(Reading time: 18 - 35 minutes)

வள் தலைப்பக்கம் போய் அமர்ந்தான். பக்கத்தில் இரண்டு தொட்டில்லில் இரண்டு ஆண் குழந்தைகள். அவன் உள்ளங்கை அளவு தான் இருந்தது.சிலிர்ப்பாக இருந்தது மகேந்திரனுக்குள்.

 

அவன் மடியில் தலை வைத்துக்கொண்டு அவன் இடுப்பை சுற்றி வலைதுக்கொண்டால் அவன் ரதி.

 

"வலித்ததா குட்டிம்மா " என்று கேட்டான் கனிவுடன் 

 

அவள் ஆமாம் என்பதுப்போல் தலை அசைத்தாள் 

 

"இப்போ டா "

 

இல்லை என்பது போல் தலை அசைத்தாள் 

 

 கதவை வேகமாக திறந்துக்கொண்டு நர்ஸ் உள்ளே நுழைந்தார். "சார் டிரஸ் மாத்தி விடனும், வெளியே போங்க" என்று சொல்லிக்கொண்டே 

 

"எவளோ நேரம் ஆகும்" என்று கேட்டான் 

 

"ஒரு அரைமணி நேரம் ஆகும் என்றார்"

 

மகேந்திரன் பெரும் மூச்சை விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.

 

வெளியேறுகையில் "ஏன்ம்மா பச்சை உடம்புகாரி இப்படி தான் உடம்பை முறிக்கிட்டு படுப்பியா" என்று திட்டிக்கொண்டு இருந்தார் அந்த நர்ஸ்.

 

அவள் முழித்துக்கொண்டு நின்றாள்.

 

வெளியே வந்து பெஞ்ச்சில் அமர்ந்தவனுக்கு நாட்கள் நகர்ந்த வண்ணம் யோசிக்கையில் அவனை அறியாமல் சின்னதாக புன்னகை மலர்ந்தது.

 

கண்மூடி தலை பின் சாய்ந்தான்.

 

மீராவின் புறக்கணிப்பின் வாழ்கையை வெறுத்து ஒரே அறையில் ஒடுங்கி போனான் மகேந்திரன். அவன் ஒடுக்கம் அந்த வீட்டில் எல்லாருக்கும் அச்சத்தை தந்தது.

 

"மாற்றம் தேவை மஹி உனக்கு, நீ படிக்க கிளம்பு மற்றது பார்த்துகொள்ளலாம்" என்று ராம் சொல்ல 

 

மற்றவரும் ஆமோதிக்க படிக்க கிளம்பி விட்டான். யாரிடமும் நெருங்கி பழக பயமாக இருந்தது. பிடிதெல்லாம் பிடிக்காமல் போனது. சமாளித்துக்கொண்டும் முடியாத நேரத்தில் அவளும் இப்படி தானே இருந்திருப்பாள் என்று தேற்றிகொண்டும் வாழ்கை நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தான்.

 

செமஸ்டர் லீவ் என்று சென்னை வந்து அந்த அறையிலே முடங்கிகொண்டிருந்தவனுக்கு நரேன் போன் செய்தான்."டேய் உங்க அண்ணியை கொஞ்சம் ஸ்கை வாக்கில் கொண்டுவந்து விட்டு போயேன்" என்றான்.

 

மஹிக்கு பிடிக்கவில்லை தான்.ஆனால் அண்ணன் சொல்லி தட்ட முடியாமல் கிளம்பினான் அவன் அண்ணியை கூட்டிகொண்டு காரில். ஹரிணிக்கு ஐந்தாம் மாதம். சூர்யாவின் பிள்ளைக்கு முறைபெண் பிறக்க வேண்டும் என்று எல்லாம் கிண்டல் செய்தனர். வலித்தது மஹிக்கு. பார்க்கும் பொருள், இடம், கேட்கும் குரல், பேச்சு  என எல்லாமே சேர்ந்து நினைவுகளை கிளறி  வலிக்க செய்தது. சினிமா பார்க்க பிடிக்கவில்லை, புத்தகங்கள் படிக்க பிடிக்கவில்லை.

