(Reading time: 5 - 9 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

செய்திருக்க மாட்டேனா?? சாரி சுமி... கேன்சர் ரொம்ப மெச்சுர்ட் ஸ்டேஜுல இருக்கு... நான்...”

   

ஹேமாவின் பதிலை கிரகிக்க சுமித்ராவிற்கு சில வினாடிகள் தேவைப்பட்டது...

   

முன் தின இரவு முதலே அவள் புரிந்துக் கொண்டது தான் என்றாலும் இப்போது அது உறுதியாகவும்... மீண்டும் அதே உணர்வுப் பந்து அவளுள் எழுந்தது...

   

அவளுடைய கமல்... ரேஷ்மி...!!!!?????

   

“ஹேமா, எனக்கு ஒரு ஹெல்ப் செய்வீயா???”

   

“சொல்லு சுமி...”

   

“கமல் பத்தி உன் கிட்ட சொல்லி இருக்கேன்ல...”

   

“ம்ம்ம்...”

   

“எனக்கு அப்புறம்... எப்போவாவது ஞாபகம் வரும் போதெல்லாம் அவர் கிட்ட பேசு... எப்படி இருக்கீங்க.... சாப்பிட்டீங்களான்னு கேளு...”

   

“...”

   

“உன்னை தவிர வேற யார் கிட்டேயும் இப்படி உரிமையோட என்னால சொல்ல முடியாது... அத்தை கிட்ட எதை சொல்றது, என்ன சொல்றதுன்னு எனக்கு புரியலை...”

   

“....”

   

“சரியா?”

   

“செய்றேன் சுமி...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.