வச்சிருக்க! உன்னைப் பத்தி சொல்லு ரோ. உன் வீடு எங்கே இருக்கு? வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க???”
அதிகமாக பேசி விட்டோம் என்பது புரிந்து வார்த்தைகளுக்கு கடிவாளம் இட்ட ரோஹினி, “ப்ச்... அதை பத்தி பேச வேண்டாம்,” என்றாள் மெல்லியக் குரலில்!
“ரோ, நாம இரண்டுப் பேரும் நல்ல ஃப்ரென்ட்ஸ் தானே? என் அண்ணாவை டாக்கில் செய்றது எப்படின்னு கூட உனக்கு சொல்லிக் கொடுத்தேனா இல்லையா? ஆனா நீ என்ன என் கிட்ட உன் ஃபேமிலி பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்குற?”
“அது சொல்ற மாதிரி இல்லை...”
“ஏன் அப்படி?”
“ஏன்னா... ம்ம்ம்... நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்...”
அதிர்ந்துப் போனவனாக, “என்னது??? சொல்லாம கொள்ளாம வந்துட்டீயா??? பாவம் வீட்டுல இருக்கவங்க உன்னை தேட மாட்டாங்க???” என கேள்விகளை அடுக்கினான் விஜய்.
ஏற்கனவே மனதில் இருந்த குற்ற உணர்வுடன் விஜயின் கேள்விகளும் சேர்ந்து ரோஹினியை வாட்டியது.
அவளின் முக மாற்றத்தை கவனித்த விஜய், “ஏன் அப்படி செய்த ரோ?” என மென்மையாக மீண்டும் கேட்டான்.
“எனக்குப் பிடிக்காத கல்யாணத்தை செய்துக்க சொல்லி ரொம்ப டார்ச்சர் செய்தாங்க...”
சரியாக அந்த நேரத்தில் சாரதாவும் அஜயும் ஒன்றாக வீட்டிற்குள் வரவும், விஜய், ரோஹினியின் பேச்சு அத்தோடு நின்றுப் போனது!
ரோஹினி விஜயிடம் சொல்லிக் கொண்டிருந்தது சாரதாவிற்கு கேட்டதோ இல்லையோ
தொடர்ந்து எபி கொடுங்க 🤷🏻♀️ 🤷🏻♀️ 🤷🏻♀️ 🤷🏻♀️