வைத்திருக்கும் அன்பை சொல்ல, அவளுக்கு வருத்தமும், மகிழ்ச்சியும் ஒன்றாக தோன்றியது...
இந்த அளவிற்கு தன் மீது அன்பு வைத்திருக்கும் கணவனுக்காக மகிழ்ச்சி, அவனுடன் வாழும் வாழ்க்கை இப்படி சட்டென முடிய போகிறதே எனும் வருத்தம்...!
“கமல், நாம நிறைய ப்ளான் செய்யனும்...”
“...”
“கமல், எனக்கு அப்புறம் நீங்க...”
அவளை மேலே பேச விடாமல் தடுத்து, “நானும் இருக்க மாட்டேன்... நீ இல்லாமல் நானும் உயிரோட இருக்க மாட்டேன்... நானும் செத்துப் போயிடுவேன்,” என்றான் கமல்.
“கமல்...” அழைத்தப் படி அவனை அணைத்துக் கொண்டவள், இப்போதைக்கு அவனிடம் வேறு எதையும் பேச வேண்டாம் என முடிவு செய்தாள்.
அவனை தன் மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து தூங்க வைத்தவள்... இரவெல்லாம் தூங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
விடிவதற்கு அறிகுறியாக பறவைகளின் சத்தம் கேட்கவும், மெல்ல கமலை தலையணையில் படுக்க வைத்து விட்டு, செல்ஃபோனில் ஹேமாவை அழைத்தாள்.
அந்த பக்கம் இணைப்பு வந்த உடனே, “உனக்கு அறிவு இருக்கா??” என்றாள்.
“சுமி...?”
ஹேமாவின் குரல் குழப்பத்துடன் ஒலித்தது... அவளின் குரலில் ஒலித்த வேறுபாடும் சுமித்ராவின் கருத்தை தப்பவில்லை...