(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”இங்கதான் யாரும் இல்லையே, என்னை விடுங்க”

   

”ஏன்மா கத்தற, உள்ள இருக்கறவனே வெளிய வந்துடுவான் போல இருக்கே”

   

”வந்தா உனக்குதானே நல்லது”

   

“எத்தனை பேர் வருவானுங்களோ என்னவோ பேசாம வாம்மா” என தைரியமாக அவளை அழைத்துக் கொண்டு உள்ளே முன்னேறினான் தில்லை. ஒரு இடத்தில் இருந்து முனகும் சத்தம் வரவும் தில்லையும் சம்யுக்தாவும் திடுக்கிட்டார்கள் அதிலும் தில்லையோ சம்யுக்தாவிடம்

   

”ஷ் உள்ளதான் ஆளு இருக்கான், அமைதியா இரு” என மெதுவாகச் சொல்ல அவளும் சரியென தலையாட்டினாள்.

   

இருவருமாக முன்னேறி சென்றார்கள், அறை ஒன்றில் இருந்து வந்த ஓசையைக் கேட்டு அதனிடம் சென்றவன் கதவை திறக்க முயன்றான் அது உள்புறமாக சாத்தியிருக்கவும் சாவி துவாரம் வழியாக பார்த்தான். சம்யுக்தாவோ அவனை தடுத்தாள்

   

”இது தப்பு இன்னொருத்தரோட பிரைவசிக்குள்ள நுழையக் கூடாது”

   

”நீ பேசாம இரு அவன் ஒரு கிரிமினல்”

   

”இருக்கட்டுமே அதுக்குன்னு இப்படியா, கதவை தட்டிட்டு உள்ள போ”

   

”அது தப்பு”

   

”லூசா நீ, தப்பான விசயத்தை சரிங்கற, சரியான விசயத்தை தப்புங்கற, உன்னை என்னால புரிஞ்சிக்க முடியலை” என சொல்லியதோடு சம்யுக்தா விடாமல் கதவை வேறு தட்தட்டென தட்டிவிட தில்லையோ நொந்துப் போனான். 

   

ஆனாலும் அந்த அறையின் அருகில் ஒளிந்துக் கொண்டான். கையில் துப்பாக்கியோடு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.