(Reading time: 7 - 14 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

சுவாரசியத்துடன் டிவி’யைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

  

செய்தியை அத்துடன் நிறுத்தாமல் சேனை தீவில் இருந்து மக்கள் சிலரின் பேட்டியையும் ஒளிபரப்பினார்கள். ரோஹினி சந்தித்தே இருக்காத பெண்மணி ஒருத்தி கண்ணீருடன் பேசினாள்.

  

“எங்க இளவரசி எங்கே இருந்தாலும் பாதுகாப்பா இருக்காங்கன்னு நம்புறோம்.”

  

இன்னொரு பெரியவர், “செய்தி கேள்வி பட்டதில் இருந்து என்னால சரியா சாப்பிடக் கூட முடியலை,” என்றார்.

  

ரோஹினியின் மனம் குற்ற உணர்வில் குறுகுறுத்தது.

  

“சரியான லூசா இருப்பா போலருக்கு. என்ன வருத்தம் இருந்தா என்ன? ஜாலியா அரண்மனைல இருந்து ரிலாக்ஸ் ஆக வேண்டியது தானே? அந்த அரண்மனையை பார்த்தீயா ரோ, என்ன மாதிரி இருக்கு!!!”

  

விஜய் சாதாரணமாக கேட்கவும், ரோஹினிக்கு அசுவாசமாக இருந்தது.

  

அரண்மனை உடை மற்றும் இளவரசி அலங்காரத்தில் இருந்த தன்னை விஜய்க்கு அடையாளம் தெரியவில்லை என்பது ரோஹினிக்கு புரிந்தது. இளவரசி ரோஹினி என்று பெயரும் சொன்னப் பிறகும் அவனுக்கு புரியாதது அதிசயம் தான்... அவளுக்கு ஹேர்ஸ்டைல் மற்றும் உடை அலங்காரத்தை மாற்றிய சாரதாவிற்கு மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டாள்.

  

ரோஹினியின் மனதில் இருந்த படபடப்பு தானாக குறைய, “அரண்மனையை நேரா பார்த்தா இன்னும் அழகா இருக்கும்... அங்கே இருக்க ஆர்ட்ஸ், வேலைப்பாடுகள் எல்லாமே அருமையா இருக்கும்,” என்று ஈசியாகவே பதில் சொன்னாள்.

  

விஜய் ஆச்சர்யத்துடன் ரோஹினியைப் பார்த்தான். “நீ என்ன நேருல பார்த்த மாதிரி சொல்ற ரோ?”

  

One comment

  • தொடர்ந்து எபி கொடுங்க 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.