“அவ சரியா தானே சொல்றா. ஆமாம் மறுமகளே, கெட் ரெடி... உன் ஸ்வீட் ஹார்ட்டோட இன்னொரு முகத்தை சீக்கிரமே பார்க்க போற,” என பில்ட்-அப் கொடுத்தார் பிரகாஷ்.
“அப்பா, விளையாட்டுக்கு கூட அம்மாவை பத்தி அப்படி சொல்லாதீங்க,” என்றான் ஆகாஷ்.
“அடடா!!!! அதுக்குள்ளே அடுத்த செண்டிமெண்ட் சீனா? வாட் இஸ் திஸ்??? முடியலைப்பா...”
அக்ஷரா கிண்டலாக சொல்லிக் கொண்டிக்கும் போதே வசீகரனின் செல் ஃபோன் ஓசை எழுப்பியது...
பிரபல ஹிந்தி திரைப்படமான தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கி திரைப்படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘துஜே தேக்கா தோ யே ஜானா சனம்’ பாடலின் இசையை ரிங்டோனாக வைத்திருந்தார் வசீகரன்.
அழைப்பது யார் என்பதை பார்த்து விட்டு வசீகரன் அழைப்பை கட் செய்து விட, பிரகாஷ் சுபாஷினியை பார்த்து கண் சிமிட்டிய படி,
“அச்சச்சோ... நல்ல ரிங் டோன் வச்சிருக்கானே! உன் கிட்ட இன்னைக்கு மாட்டிக்க போறானா???” என்றார்.
“அது என்ன ஸ்வீட் ஹார்ட் எனக்கு தெரியாம அங்கிள்க்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம்?”
“எனக்கும் தெரியாதே அது என்னப்பா விஷயம்?” என அக்ஷராவும், ஆகாஷும் ஒன்றாக கேட்டார்கள்.
“பெருசா ஒண்ணுமில்லை,” என்றாள் சுபாஷினி.
இளைய தலைமுறையினர் இருவரும் பிரகாஷ் பக்கமாக பார்க்க, அவர்,
“சுபாக்கு சுத்தமா பிடிக்காத படம் அது,” என்றார்.