 

அண்ணியை பத்திரமாக எலிவேட்டாரில் அழைத்து சென்றான். இரண்டாம் தளத்தில் எதிரே அவனை பார்த்துக்கொண்டே  வந்த மீரா அவன் அருகில் வந்து "நீயில்லாமல் என்னாலும் இருக்க முடியாது மஹி" என்று அவன் கைகளை பற்றிக்கொண்டாள்.

 

அங்கே ஹரிணிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நரேனுக்கு கண் எதிரே நடப்பது என்ன கனவா என்றிருந்தது.

 

மீராவின் குடும்பத்தில் செயலில் புத்தி புகட்ட வேண்டும் பெண்ணிற்கு என்று அவளை மாப்பிள்ளை பார்க்க அங்கே ரெஸ்டாரன்ட் அனுப்பியுள்ளனர். 

 

இன்னொரு ஆணை கணவனாக பார்க்க முடியாது தன்னால் என்று உணர்ந்த மீரா, அவளை பார்க்க வந்தவன் பேசிக்கொண்டிருக்க சகியாமல் எழுந்து வெளியே வந்தாள். அவள் உணர்ந்த அந்த தருணமே மஹி எதிர்க்கே வரவும் சென்றதெல்லாம் மறந்து காதலை வெளிப்படுத்தினாள்.

 

சந்தோஷ கொந்தளிப்பில் இருந்தவன் சட்டென கை விடிவித்துக்கொண்டு ""புரியல" என்றான் குழப்பமாக பார்த்து.

 

மீரா இரண்டு வினாடிகள் உறைந்து சட்டென அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

 

மஹிக்குள் உலகை கைக்குள் கொண்டு வந்த அந்த வென்றுவிட்ட நிம்மதி.

 

வார்த்தையில் சொல்ல முடியாத பாரம் அகன்ற சந்தோஷம். மீராகுள், அவளின் தேடல் புரிந்தது.

 

வந்த காரில் அவளை ஏற்றிக்கொண்டு அண்ணன் அண்ணி மற்றும் மீராவை தேடி வந்து நடந்ததை பார்த்து பேசாமல் ஆனந்த கண்ணீருடன்  நின்றிருந்த கிருஷ்ணாவிடமும் விடை பெற்றுகொண்டு கிளம்பினான் இலக்கு இன்றி.

 

மீரா வார்த்தையின்றி அமர்ந்திருந்தாள். ரொம்ப நேர ஓட்டத்தின் பின் கடல் பக்கம் நிறுத்தி நடக்கலாம் என்றான்.மீராவும் இறங்கி அவனுடன் நடந்தாள்.

 

எதிர்பார்த்து கிடைப்பதை விட எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் ஒன்று பொக்கிஷமாகி விடுகிறது. மீரா அவனை மிகவும் நெருங்கி ஒட்டிக்கொண்டு நடந்தாள்.

 

அவளை சீண்டி பார்க்க "கொஞ்சம் தள்ளியே வாம்மா, அப்பறம் நான் எதாவது செய்தால் பிடிக்கல என்று சொல்லிட போற" என்றான்

 

அவள் பிடி இன்னும் இறுகியது. அவள் பார்வை அவனை துளைத்தது. என்ன என்பதுப்போல் பார்த்தான். அவள் ஒன்றும் இல்லை என்பதுப்போல் தலை அசைத்து திருப்பி கொண்டாள்.

 

காற்றில் கூந்தல் அவள் அலைபாய்ந்தது.மஹிக்கு மீராவின் நிலை என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை.

 

அவன் புறம் திரும்பி "எந்த நம்பிக்கையில் என்னை விட்டு போனே? நான் வேற யாராவது கல்யாணம் செய்திருந்தா??"

 

மஹி சிரித்துக்கொண்டே "உன் கோபம் கொடுத்த நம்பிக்கையில் " என்றான்.

