(Reading time: 18 - 35 minutes)

ஹிக்கு ஆனந்தம் தாள வில்லை.அவன் எழவும் ஹரிணியும் எழுந்தாள். அவன் பார்வை புரிந்து சுந்தரம் "தனியா பேசலாம் என்றாலும் இருவருக்கும் தெரிந்த ஒருத்தர் கூட வரணும் அதனாலே தான் " என்றார் சுந்தரம்.

 

சற்று நேரம் அமைதி நிலவியது, மகேந்திரன் தான் கலைத்தான்.

 

"மீரா இன்னும் பத்து நாளில் நான் பெங்களூர் ஐ.ஐ எம் போயிருவேன் அதனால..." என்று இழுத்தான் 

 

"அதனால்???!!!” என்று இருவரையும் ஒரு பார்வை பார்த்தாள். மீராவிற்கு ஹரிணி மேல் கோபம். இவளும் மற்றவர்களுடன் சேர்ந்து அவளை வதைக்கிறாள் என்று.ஹரிணி கைகளை கட்டிக்கொண்டு அவள் கண்களை நேராய் பார்த்து நின்றாள்.

 

"எனக்கு இப்போவே நாம்ப இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கொள்ளனும்" என்று வெளிபடையாக பேசினான் 

 

"எதுக்கு?? மிஸ்டர் எதுக்கு!!!, ஆர்வகோளாரில் நீங்க செய்ததுக்கு ப்ராய்ச்சித்தம்மா????, அப்படி ஒன்றும் விளைவுகளை சந்திக்கிற அளவிற்கு நீங்க செய்யவில்லை அதனால் இந்த நாடகம் எல்லாம் நிறுத்திட்டு உங்க வாழ்கையை  பார்த்து போங்க  "

 

"மீரா?!!"  என்று வியப்பாக பார்த்தான் 

 

"முதலில் வேண்டாம் பிடிக்கலை சொல்லிட்டு, இப்போ துரத்தி துரத்தி வேற வகையிலும் மனசை கலைத்து, நிம்மதியெல்லாம் பாழ் செய்து கல்யாணத்தை பண்ணிக்க கேட்கிற மஹி??, வேண்டாம் எதுவும் வேண்டாம்!! கும்பிட்டாள். 

 

மகேந்திரனுக்கு மீராவின் மனம் தெளிவாக புரிந்தது. நடுவில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது.அந்த பிளவு சரி செய்தால் மீராவின் மனம் மாறும் என்று புரிந்தது. 

 

ஹரிணிக்கு அவர்கள் இருவரும் பேசுவதிலிருந்து ஒன்றுமே பிடிபடவில்லை. அவளுக்கு தெரிந்தது மஹிக்கு மீராவை பிடித்து இருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர் என்று மட்டும் தான். 

 

ஹரிணி,"மீரா தம்பிக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், அவர் உன்னை மனசார நேசிக்கிறார்"

 

மீராவிற்கு சிரிப்பு வந்தது ஹரிணியின் அப்பாவிதனத்தை பார்த்து "ஹரிணி!!! தூக்கம் ஒரு நாள் வராததுக்கே ஸ்ட்ரெஸ் அது இது பேசினே. போன இரண்டு வருடமா நானா தூங்கினது கிடையாது.. தெரியுமா??? மறக்கவும் முடியாம நினைக்காம இருக்க முடியாமல், ஐயோ நான் பட்டப்பாடு!!! போதும்! எல்லாம் போதும்! என்னை சுற்றி இருக்கிறவங்க நல்லா இருக்கனும் அதற்க்கு நானும் நல்லா இருக்கனும். என்னை என் நடத்தையை தப்பா பேசின ஒருத்தனோட என் வாழ்கை பங்குபோட என்னால முடியாது" என்று சிவந்த இறுகிய முகத்துடன் அவள் சொல்ல மஹிக்கு நம்பிக்கை அளவுகோள் வெடித்து சிதறி பலம் இழந்துபோனான்.

 

அவள் பேச கேட்ட ஹரிணிக்கு சொல்வதற்கு ஏதும் இல்லை. சிலைப்போல் நின்றுவிட்டாள்.அவளுக்கு மீரா அவளுடனே இருக்க வேண்டும்.மஹியை அவள் திருமணம் செய்தால் அது முடியும்.அதை மட்டும் தான் கணக்கிட்டு வைத்திருந்தாள். மீராக்குள் பிரளயமே மஹியால் தான் உருவானது என்றெல்லாம் கேட்க ஹரிணிக்குள் மீராவின் நிம்மதியை தான் தேட தோன்றியது.

 

"முடியாது" வார்த்தை குத்தி கிழித்து விட்டது அவனை. வார்த்தைக்கு இத்தனை வலிமையா?? வாழ்வின் பலமே இவள் தான் என்று நினைத்திருந்தான். இதயத்தை வெடிகுண்டு போல் வெடித்து சிதற வைத்துவிட்டாள்.

 

கோபம் ஏற "மீரா!! இன்றைக்கும் நான் பார்த்து அதிசயிக்கும் ஒரு ஜீவன் நீ தான். உன்னை பார்த்து தான் பலது என் வாழ்வில் கற்றுக்கொண்டேன் மீரா!! என்றைக்கும் உன்னை "என்ன பெண் இவள்" என்று நான் நினைத்ததே கிடையாது" என்றான்.

