(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

வழியிருக்கு”

   

”ஓ அப்படியா ஆமா நீங்களும் கிரிமினல்தானே, நீங்க மட்டும் அடுக்கமாடி குடியிருப்பில இருக்கீங்க, தப்பாச்சே உங்களை மாதிரி ஆளுங்க இந்த மாதிரி இடத்திலதானே இருக்கனும்”

   

”என்ன நக்கலா, நான் கிரிமினல்தான் ஆனா, நீ நினைக்கற அளவுக்கு பெரிய கிரிமினல் கிடையாது, ஏதோ இந்த ஊரை ஆளனும்ங்கற ஆசையில இங்க இருக்கற ரெளடிகளை கொன்னு விரட்டிக்கிட்டு இருக்கேன்”

   

”ஓ அப்ப இங்க நீங்க தேடி வந்த ஆளும் பெரிய ரௌடியா”

   

”அவன் ரௌடி கிடையாது, மூளைக்காரன்”

   

”ஓஹோ அந்த சேகர் இங்கயா இருக்காரு”

   

”அதென்ன இருக்காருன்னு மரியாதையா சொல்ற, இருக்கான்னு சொல்லு அது போதும், அவன்கூட எத்தனை பேர் இருக்காங்கன்னு வேற தெரியலை, எதுக்கும் நீ என்கூடவே இரு, தனியா போயிடாத உன் உயிருக்கு ஆபத்தாயிடும்” என சொல்ல அவளோ

   

”உன்கூட இருந்தாதான் ஆபத்தே, நீ தனியா போ நான் தனியா போறேன்” என சொல்ல அதற்கு அவனோ

   

”என்னவோ செய்” என சொல்லி முன்னேறினான்.

   

அந்த கட்டிடத்திற்கு முன்னால் தில்லையும் அவனது ஆட்களும் சுற்றி வளைத்துக் கொண்டனர். ஆளுக்கொரு பக்கமாக நின்று கவனமாக இருந்தனர், சம்யுக்தாவோ கட்டிடத்தின் நுழைவு வாயில் வழியாக தைரியமாக உள்ளே செல்வதைக் கண்ட தில்லையோ தலையில் அடித்துக் கொண்டு அவளிடம் சென்று அவளைப் பிடித்தான்

   

”பதுங்கி பதுங்கி போகனும் இப்படியா போவ”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.