அவள் புருவம் சுருக்கவும் " உன் கோபத்தில் மட்டும் நீ மாறாம இருந்த மீரா, அப்போ மட்டும் மஹி என்று சரளமா என் பெயர் வரும்"

 

"அப்படியா????!!!" என்று அவள் குழப்பமாக யோசிக்கவும் 

 

"நீ மஹி என்று என்னை கூப்பிட்ட பின் தான் நான் உரிமை எடுத்துக்கிட்டேன்" என்றான்

 

விளக்கமாக "எல்லாருக்கும் உதவி செய்ற மீராக்கு உதவி வேண்டும்னா மஹிகிட்டே தான் வருவா... அது எவ்வளோ.." என்று அவன் இழுக்கும் வாயை  சட்டென அவள் கையால் மூடி 

 

"போதும் போதும், நான் புரிஞ்சிக்கிட்டேன்" என்றாள் 

 

"எதை??"

 

"என் மனதை...., என் தேடலை..., எனக்கு வேண்டியதை" என்று

 

அவளை மறந்து சொன்னாள் கண்மூடி 

 

மஹி சிரித்துக்கொண்டே கடல் பக்கம் நடந்து காலை நனைத்தான்.

 

“கிருஷ்ணா உன்னை ராட்சசினு சொல்லுவான் எனக்கு நீ எப்பவுமே ரதி தான்” 

 

மீரா வியப்பாக பார்க்க 

 

"இதை இந்த இடத்தில் உன்கிட்டே சொல்லணும் என்று தான் இங்கே கூட்டி வந்தேன்" என்றான் காதல் சொட்ட…

 

கொஞ்ச நேரம் அங்கேயே கழித்து இருவருக்குள்ளும் இருந்த காதலை மௌனமாக பேசினர்.

 

திரும்புகையில் காரில்  மீரா ஏதோ கேட்க தவிப்பது புரிய அவன் திரும்பி பார்க்க குனிந்துக்கொண்டாள்.

 

"என்ன மீரா?? என்ன கேட்கணும்"

 

 மீரா முழிக்க மஹிக்கு சிரிப்பு வந்தது. கிளர்ச்சி கிளம்பியது அவள் செய்கையில்.

 

அவள் பிளாட் வந்ததும் இறங்கியவள் உள்ளே அழைத்தாள்.. உள்ளே சென்று அந்த அறையை பார்க்க "கிளம்பு மஹி,அவ இப்போ தான் இறங்கி வந்திருக்கா" என்றது மனம்.

 

"காபியா டியா மஹி??"

 

"தண்ணி போதும், நான் கிளம்புறேன்" என்றான் அவசரமாக

 

"என்ன ஆச்சு உனக்கு வித்தியாசமா நடந்துக்கிற, நான் காபி நல்லா போடுவேன்" என்று கிட்சனுள் செல்லபோனவளை கை பிடித்து நிறுத்தினான் "என் தோழியும் நீ தான், என் காதலியும் நீ தான், என் மனைவியும் நீ தான்" என்று சொல்லி ஏக்கத்துடன் பார்த்தான்.

 

அவள் அவன் கண்ணத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிசென்று மறைந்தாள்.

 

அங்கே அவனுக்கு கிடைத்த அங்கீகாரம் வாழ்வில் பின் வந்த சோகங்களை சோதனைகளை தடைகளை  தாண்டி வர ஆணி வேரென அமைந்தது.

 

அதற்க்கு பின் அவன் படிப்பு முடிந்து, அவர்களின் இலக்குகளை சேர்ந்தே அடைந்தனர், மீரா அவளின் கண்டுபிடிப்பை நாட்டிற்காக என்று ஒப்படைத்து அந்த பல்கலைகழகத்திலே ஆசிரியராய் பணிபுரிய, வாழ்கையை திருமணத்தில் எல்லாருக்கும் தெரிய பங்கு போட்டுக்கொண்டனர். அவனை பொறுத்த வரை அது அவர்களுக்கு எப்போதோ முடிந்து விட்டது.

 

அதன் அர்த்தமாய்  இதோ வாழ்கையின் இன்னொரு திருப்பம் எதிரில் கைகால்களை உதைத்துக்கொண்டு சிரிக்கிறது. காதல் உந்துகிறது மனித வாழ்வை, வாழ்கை இனிக்கிறது அதன் தள்ளாட்டத்தில்.

நிறைவு பெற்றது!

Go to Ninaikkatha naal illai rathiye 11

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.