கூப்பிட்டு அவங்களை கடுப்பேத்துவார்.”
“அது கடுப்பேத்துறது இல்லடி, காதல்!”
“மண்ணாங்கட்டி! இதையே எங்கம்மா செஞ்சா காதல்ன்னு சொல்வீயா?”
“சொல்லாம என்ன? உன் ஃப்ரென்ட்டோட அம்மாவை பத்தி அப்படி தானே எல்லோரும் சொல்றாங்க”
“யாரை சொல்ற? ஓ, ரேவதி ஆன்ட்டியையா! யெஸ் டா... அதுக்காகவே எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்!!!”
“ஹம்ம்ம்ம்... நீ சொல்ல வர நியூஸ் எனக்கும் புரிஞ்சிருச்சு! கவலைப் படாதே நான் உங்கப்பா மாதிரி கடுப்பேத்தாம, அந்த ரேவதி ஆன்ட்டி ஃபேமிலி ஸ்டைலை ஃபாலோ செய்றேன்.”
“இது தான் ஆகாஷ்!!!!! இதுக்கு தான்டா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்!”
“எது இளிச்ச-வாயா இருக்குறதாலேயா?”
“அதுக்கும் கூட... ஆனால் எல்லாரையும் புரிஞ்சு நடந்துக்குற பாரு அதுக்கு தான் ரொம்ப பிடிக்கும்.”
“ஹ்ம்ம்ம்...”
“கவலைப் படாதேடா, உன் நல்ல மனசுக்காகவே உன்னை நான் கண் கலங்காம நல்ல படியா பார்த்துக்குறேன்...”
“ஹேய்...”
“சீரியஸா சொல்றேன் ஆகாஷ். உன்னை முடிஞ்ச அளவு டார்ச்சர் செய்யாம, நல்ல மனைவியா இருக்க ட்ரை செய்றேன்!”