(Reading time: 7 - 14 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

ஒரே ஒரு சின்ன வினாடி தடுமாறிய ரோஹினி, உடனேயே சமாளித்துக் கொண்டு, “ஹ்ம்ம்... நான் அங்கே போயிருக்கேன்,” என்றாள்.

  

அவளின் பதிலை இயல்பாக ஏற்றுக் கொண்டு, “ஓ, ட்ரிப் மாதிரியா போனீயா?” என வினவினான் விஜய்.

  

“ம்ம்ம்ம்... ஆமா...”

  

“அந்த மாதிரி ஒரு அரண்மனைல வாழ்ந்தா வாழ்க்கை எப்படி இருக்கும்ல ரோ!!! பணத்தை பத்தி கவலைப் பட வேண்டாம்.. வேலை செய்ய வேண்டாம்... ஒவ்வொரு வேலையும் செய்ய வேலைக்காரங்க... தினம் தினம் விதம் விதமா சாப்பாடு... பெரிய்ய்ய்ய்ய்ய என்டர்டெயின்மென்ட் சென்டர்... வண்டர்ஃபுல் லைஃப்பா இருக்கும்.”

  

“ப்ச்... அவ்வளவு அருமையா எல்லாம் இருக்காது!! ஒவ்வொரு வினாடியும் நாம என்ன செய்யனும்னு மத்தவங்க சொல்வாங்க. அதை தான் நாம செய்தாகனும். என்ன சாப்பிடனும், என்ன டிரஸ் போடனும்னு இப்படி எல்லாத்தையும் அடுத்தவங்க தான் முடிவு செய்வாங்க... ஆயிரம் ரூல்ஸ் இருக்கும்... ஃப்ரீடமே இருக்காது...”

  

“போ ரோ... அதெல்லாம் ஒரு விஷயமா? இப்படி தினம் தினம் சரியா தூங்காம, வேலை வேலைன்னு எழுந்து ஓட வேண்டாம். ஒவ்வொரு காசையும் யோசிச்சு யோசிச்சு செலவழிக்க வேண்டாம். இந்த மாசம் கிரெடிட் கார்ட் பில் கட்டனும், லோன் ஈஎம்ஐ கட்டணும்னு இம்சை இல்லை...”

  

“அதை எல்லாம் விட சுதந்திரம் முக்கியம் இல்லையா? உங்களோட இந்த வாழ்க்கைல என்ன குறை இருக்கு? நீங்க விரும்பின நேரத்துக்கு சாப்பிடலாம். பிடிச்ச இடத்துக்குப் போகலாம். பிடிச்சவங்களோட டைம் ஸ்பென்ட் செயலாம், பேசலாம்... எல்லா விதத்திலும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாம்...”

  

“அதென்ன நீ என்னமோ இளவரசியா இருந்து வெறுத்துப் போய் வந்த மாதிரி பேசுற? குச்சி ஐஸ் சாப்பிட்டது இல்லைன்னு சொல்லிட்டு அரண்மனை பத்தி எல்லாம் இவ்வளவு தெரிஞ்சு

One comment

  • தொடர்ந்து எபி கொடுங்க 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.