(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”சம்யுக்தா தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி கொடும்மா“ என கேட்க அவளோ

   

”நீ ஒரு கெட்டவன், உனக்கு நான் எந்த உதவியும் செய்ய மாட்டேன்“

   

“ரொம்ப தாகமா இருக்கு, உடம்பு வலிக்குது என்னால குனிய முடியலை, அங்கிருக்கு பாரு தண்ணிக்குடம் ஒரு டம்ளர் தண்ணியாவது எடுத்துக் கொடும்மா” என சொல்ல அவளோ

   

”முடியாது உனக்கு நான் நல்லது செஞ்சா, உன் பாவம் எனக்கு ஒட்டிக்கும், உன்னைப் போல நான் பாவியாக மாட்டேன்“

   

”அடம்பிடிக்காத சம்யுக்தா நான் ஒண்ணும் பாவி கிடையாது, தவிச்ச வாய்க்கு தண்ணி கொடு உனக்கு பாவம் வராது புண்ணியம்தான் வரும்”

   

“முதல்ல எனக்கு நியாயம் சொல்லிட்டு, அப்புறம் பாவம் புண்ணியத்தை பத்தி பேசு”

   

”நியாயத்தை கேட்க உனக்கு வேற நேரம் கிடைக்கலையா“

   

”நான் இங்க வந்து எத்தனை நாளாகுது, எனக்கு நியாயம் தராம நீ ஏமாத்திக்கிட்டே இருக்க, இன்னிக்கு நான் விடறதாயில்லை, இப்ப எனக்கு நியாயம் தர முடியுமா முடியாதா”

   

”தண்ணி கொடு சம்யுக்தா, என்னால பேச முடியலை” என கெஞ்ச அவளோ

   

”அதைப்பத்தி எனக்கு கவலையில்லை, உனக்கு உதவி செய்றதே பாவம், அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன்” என்றாள் உறுதியாக அதில் அவனுக்கு கோபமே வந்தது.

   

அமைதியாக சென்று படுக்கையில் படுத்துவிட்டான். கண்கள் மூடினான், உடல்வலியும் அதனால் உண்டான வேதனையை விட இவளால் அதிகமான மன வலி அவனுக்கு ஏற்பட்டது. தான் செய்த பாவம்தான் தன்னை இவள் மூலமாக வாட்டி எடுக்கிறது என நினைத்து உள்ளுக்குள் கலங்கினான் தில்லை. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.