“இப்போ எதுக்கு அவனை பத்தின பேச்சு, நாம வேலையை முடிக்கலாம்! இன்னும் கொஞ்ச நேரத்துல லைனா எல்லோரும் கிளம்ப வந்து நிப்பாங்க...”
அதற்கு மேல் பூங்கோதையிடம் கமல் பற்றி பேச மனம் வராமல் சுமித்ராவும் சமையல் வேலையை தொடர்ந்தாள்.
ஆனால் அவளின் மனதில் கமல் பற்றிய கவலை அதிகமாகிக் கொண்டே இருந்தது...
ஹேமாவிடம் மீண்டும் கமலை பற்றி பேச வேண்டும் என முடிவு செய்துக் கொண்டாள்...
✽✽✽
என்றும் போல கமலுக்கு காஃபியை கொண்டு வந்த சுமித்ரா, அவன் சுவற்றை பார்த்து அமர்ந்திருப்பதைக் கண்டு, கட்டாயப் படுத்தி அவனை எழுப்பி குளிக்க அனுப்பினாள்...
அவன் குளித்து முடித்து வந்த பின், அவனிடம் காஃபியை கொடுத்து விட்டு, “கமல், நான் சொல்றதை கவனமா கேளுங்க...” என்றாள்.
கமல் வெற்றுப் பார்வை ஒன்றை பதிலாய் தந்தான்...
“கமல், எனக்கு தெரியும், நீங்க என் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கீங்க... ஆனால், மனுஷங்க எல்லோருக்கும் பிறந்த நாள்ன்னு ஒன்னு இருக்க மாதிரி இறந்து போற நாளும் இருக்கு...”
“சுமி, தேவை இல்லாத பேச்சை பேசாதே... உனக்கு ஒன்னும் ஆகாது... நான் தான் சொல்றேன்ல...”
“சரி, எனக்கு ஒன்னும் ஆகாமலே இருக்கட்டும்... ஆனாலும்... இதை... நான் சொல்றதை நீங்க கேட்கலாம் தானே??”
Every line of last episode makes me cry for the most, felt like you would have saved her at least in the imagination, but that's not the reality as you finished 😔 thanks for not explaining how they struggled in her last days,, 'you are a great writer if your words brings emotions on viewers/audience' you achieved it great 👏🏻
Hi! 🤗 Your message truly means a lot to me! I'm so touched that the story resonated with you and brought out such deep emotions. Writing this part was really emotional for me too. Thank you for your kind words and for being such a thoughtful reader! 💕✨ Since this was a few episodes ago, I hope you've caught up with the latest ones. I would love to hear your thoughts! 😊