(Reading time: 5 - 10 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

   

“அப்புறம்?”

   

“அப்புறம்... ரொம்ப பேசிட்டேனா.... கொஞ்சமா பசிக்குது!!!!! நான் buffet சேர்வ் செய்ற இடத்துக்கு தனியா போனா, என் மம்மி காச் மூச் காச் மூச்ன்னு சைனீஸ், ஜப்பானீஸ்ல எல்லாம் திட்டுவாங்க. நீயும் கூட வாயேன்...”

   

“அதானே பார்த்தேன், என்னடா இந்த வாலு போய் இப்படி பொண்ணு மாதிரிலாம் பேசுதேன்னு...”

   

“பொண்ணு மாதிரியா??? அதுக்கு தான் நீ இருக்கீயே! “

   

“ஹோய்!”

   

“என்ன மிரட்டுற? என் ஸ்வீட் ஹார்ட்டை கூப்பிடவா?”

   

“எல்லாம் என் நேரம் தான்!!!! போ, போய் சாப்பிடு!”

   

“நீயும் வா...”

   

ஆகாஷின் கை பிடித்து இழுத்து சென்றாள் அக்ஷரா.

   

ஆகாஷும், அக்ஷராவும் ஒன்றாக கை பிடித்து வருவதை பார்த்த ஜோதியின் முகம் மலர்ந்தது.

   

“அம்மா, ஆகாஷ்க்கு பசிக்குதாம். அவன் இவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டா எல்லோரும் ஏதாவது சொல்வாங்களோன்னு யோசிச்சிட்டு இருக்கான். அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு கையோடு buffet பக்கம் அழைச்சிட்டு வந்தேன்...”

   

அக்ஷ்ரா மூச்சு விடாமல் பேச, ஆகாஷ், ‘அடிப்பாவி நீ இவ்வளோ பெரிய ஃப்ராடா’ என மனதினுள் வியந்தான்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.