Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 32 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
வந்தவர்களும் நாலாபுறமாகத் தேடினார்கள். அவர்கள் கண்ணில் படாமல் இவர்கள் மறைந்துக் கொண்டார்கள்.
இதற்குள்ளே மாலையாகிவிட்டது.
கோயிலுக்குள் நுழைய சம்யுக்தா மறுத்த காரணத்தால், பக்கவாட்டு வழியாக சென்று ஓரிடத்தில் ஒளிந்துக் கொள்ள அவளோ
”இப்படி ஒளிஞ்சி வாழற வாழ்க்கை உனக்குத் தேவையா, நேர்மையா வாழ்ந்திருந்தா இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா உனக்கு”
“பேசாம இரு உன் பேச்சைக் கேட்டு யாராவது வரப் போறாங்க“
”நீ ஒரு கோழை, உன் ஆளுங்க இருக்கறதாலதான் நீ தில்லா இருக்க, அவங்க இல்லைன்னா உன்னால தில்லா இருக்க முடியாது, எப்பவோ எதிரிகளால நீ செத்திருப்ப“
”கோயிலுக்குள்ள என்ன பேச்சு இது, அமைதியா இரு”
“நாம ஒண்ணும் கோயிலுக்குள்ள இல்லை“
”சரி கொஞ்சம் அமைதியா இரும்மா” என கெஞ்ச அவளோ
”நீயெல்லாம் ஒரு ஆம்பளை, அதான் உனக்கு குடும்பமே இல்லை, இப்படியொரு வாழ்க்கை வாழறதுக்கு வாழாம இருக்கலாம், நீ தாதாவாகி யாருக்கு என்ன லாபம், நீ சந்தோஷமா இருக்க அடுத்தவங்களைக் கொல்ற, இதுல உனக்கு என்ன நிம்மதி கிடைக்குதோ, உன்னை விட உன் ஆளுங்களே நல்லவங்க, அவங்க நீ சொல்றதைத்தான் செய்றாங்க, உன்னை காப்பாத்த தன்னை கஷ்டப்படுத்திக்கறாங்க
ஆனா, நீ ஒரு சுயநலவாதி, உனக்காக அடுத்தவங்களை கஷ்டப்படுத்தி பார்க்கற, உன்னால நானும் இப்ப மாட்டிக்கிட்டேன், அவங்க உன்னை கொன்னுடுவாங்க, என்னையும்