(Reading time: 22 - 44 minutes)

றுநாள் கவினின் அப்பா வந்து, அவனை discharge செய்து அழைத்துச் செல்லும் வரை அனைவரும் கூடவே இருந்தனர். பெண்கள் மட்டும் இரவில் ஹாஸ்ட்லுக்குச் சென்று, காலையில் மீண்டும் வந்தார்கள்.

 நந்துவின் தந்தையே நேரில் வந்து அழைத்துச்செல்வதாய் சொல்லவும், ஆருவும் அனுவும் அவர்கள் கூடவே போவதாய் முடிவு செய்தனர். அதன்படி காரில் பேச்சும் சிரிப்புமாக ஊர் வந்ததே தெரியவில்லை. நந்துவை ஒருவாரம் கழித்து அனுப்புவதாய் பாஸ்கரன் ஒப்புக்கொண்டதும் தான், அவர்களை திருமங்கலத்திற்கு போகவே அனு ஆரு குடும்பத்தினர் அனுமதித்தார்கள், சொன்னது போலவே நந்து ஒரு வாரம் அவர்கள் வீட்டில் வந்து தங்கிச்சென்றாள்.

பஸ்கரனுக்கு தனது மகளிடம் ஏதோ மாற்றம் தெரிவது போல் இருந்தது. இயல்பாகவே பயந்த சுபாவம் உடையவள் ஆதலால் காலேஜ் exam பற்றிய பயமாய் இருக்கும், என்று விசாரித்தவர் மகள் அப்படி எதுமில்லை என்றுவிட்டு அவர் மடியில்  படுத்துக்கொள்ளவும், சற்று கலங்கியவர். உடனே நளினியிடம் பேசியவர், அவர் ஒன்றும் இல்லை எல்லவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாய் சொல்லவும் சற்றே நிம்மதியானார்.

லீவ் முடிவதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் பொழுது தன்னைத் தேடி  வந்த மகள், தயங்கி தன் அருகில் நிற்பதைப் பார்த்த அனுவின் தந்தை, “அட என்ன ஆச்சர்யம்... அனுக்கு என்ன ஆச்சு?”

அவள் முகம் யோசனையுடன் இருக்கவும், என்னடா எதுவாயிருந்தாலும் அப்பாகிட்ட share பண்ணிக்கோ... ஏன் தயங்குற?” என்றார்.

“நாம மாடிக்கு போகலாமாப்பா... உங்ககிட்ட தனியா பேசனும்.” என்றாள். சரி என்று மாடிக்குச்சென்றவர் , அங்கு போட்டிருந்த sofa- வில் அமரவும், அவருக்கு கீழே அமர்ந்து அவர் மடியில் தலை வைத்துக் கொண்டவள், “அப்பா... எனக்கு இது சரியா, தப்பானு  தெரியலப்பா...” என்று ஆரம்பிக்க,

“எதுடா?”

“நான்........ எனக்கு கதிர்மேல...கதிர் என்னோட சீனியர், ரொம்ப பிடிச்சுருக்குப்பா... என்ன யோசிச்சாலும் அவனோட ஞாபகத்துலதான் முடியுதுப்பா.... கண்ண மூடினா அவன் முகம் தான் டக்குனு மனசில வருதுப்பா... its quite disturbing me daddy. இது தான் காதலாப்பா.... இல்ல infactuation- ஆ, லீவ் முடிஞ்சு எப்படா அவன பார்பேன்னு இருக்கு?... என்னப்பா shocking–ஆ இருக்கா?” சற்றே கவலையுடன் கேட்டவளை புன்முறுவளுடன் ஏறிட்டுப் பார்த்தவர்,

