”ப்ச் இப்பவா முடியாது நான் பிசியா இருக்கேன்”
”என்ன பிசி, தோசைதானே சுடற பரவாயில்லை கிளம்பி வா போவோம்”
”எனக்கு வேற அடிப்பட்டிருக்கு, இப்படியே நான் பாட்டிகிட்ட போனா என்னைத் திட்டுவாங்க, நான் போகலை காயம் ஆறினதும் போறேன்”
”இப்ப நீ பாட்டியை பார்க்க போகலைன்னா, எங்களைத்தான் திட்டுவாங்க வாண்ணா போலாம்”
”முடியாதுடா”
”அண்ணா”
”இதப்பாரு சட்னியில்லாம என்னால தோசை சாப்பிட முடியலை, உன் வீட்ல சட்டினியிருந்தா கொண்டா போ“
”சரி சட்னி கொண்டு வந்தா என்கூட வருவியா”
”நீ முதல்ல கொண்டுவா இந்தா கின்னம்”
என சொல்ல அவனும் அவன் தந்த கின்னத்துடன் வெளியே சென்றான். சில நிமிடங்களில் வேகமாக வந்தான்
”அண்ணா சட்னியில்லை சாம்பார்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்க” என சொல்லி தர அவனோ அதை வாங்கியபின்
”சட்னி கூட தரலைல்ல போ உன்கூட நான் வரமாட்டேன்”
”அண்ணா இது அநியாயம்”