”ப்ச் இப்படியா பிச்சையெடுத்து தினமும் சாப்பிடற”
”வேற வழி இதை ஏன் பிச்சைன்னு நினைக்கற, அவங்க பாசமா நமக்கு தர்றதா நினை“
”இதுவா எனக்கு இது பிடிக்கலை, ஏன் இந்த வீட்லயே சமைக்க முடியாதா“
”எனக்கு சமைக்க தெரியாதே, ஏதோ போனா போகட்டும்னு காபி டீ போடறது, தோசை சுடறதுன்னு தெரிஞ்சி வைச்சிருக்கேன்”
”என்னால இன்னொருத்தர் வீட்ல போய் சட்னியெல்லாம் பிச்சை எடுக்க முடியாது”
”சரி பரவாயில்லை, சர்க்கரை இருக்கு தோசைக்கு தொட்டு சாப்பிடு”
”ப்ச் முடியாது அது நல்லாயிருக்காது”
”சரி விடு நானே போய் சட்னி வாங்கிட்டு வரேன்“
“நீயெல்லாம் ஒரு தாதாவா, போயும் போயும் சட்னிக்காக பிச்சை எடுக்கற“
”அப்படி சொல்லாத சம்யுக்தா, அவங்க யாரோ இல்லை, என்கிட்ட அடியாளுங்களா இருக்காங்களே அவங்களோட குடும்பங்கள்தான், நான் என்கிட்ட வேலை செய்றவங்களை நல்லா பார்த்துக்கறதால அவங்க குடும்பத்தாரும் என்னை நல்லா பார்த்துக்குவாங்க, என்ன கேட்டாலும் தருவாங்க, சட்னி, சாம்பார், சாப்பாடு கூட கேட்டாலும் தருவாங்க, அவங்க என்னை கெட்டவனா நினைச்சதில்லை, அதனால உன்னையும் அவங்க எதுவும் சொல்லமாட்டாங்க, நீ கூட அவங்ககிட்ட பேசலாம், பழகலாம் தப்பில்லை” என சொல்ல அந்நேரம் ஒருவன் உள்ளே வந்தான்
”அண்ணா உன் பாட்டி உன்னை கையோட கூட்டிட்டு வரச் சொன்னாங்க”