(Reading time: 22 - 44 minutes)

08. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

accident- ஆ!!! யாருக்கு..???. எப்போ..???” ஆருவும் நந்துவும் ஒரே நேரத்தில் பதட்டத்துடன் கேட்க, அனு,

 “கவினுக்கு, இப்போ ஒரு 45 நிமிஷத்துக்கு முன்னாடியாம்... Global Hospital- அ admit ஆயிருக்கானாம். செல்வா phone பண்ணுனான்...”

 குரலில் நடுக்கத்துடன் சொல்ல,அதிர்ந்து போன நந்து

“கவின் எப்படி இருக்கானாம், பெருசா ஒன்னுமில்லையே...??”என்று கேட்க,

 “டூவீலர் இடிச்சு கால்ல fracture ஆயிருச்சுன்னு சொன்னான். Conscious- ஆ தான் இருக்கானாம்... நாம போய் பாத்துட்டு வரலாம் ஆரு...”அனு,

 ஆரு “ இப்போ மணி 3 தானே ஆகுது... 6 மணிக்கு மேல தான் permission கொடுப்பாங்க... நாம 6 மணிக்கு கிளம்பி போய் பாத்துட்டு வரலாம்..” என்றவுடன் மூன்று பேரும் எப்பொழுது மணி 6 ஆகும் என்று கலக்கத்துடன் காத்திருந்தனர்.

 பிறகு வார்டனிடம் permission வாங்கிக் கொண்டு college-க்கு அருகில் இருந்த Global Hospital-க்கு உள்ளே நுழைந்து விசாரித்து, அவன் ரூமை வந்தடைந்து உள்ளே நுழைந்தார்கள். நுழைந்தவர்கள், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

 பின்ன என்ன.., என்னவோ ஏதோ என்று ஓடிவந்தவர்களை வரவேற்றது கவினின் கெக்கே பிக்கே சிரிப்புதான்.

 இடது காலில் பெரிய மாவு கட்டுடன், காலை தலையனை மேல் வைத்திருந்தவன் , இலகுவாக பெட்டில் சாய்ந்து அமர்ந்து, அருண் உரித்து தந்த ஆரஞ்சை விழுங்கிக்கொண்டே, அவன் சொல்வதற்ககு Hospital-ஏ அதிரும் படி சிரித்துக்கொண்டிருந்தான், வேகமாக உள்ளே வந்த அனு, அவன் முதுகில் இரண்டு போடு போட்டு,

 Monkey, Gorilla… ஒரு நிமிஷம் எப்படி ஆடி போய்ட்டோம் தெரியுமா??.. இங்க என்னடான்னா ஏதோ Resort- ல இருக்குரவன் மாதிரி என்ன உபசாரம்... என்ன சந்தோஷம் “என்றபடி மேலும் இரண்டு அடியை வைக்க...

ஆரு “ஏய் அனு அவன விடு... அவனே பாவம் வலில இருப்பான்...” என்று அவளை தடுக்க,

அனு ”யாரு... இவனுக்கா... இவனுக்கெல்லாம் வலிக்கவே வலிக்காது... இப்பவும் எப்படி சிரிக்குது பாரு,,,”என்று கூறவும்,

கவின் “அனு பாப்பா...இதுக்கு தான் தமிழ் நல்லா படிக்கனும்னு சொல்றது...”இடுக்கன் வருங்கால் நகுக”னு... யாரவர்... ஔவையாரோ....பாரதியாரோ சொல்லிருக்காங்க... அதுனாலதான் நகுறேன்...” என்று சொல்ல,

தலையில் அடித்துக்கொண்ட அனு,

“அறிவுக்கொழுந்தே சொன்னது திருவள்ளுவர்... நீ தமிழ் பத்தி பேசுரியா...” என்று சண்டைக்கு வர.

அருண் பொங்கி எழுந்து,

“இங்கே என்ன பட்டிமன்றமா நடக்குது..... மொக்க சாமிங்களா...ஒருத்தன் நைட் பூராம் தூங்காம, நின்னுட்டு இருக்கேன்...”என்று கொதித்துப் போயி இருவரின் சண்டையை நிறுத்தினான்.

நந்து கவினின் கட்டு போட்ட கால்களை மெல்ல தடவியவாரே,

“ரொம்ப வலிக்குதா... கவின்” என்று கேட்கும் போதே அவள் கண்கள் கலங்க, அவளை பார்த்து புன்னகைத்தவன்,

“இல்லடா... hairline fracture தான்... உள்ளே pop  இருக்கிறதுனால்ல குளுகுளுன்னு இருக்கு....” என்றான்.

“இருடி... இப்போதான வச்சிருக்காங்க அதுனால குளுகுளுன்னு இருக்கும்... போக., போக.. நிஜ Monkey மாதிரி சொறியப் போற” என்று அனு கெக்கலிக்க,

“இரக்கமே இல்லாத  ராட்சசி... ஒருத்தன பார்க்க வரப்போ சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரனும்னு தெரியுதா?..., நைட்ல இருந்து ஒன்னுமே சாப்பிடல... போ...போ... ஆரஞ்ச், ஆப்பிள், பீட்சா, பர்கர்னு ஏதாவது வாங்கிட்டு வா...”

“இந்த dialogue  நான் சொல்லனும்டா...” என்று அருண் பரிதாபமாக கூறினான்.

அனு,”டேய் வரப்போ தான மூனு ஆரஞ்ச காலிபண்ண...சரி போனா போகுதுன்னு இப்போ மட்டும் வாங்கித்தர்றேன்....” என்று கிளம்பியவளை,

ஆரு,”நீ இரு அனு, நானும் நந்துவும் போய் வாங்கிவிட்டு வர்றோம்” என்று அனுவை வைத்துவிட்டுச் சென்றனர்.

செல்வா, அருண், நிகிலும் குளித்துவிட்டு வருவதாய் சொல்லிவிட்டு சென்றனர்.

அனு, “எப்படிடா ஆச்சு? வீட்டுக்கு சொல்லிட்டியா?”

கவின், “பைக்காரன் இடிச்சுட்டான்...பைக் கால் மேல விழுந்திருச்சு.... அப்பா வெளியூர் போயிருப்பார்... அம்மா மட்டும் தான் இருப்பாங்க, சொன்னா பயந்துருவாங்க, அதுனால வீட்டுக்கு இன்னும் சொல்லல நைட் சொல்லிக்கலாம் ” என்றான்.

சிறிது நேரம் இப்படியே பேசிக்கொண்டிருந்த போது, வேகமாக உள்ளே நுழைந்த ஜெனி, கவினின் பெரிய கட்டை பார்த்துவிட்டு,

பெரிய fracture-ஆ... ரொம்ப வலிக்குதா?” என்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.