சண்டையிடும் அழகையும் ரசித்தார்கள். ஒருவழியாக அனைவரையும் வீழ்த்திவிட்டு ஓய்ந்து போய் நின்னான்.
இதில் சம்யுக்தாவும் வந்து நின்றாள்.
”உன்னால ரோஷப்பட்டு சண்டை போட போனேன் பார்த்தியா, ஒருவேளை நான் செத்திருந்தா என்னாயிருக்கும்“
”சாவு, நீயெல்லாம் வாழனும்னு யார் அழுதா“
”ஏன் நீ அழ மாட்டியா, இன்னும் உனக்கு நான் நியாயம் தரலையே”
”ஒருவேளை நீ சாகறது கூட எனக்கான நியாயமா இருக்கலாம்”
”அதுக்கு நீயே என்னை கொன்னுடேன்“
”முடியாது நீ கெட்டவன்னு இந்த உலகமே தெரிஞ்சிக்கனும்“
”ஓ இதான் நீ கேட்கற நியாயமா“
”இல்லை இது நல்லவங்களுக்காக நான் சொல்ற நியாயம், எனக்கான நியாயத்தை நீதான் முடிவெடுக்கனும்”
”அம்மா தாயே என்னால முடியலை வா கிளம்பலாம் வா” என அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றவன், அங்கிருந்த வண்டியில் ஏறிக் கொண்டு அவளையும் ஏற்றிக் கொண்டான்.
பாட்டியிடம் செல்லாமல் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றான்.
ஓய்ந்து போய் வீட்டுக்குள் நழைந்தான், அவளும் பின்னாடியே வந்தாள். அவனோ உடல் வலியில் தாகம் எடுக்கவே அவளிடம்