(Reading time: 5 - 10 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

   

அதற்குள் ஜோதி, “அக்ஷ்ரா! உன் கிட்ட என்ன சொன்னேன்? ஆகாஷை நீ வான்னு எல்லாம் சொல்லக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா? ஒழுங்கா நீங்க வாங்கன்னு பேசி பழகு,” என்றாள் கண்டிக்கும் குரலில்.

   

அக்ஷ்ராவின் முகம் அஷ்டக் கோணலாகியது!

   

அவளை பார்க்க ஆகாஷிற்கு பாவமாக இருந்தது.

   

“என்ன ஆன்ட்டி, புதுசா எனக்கு மரியாதை எல்லாம் கொடுக்க சொல்றீங்க. அவளுக்கு என்னோட இப்படி பேசி தானே பழக்கம், அப்படியே இருக்கட்டும்” என்றான்.

   

“அதுக்குள்ளே அவளுக்கு நல்லா ஜிங்-சாங் போடுறீயே கண்ணா,” என சுபாஷினியின் குரல் பக்கத்தில் கேட்டதோ இல்லையோ, அக்ஷ்ரா இவர்கள் இருவர் பக்கம் இருந்து நழுவி, சுபாஷினியின் பக்கத்தில் சென்று நின்றுக் கொண்டே,

   

“ஸ்வீட்ஹார்ட், என் மம்மி அப்படி திட்டுறாங்க, நீங்க ஒன்னும் சொல்லாம இருக்கீங்க,” என்றாள் செல்லம் கொஞ்சும் விதமாக.

   

“அம்மான்னா அப்படி தான் திட்டுவாங்க செல்லம்... இன்னும் ஆறு மாசம் தானே... நீ கண்டுக்காதே,” என்றாள் சுபாஷினி.

   

சுபாஷினியும் மகளும் செல்லம் கொஞ்சுவதை பார்த்து மனம் குளிர்ந்தாலும், “ம்ம்ம்... இப்படி நீ செல்லம் கொஞ்சினா ரொம்ப கஷ்டம் சுபா. அவ உன் தலையில மிளகாய் அறைச்சிடுவா,” என்றாள் ஜோதி

   

“அவளை ஃப்ரீயா விடு ஜோதி. நமக்கு தெரியாதா கல்யாணம், குழந்தைன்னு வந்தா வாழ்க்கை எப்படி மாறி போகும்னு,” என பேசிக் கொண்டு இருந்த சுபாஷினி பேச்சு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.