வேடிக்கையா இருக்கு எனக்கு பிடிக்கலை”
”என்ன இருந்தாலும் அவர் என் புருஷனாச்சே“
”இந்த சென்டிமென்ட்லதான் அந்த தில்லை ரொம்ப ஆட்டம் ஆடியிருக்கான் போல“
”அப்படியெல்லாம் இல்லை, அவர் என்னை நல்லாதான் பார்த்துக்கிட்டாரு”
”நீங்க நல்லவங்க அதான் அந்த கெட்டவனுக்காக பரிஞ்சிப் பேசறீங்க, நானா இருந்திருந்தா அவனை, சரி விடுங்க இப்ப எதுக்கு அதெல்லாம், உங்க உயிருக்கே ஆபத்தா முடிஞ்ச பின்னாடியுமா நீங்க அங்க தங்கினீங்க கிளம்பி வந்துட வேண்டியதுதானே“
”ஆனா, எனக்கு வேண்டிய நியாயம் கிடைக்காம நான் எப்படி வர்றது”
”இது தப்பு சம்யுக்தா, உங்களோட பிடிவாதத்தால நீங்களே பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டீங்க”
“என்னை காப்பாத்ததான் தில்லையிருக்காரே”
”எத்தனை முறை உங்களை காப்பாத்தியிருப்பாரு, இப்ப பாருங்க அவன் உங்களை விட்டுட்டானே, இப்ப அவன் உயிரோட இருக்கானா இல்லையான்னு கூட தெரியலை, நீங்கதான் அவனுக்காக இப்படி கஷ்டப்படறீங்க, அவன் எங்கேயோ சந்தோஷமாதான் இருக்கான்னு தோணுது“
”அப்படியிருக்காது, அவர் தொலைஞ்சி போயிட்டாரு, நீங்கதான் அவரை தேடித்தரனும்”
”முதல்ல உங்களுக்கு அவன்கிட்டயிருந்து நியாயம் கிடைச்சதா இல்லையா அதை சொல்லுங்க”
”கிடைச்சது ஆனா, நான் நினைச்சது இல்லை வேற மாதிரி கிடைச்சது”
”அதான் எப்படி கிடைச்சது” என சிதம்பரம் ஆர்வமாக கேட்க அவளோ மறுபடியும் பழைய