அலார்ட்டாக நின்று காத்திருந்தான். அவனது செயலைக் கண்டு நொந்தப் போனாள் சம்யுக்தா அந்நேரம் கதவு திறக்கவும் அவளின் கவனம் மாறியது. கதவை திறந்துக் கொண்டு ஒரு இளம் வயது ஆண் வெளியேறினான். அதைக் கண்டவள்
”சாரி சாரி” என்றாள் சம்யுக்தா, தில்லையோ உடனே அந்த ஆணை பிடிக்க அவனோ திடுக்கிட்டான் அதைப் பார்த்த சம்யுக்தா
”ஏய் என்ன செய்ற நீ“
”லூசு சம்யுக்தா ,இவன்தான் நாம தேடிவந்த சேகர் பெரிய கிரிமினல்“
”யாரு இவனா பார்க்க ஐடி கம்பெனியில வேலை செய்ற சாப்ட்வேர் இன்ஜினியர் மாதிரியிருக்கானே, இவனா கிரிமினல், என்னால நம்ப முடியலை, பார்க்க நல்லவன் மாதிரியே இருக்கானே” என ஆச்சர்யமாகச் சொல்ல தில்லை வியந்தான்
”ஆமா கிரிமினல்ங்க முக்கால்வாசி இந்த லட்சணத்திலதான் இருப்பாங்க, அப்பதானே யாருக்கும் சந்தேகம் வராது” என சொல்லிவிட்டு சேகரை இழுக்க அவனோ
”யார் நீ, என்னை ஏன் பிடிக்க வர்ற” என கேட்க தில்லையோ சம்யுக்தாவிடம்
”நீ கொஞ்சம் வெளிய இரு நான் இவனை விசாரிக்கனும்” என சொல்ல அதற்கு அவளோ
”முடியாது நானும் இருப்பேன்” என சொல்ல அவனோ அவள் மேல் இருந்த கோபத்தை சேகர் மீது நன்றாக காட்டினான். அவனை அடித்து உதைத்து காயப்படுத்தினான். அதில் அவனோ தப்பி ஓடினான். பின்னாலே தில்லையும் ஓடினான். சம்யுக்தாவோ சேகர் இருந்த அறைக்குள் சென்றாள்.
அங்கு இன்னொருவன் இருப்பதை அறியாமல் போனாள். அவனோ சம்யுக்தாவை பிடிக்க அவளோ ஆஆஆவென அலறினாள். சேகரை துரத்திக் கொண்டுச் சென்ற தில்லையோ சம்யுக்தாவின் அலறலால் தடுமாறினான். சட்டென தனது ஆட்களை உள்ளே வருமாறு விசில் அடித்து சிக்னல் தர அவர்களும் மளமளவென்று உள்ளே வந்தார்கள். அவர்களிடம்