 

மீரா இளக்காரமாக சிரித்து "உன் நினைப்பு தான் சரியென்று அன்றைக்கு நீ செய்ததுக்கு என்னவென்று சொல்லலாம் மஹி"

 

"உன்னை புத்திசாலி என்று நினைத்தேனே மீரா!!! என் காதலை காட்ட வழி தெரியாமல் தானே அப்படி செய்தேன். நானும் மனிதன் தான், எனக்குள்ளும் உணர்சிகள் இருக்கே மீரா"

 

"போதும் மஹி!! நான் முட்டாளாகவே இருந்துக்கிறேன்,எனக்கு ஏதும் வேண்டாம் வாங்க போகலாம்" என்றாள்.

ஹரிணி அகலவும் 

 

அவள் கையை பிடித்துக்கொண்டு மகேந்திரன் " மீ...ரா...," என்றான் ராகமாக இழுத்து.

 

அந்த தொனிக்கு மீரா மயங்குவாள் என்று எதிர்பார்த்து.அப்படி அவன் கூபிட்டாலே எதுவானாலும் சரி என்று சொல்லி இருக்கிறாள்.அந்த யுக்தியை செயல்ப்படுத்தினான் 

 

 

"கை விடுங்க மகேந்திரன்" அழுத்தமாக சொன்னாள் மீரா. தந்திரத்தை பயன்படுத்திகிறானாம் என்ற எண்ணத்தில்.அது மீராவிடம் செல்லாது என்பதுப்போல் 

 

"நான் உன்னை தப்பா பேசல மீ...!" என்று இழுத்தான் 

 

மீராவிற்கு அழுகையும் கோபமும் சேர்ந்து வந்தது. திக்கி திணறி "என் பலவீனம் தெரிந்துக்கொண்டு" என்று ஆரம்பித்து பேச்சை நிறுத்திக்கொண்டாள். இதற்க்கு முன் நடந்த சம்பவங்கள் ஞாபகம் வர...

 

வெளரிய முகத்துடன் அவன் பக்கம் திரும்பி "என்னை விடேன் " என்றாள் பாவமாக.

 

அவனும் தளர்த்தி விட்டான். மனம் விடதே என்று கூவிய போதும். பின் வெளியே போனவள் எதிர்பாராத விதமாக மகேந்திரனை பிடிக்கவில்லை என்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இன்னும் இறுகிபோனாள்.

 

கிருஷ்ணா கண்கள் சிவப்பாகி இருந்தது. கவி அசையாமல் நின்றிருந்தாள். மற்றவர்கள் யாரும் பேச வார்த்தையின்றி அமர்ந்திருந்தனர்.

 

அவள் நிலைமை புரிந்து சுந்தரம் மஹியை தேற்றும் விதமாக “ கொஞ்ச நாள் பொருத்து பார்போம்" என்று சொன்னார். மஹிக்கு நம்பிக்கை விட்டுபோனது. வெறுமை ஒட்டிக்கொண்டது.

 

ஆறு வருடங்கள் கழிந்து 

 

ரயில்வே டீபார்ட்மெண்ட் திட்டிகொண்டே இறங்கினான் மகேந்திரன் ரயிலிருந்து. பிரதாப் கைகளில் அவனது இரண்டு வருட மகளுடன் நின்றிருந்தான்.

 

"பச்... பிளைட் மிஸ் பண்ணிட்டேன்" என்று கடுப்பாக சொன்னான் 

 

"சரி விடு என் வீட்டிற்க்கு வந்து குளித்து ரெடி ஆகி ஹாஸ்பிடல் போகலாம்" பிரதாப் 

 

"ஏன்டா இந்த நேரத்துல குழந்தையை தூக்கிட்டு வந்திருக்க"

 

"இவ அம்மா காலையிலே அசதியா இருக்கு என்று சொன்னாள், இவளும் கூட இருந்தா இன்னும் கஷ்டமா இருக்கும் மச்சி அவளுக்கு"

 

மகேந்திரன் கிண்டலாக சிரிக்க 

 

"டேய் உன்னை மாதிரி லக் யாருக்கு வரும், ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகள், நாங்க தான் கொஞ்சம் ஹார்ட் வொர்க் செய்திருக்கிறோம் " என்றான் கிண்டலாக 

 

மகேந்திரனுக்கு எப்போது ஹாஸ்பிடல் போவோம்.ரதியை பார்போம் என்றிருந்தது. 

 

பின் அவர்கள் பிஸ்னஸ் சம்பந்தமாக எல்லாம் பிரதாபிடம் தெரிவித்து விட்டு அந்த அழகு தேவதை ஏஞ்சலிடம் விளையாடிக்கொண்டே பிரதாப்பின் வீடு வந்து சேர்ந்தனர்.

 

ரஞ்சனா, பிரதாப் மனைவி சோர்ந்து போய் தெரிந்தாள் அந்த காலையிலே. இரண்டாவது பிள்ளைக்கும் இப்படி ஆகுமா என்று பெரிய சந்தேகத்தை கேட்டான்.

"பைய்யா, ஒரு சிலப்பேருக்கு தான் இப்படி" என்று மூச்சு வாங்க பேசினாள்.

 

குளித்து முடித்து தயாராகி நேராக ஹாஸ்பிடல் சென்றான். மெட்டர்நிட்டி வார்டு பக்கம் போனதுமே ஆர்வம் தொற்றிக்கொண்டது. எதிரில் சிவகாமி வந்தார் "கண்ணா வந்துட்டியா?? நீ போய் பாரு நான் பால் வாங்கிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

 

ரூம் காட்டிவிட்டு சென்றார். கதவை திறந்தவனுக்கு பெட்டில் இறுக்க கண்களை மூடிகொண்டு, இளநகையுடன்  படுத்திருக்கும் அவன் ரதியை பார்த்ததுமே புரிந்தது அவனின் வருகை அவளுக்கு தெரிந்திருக்கிறது என்று.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.