இவனுக்கு அவங்க அங்கே இருக்குறது பிடிக்கலை போலிருக்கு...”
அவளின் பேச்சில் குறுக்கிட்ட மித்ரன், “போலிருக்குன்னு எல்லாம் நீ ஜிகினா வச்சு பாலிஷ்டா சொல்ல வேண்டாம்... எனக்கு அவ அங்கே இருக்குறது சுத்தமா பிடிக்கலை தான்... கம்பெனியை வித்தா போக வேண்டியது தானே,” என்றான் கோபத்தை மறைக்காமல்!
“உனக்கு அது ஒரு சாதாரண கம்பெனி, ஆனா சரண்யாவை பொறுத்த வரைக்கும் அது அவங்க கணவர் கோபியோட கம்பெனி...!”
“ப்ச்..! சென்டிமென்ட் பைத்தியங்கள்...! அந்த கம்பெனியோட வேல்யூ தெரியாம கேவலமா கம்பெனியை மேனேஜ் செய்து இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்திருக்கா அவ... சொர்கத்திலோ நரகத்திலோ இருக்க நீ சொல்ற அந்த கோபி கூட இதை தான் சொல்வான்... அம்மா தாயே என் கம்பெனியை விட்றும்மான்னு கெஞ்சுவான்... ஸ்டுபிட் வுமன்!”
“மித்ரன்!” என்று சற்று கோபமாக அழைத்த நளினி, “நீயா இப்படி எல்லாம் பேசுறது??? அந்த அளவுக்கா பணத்தை தவிர வேற எதையும் மதிக்காத கல் மனசுக்காரானா ஆகிட்ட நீ???” என்று வேதனையுடன் கேட்டாள்.
“கல் இல்லம்மா இரும்பு! இரும்பை விட உறுதியான ஹார்ட் வச்சிருக்கேன்... இன்னொரு தடவை யாரும் உடைச்சிடக் கூடாதில்லையா!” என்றான் மித்ரன் ஒருவிதமான குரோதத்துடன்.
✽✽✽
பஸ்ஸில் இருந்து இறங்கி வீடு நோக்கி நடந்த சரண்யாவிற்கு சோர்வாக இருந்தது.
மித்ரன் வீட்டில் யாருடன் சண்டை போட்டு வந்தானோ என்னவோ, அன்று அவளை திட்டோ திட்டு என திட்டி தீர்த்திருந்தான்.
அவன் வேண்டுமென்றே திட்டுவது அவளுக்கு புதிதல்ல, ஆனால், இன்று போல எது செய்தாலும் அவன் திட்டியதில்லை!