Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 18 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சுமித்ரா சட்டென்று சுதாரித்துக் கொண்டாள்...
கமல் எனும் குழந்தையை முழுக்க முழுக்க தெரிந்தவள் அல்லவா!!!!
தன்னுடைய மன வருத்தத்தை பின்னுக்கு தள்ளி விட்டாள்...
எப்போதும் போல பெரிய புன்னகை ஒன்றை உதட்டில் தவழ விட்டு, தன் கரங்களை கணவனின் கழுத்தை சுற்றிப் போட்டு மாலை ஆக்கினாள்...
“கமல்... நான் என்னைக்குமே இங்கே இருப்பேன்...”
அவனின் மார்பை தொட்டுக் காட்டினாள்...
கமலுக்கு சுமித்ரா அளவிற்கு திடமான இதயம் இல்லை என்பதால் அவனால் அவளைப் போல சட்டென உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை...
அவனின் கட்டுப்பாட்டையும் மீறி மெல்ல எட்டிப் பார்த்த கண்ணீரை அவனால் தடுக்க முடியவில்லை...
சுமித்ரா இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
அவனை நல்ல நண்பனாய், அன்பை சொரியும் காதலனாய், அவளை கண்ணின் மணியை போல பாதுகாக்கும் கணவனாய் பார்த்திருக்கிறாள்...
இப்போது சிறுவனாய், மகனாய் தோன்றினான்...
ஒரு ஆண் மகன் அவ்வளவு எளிதில் கண்ணீர் சிந்த மாட்டான் என்பதை அவள் அறிந்தே இருந்தாள்...
இங்கே கணவனின் கண்களில் இருந்து வந்த ஒவ்வொரு துளியும் அவள் மேல் அவன்