விடமாட்டாங்க, ஏற்கனவே என் வாழ்க்கையை நீ அழிச்ச, இப்ப திரும்பவும் என் வாழ்க்கையோட விளையாடற, இந்த முறை என் வாழ்க்கை நாசமா போச்சின்னா அதுக்கு முழு காரணமும் நீயாதான் இருப்ப” என திட்ட அவனுக்கு கோபமே வந்தது அவளின் மீது அச்சமயம் கோபத்தை காட்ட முடியாமல் எழுந்து சென்றான்
”எங்க போற”
”என்னை ஆம்பளையான்னு கேட்டல்ல பாரு என் வீரத்தை” என சொல்லியபடியே தானாகவே எதிரியின் ஆட்கள் முன்பு சென்றான்.
அதில் சிலர் வேறு பக்கம் தேடிச் சென்றதால், இப்போது கொஞ்சமாக ஆட்கள் இருந்தபடியால் உடலில் தெம்பில்லாமல் போனாலும் மன உறுதியுடன் அவர்களுடன் சண்டையிட்டு வீழ்த்தினான், சிறிது விவேகமாகவும் சண்டையிட்டான். அதில் சிலர் அடிபட்டு சரிந்தனர். இதில் அவனுக்கும் அடி விழுந்தது அதை பொறுத்துக் கொண்டான்.
அந்தச் சமயம் தில்லையின் ஆட்களும் வந்திருந்தார்கள். வந்தவர்கள் எதிரிகளுடன் சண்டை போடாமல் தில்லை போடும் சண்டையை வேடிக்கைப் பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
தில்லையோ அதைக் கண்டு நொந்துப் போனான்.
”டேய் வாங்கடா, வந்து சண்டை போடுங்க“
”அட நீயே போடுண்ணா, எத்தனை முறைதான் நாங்களே சண்டை போடறது, இன்னிக்கு நீ போடற சண்டையை நாங்க பார்க்கறோம்”
”அடேய் என் நிலைமையை புரிஞ்சிக்காம ஆளாளுக்கு பழிவாங்கறீங்களே வாங்கடா” என அழைக்க எதிரியின் ஆட்களும் சத்தம் கேட்டு வந்தார்கள்.
அவர்களுடனும் தில்லையே சண்டையிட்டான், தில்லையின் ஆட்களோ அடிபட்டு கிடந்த ஆட்களை பிடித்து வைத்துக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள், கூடவே அவன்