Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 45 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தில்லையின் ஆட்களும் அந்த சீப் கெஸ்டை பிடித்துக் கொண்டு வெளியேறி தங்களது வண்டியில் ஏற்றினார்கள், சம்யுக்தாவோ கூடவர அடம்பிடிக்க அவளை இழுத்துக் கொண்டு தனது வண்டியில் ஏறினான் தில்லை.
”அவரை விட்டுடு பாவம்”
”சும்மாயிரு அவனும் கெட்டவன்தான்”
“ஆனாலும் அவர் எங்கப்பாவோட நண்பர்”
”ஒஹோ அப்ப உனக்கு வேண்டப்பட்டவங்க கெட்டவங்களா இருந்தாலும் பாவம் பார்ப்பியா நீ அப்படியே என்னையும் பார்க்கறது“
“செத்தாலும் உன் மேல இரக்கப்படமாட்டேன், அவரை விட்டுடு”
”முடியாது” என சொல்ல முன்னால் இருந்த வண்டியோ புறப்பட்டது, அதைப் பின்தொடர்ந்து தில்லையின் வண்டியும் சென்றது.
முன்னால் இருந்த வண்டியில் உள்ளே ஆட்கள் அந்த சீப் கெஸ்ட்டை மிரட்டி உருட்டி அடித்து என சேகர் இருக்குமிடம் கண்டுபிடித்து அந்த இடத்திற்கு விரைந்தனர்.
வண்டி வேறு பக்கமாக செல்வதை புரிந்துக் கொண்டு தில்லையும் விரைந்தான்.
இதோ அதோ என ஒரு பழைய பாழடைந்த கட்டிடத்திற்கு சென்றார்கள். அதைக் கண்ட சம்யுக்தாவோ
”இந்த இடத்தில எதுவுமே இல்லையே இங்க ஏன் இவ்ளோ பெரிய கட்டிடத்தை கட்டியிருக்காங்க”
“கிரிமினல்ங்க ஒளிஞ்சிக்க வசதியான இடம் இதுதான், இங்க யாரும் இருக்க மாட்டாங்க, போலீஸாலயும் இந்த இடத்திற்கு வர முடியாது, அப்படியே வந்தாலும் தப்பிச்சி போக ஆயிரம்