந்து அமர்ந்தான். அவளோ ஏதோ பேச வருவதைக் கண்டான் உடனே அவசரமாக எழுந்து குளிக்கச் சென்றான். சிறிது நேரம் கழித்து குளித்து முடித்து வெளியே வந்தான்.

   

அங்கே உள் அறையில் சம்யுக்தா இருந்தாள் கோபமாக, அவனை பார்த்து முறைக்க அவனோ உடை மாற்ற முயல அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். அதைப் பார்த்தபடியே உடை மாற்றிக் கொண்டு அவசரமாக வெளியே சென்றான்.

   

தில்லை அவனது வீட்டிலேயே ஒரு பக்கம் அடுப்பு வைத்திருந்தான், பசி எடுத்தால்  ஆட்களிடம் சொல்லி அவர்களின் வீட்டிலேயே சமைத்திருக்கும் உணவுகளை வரவழைத்து சாப்பிடுவான் இல்லையென்றால் யார் வீட்டிற்காவது சென்று தோசை மாவு வாங்கிக் கொண்டு வந்து தோசை சுட்டு சாப்பிடுவான், அவன் கேட்டால் போதும், அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்களும் அவனுக்காக சிறிய கின்னத்தில் சட்னியோ சாம்பாரோ தருவார்கள் அதுவே அவனுக்கு போதுமானது, அவனும் அதை சாப்பிட்டு வாழ்ந்தான்.

   

இப்போதும் விடிகாலையில் அவனே தோசை சுட்டுக் கொண்டிருந்தான் சம்யுக்தாவிற்கும் சேர்த்துதான். அவளோ அவன் செய்வதை பார்த்துவிட்டு நொந்தவள் குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து அவனின் தாயார் புடவையை அணிந்துக் கொண்டு வெளியே வந்தாள். அவள் வரவும் அவளுக்காக சுடசுட தோசையை சுட்டு தட்டில் வைத்து அவளிடம் தந்தான் அவளோ

   

”வெறும் தோசையை எப்படி சாப்பிடறது” என கேட்க அவனோ அவளிடம் சிறிய கின்னத்தை தந்து

   

”பக்கத்து வீட்டுக்கு போய் சட்னி கேளு, அவங்க இந்த கின்னத்தில தருவாங்க வாங்கிட்டு வா” என சொல்ல அவளோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.