(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

  

“சாரிம்மா... வேற எதையோ யோசிச்சுட்டு இருந்தேன்,” என்றான்.

  

“வேற எதையோன்னா ஆஃபிஸ் பத்தி தானே யோசிச்சுட்டு இருந்த? இந்த ஒரு விஷயத்துல மட்டும் அப்படியே உங்க அப்பாவோட டிட்டோ காப்பி நீ,” என்றாள் சுபாஷினி!

  

“என்னப்பா ஆகாஷ் இது, எப்போவும் ஆஃபிஸ் வேலைன்னு யோசிச்சுட்டு இருந்தா எப்படி?” என ஜோதியும் தன் பங்கிற்கு சொன்னாள்.

  

“அம்மா, ஸ்வீட்ஹார்ட், போதும் போதும் ஸ்டாப்! பாவம் அஷ்! ஏன் அவனை இப்படி இரண்டு பேருமா கடுப்பேத்துறீங்க???” என ஆகாஷிற்காக பேசினாள் அக்ஷரா!

  

“அதுக்குள்ளே ஆகாஷுக்கு சப்போர்ட் செஞ்சு பேச ஆரம்பிச்சிட்டீயா நீ?” என ஜோதி மகளிடம் கேட்க,

  

“அம்மா, நான் எப்போவுமே உங்களுக்கு சப்போர்ட் செய்ய மாட்டேன்... அஷ்க்கு ஓகே, என் ஸ்வீட்ஹார்ட்டுக்கும் ஓகே... உங்களுக்கு எப்போவுமே நோ நோ தான்,” என்றாள் அக்ஷரா முகத்தை அஷ்டக்கோணலாக்கி!

  

அதற்கு ஜோதி பதில் சொல்ல அவசியம் இல்லாமல், “அக்ஷ்ரா செல்லம் இதை எல்லாம் நாங்களும் எங்க அம்மா கிட்ட சொன்னவங்க தான்... கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் டெய்லி ஜோதிக்கு ஃபோன் போட்டு புலம்ப போற பாரேன்,” என தன் தோழியை விட்டுக் கொடுக்காமல் சப்போர்ட் செய்தாள் சுபாஷினி!

  

உதட்டை சுளித்த அக்ஷரா, “ஏன் ஸ்வீட் ஹார்ட், நீங்க அவ்வளவு பேட் மாமியாரா இருக்க போறீங்களா?” என்றாள் துடுக்குத்தனத்துடன்!

  

“அக்ஷரா, இப்படி எல்லாம் பேசக் கூடாது! வாயை மூடு!” என உடனடியாக மகளை அதட்டினாள் ஜோதி.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.