“அப்புறம் ரேஷ்மியையும் கொஞ்சம் கைட் செய்...”
“சுமி... இதை எல்லாம் மெதுவா பேசலாம்... நீ உனக்கு கொடுத்திருக்க மெடிசின் எல்லாம் சரியா சாப்பிடு... நான் வேற சீனியர் டாக்டர்ஸ் கிட்ட பேசிட்டு...”
“மத்தவங்க கிட்ட சொல்ற பொய்யை இவ்வளவு லேட்டா என்கிட்டே சொல்றீயே ஹேமா??? இதோ பாரு... திரும்ப இப்படி தெளிவா பேச, யோசிக்க என்னால முடியுமான்னு எனக்கு தெரியலை... நான் சொன்னதை மறந்திற மாட்டீயே...?”
“ஹுஹும்...”
“தேங்க்ஸ் பா...”
ஃபோனை வைத்து விட்டு, ஜன்னலை திறந்து வெளியே தெரிந்த உலகைப் பார்த்தாள் சுமித்ரா.
டெலிஃபோன் வையரின் மீது அமர்ந்து கழுத்தை திருப்பி, திருப்பி பார்க்கும் காகம்...
நிமிர்ந்து நேராக நிற்கும் தூங்கு மூஞ்சி மரம்... அதன் அழகிய பூக்கள்...
மீசை அதிரும் வண்ணம் மியாவ், மியாவ் என ஓசை எழுப்பியபடி, வாலை ஆட்டிக் கொண்டே எச்சரிக்கை உணர்வுடன் நடக்கும் பூனை...
அதை வேட்டையாடப் போவது போல கண்களால் தொடரும் எதிர் வீட்டு நாய்...
பால் வாங்கி வரும் ஆண்களும், பெண்களும்...
ஹும்... ஒரு பெரிய பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட்டது...
இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட இதை எல்லாம் நின்று பார்க்க வேண்டும் என்று