 “குட்டிமா.... நீ தனியா வான்னு சொன்னப்பவே இப்டிதான் இருக்கும்னு guess   பண்ணேன் , இது infactuation- ஆ லவ்வான்னு சொல்றதுக்கு, உனக்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் இல்ல வருஷங்கள் தேவைப்படலாம்... இப்போதைக்கு அவன் உன்னை impress  பன்னியிருக்கான், அவ்வளவுதான். அதுக்கு என்ன reason-னு தெரியல. But you have to wait. As a Father,  உனக்கு சில விஷயங்களை நான் புரியவைக்க வேண்டிய நேரம் வந்திருச்சு. அனுக்குட்டி... சில பேர பாக்குறப்போ இவங்களோட இருக்குற நேரம் ரொம்ப சந்தோஷமா இருக்குதேன்னு நினைப்போம். சிலபேரோட மட்டும் தான் ரொம்ப சந்தோஷமா இருக்கமுடியுமுன்னு தோனும். ஆனா யாரோ ஒருத்தரை மட்டும் தான் அவங்க இல்லாம நம்மளால வாழவே முடியாதுன்னு தோனும்..... அப்படி தோனுறவங்கதான் நம்ம life partner- ஆ வர முடியும். So, உனக்கு அந்த மாதிரி எப்ப தோனுதோ அப்ப வந்து அப்பாகிட்ட சொல்லு, மீதியை அப்பா பாத்துக்கிறேன்...”

“நான் தப்பான பையனை choose பண்ணிருவேன்னு பயமாயில்லயாப்பா” என்றாள்

அவளையே பார்த்தவர்,

“உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குடா... ஆனாலும் நீ அத over advantage- ஆ எடுத்துக்கக் கூடாது. காலேஜ்-ல அனுவோட அப்பான்னு நான் பெருமையா சொல்லிக்கற மாதிரி  எல்லா விஷயத்துலையும் நீ நடந்துக்கனும்...”என்றார்,

“கண்டிப்பா...” என்று உருதி கூறியவள், வழக்கமான குறும்பு தலை தூக்க,

“இவ்வளோ dialogue பேசுரதுக்கு ஒழுங்கா படின்னு சொல்லிருக்கலாம்” என்றாள்.

“உங்கிட்ட அத சொல்ல தைரியம் இருந்தா... நான் ஏன் இப்படி சுத்தி வளச்சு சொல்றேன்” என்றார்.

“அப்பா...” என்று கத்தியவளை தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொண்டு சிரித்தவர் கண்களில் கவனம் இருந்தது.

காலேஜில் லீவ் முடிந்து வந்தாலும் வந்தார்கள், பசங்களின் பாசப்பினைப்பில் காலேஜே மூழ்கிப்போனது. ஒரு மாத லீவில் கவினின் கால் முற்றிலிம் குணமாகி, பழையபடி ஆகிவிட்டான்.

“மாப்ள... மச்சான்....” என்று ஸ்லோ மோஷனில் ஓடி வந்து கட்டிக் கொண்டவர்களை, போராடி அனு ஆரு பிரித்துவிட்டார்கள்.

“டேய்...... public, public “ என்று அனு கூற,

“so what… எங்க பாசத்த யாராலையும் அணை போட முடியாதும்மா முடியாது...”என்று சிவாஜி போல் எக்கி எக்கி கூறியவன், “ராஜா அழாதடா...” என்று செல்வாவின் வராத கண்ணீரை துடைத்து, கோட்டைப்பிழிந்து, உதறினான்.

“மாப்ள உன்ன பார்க்காம சோறே இறங்களடா...!” என்று அருண் feelings காட்ட,

“அப்படியா...” என்று அவனை அனைவரும் ஏற இறங்கப் பார்த்தவுடன்,

“அதாவது டிபன், பீட்சா, பர்கரா சாப்பிட்டேன்னு சொன்னேன்.....ஹி..........ஹி...” அவன் சமாளிக்க.

“எங்க.... பீட்சா, பர்கர்.... உங்க கொங்கராயன்பட்டியில..... இருக்கும் இருக்கும்....”

“ஆமா ஜெனி எங்கடா காணோம்” என்று பேச்சை மாற்ற, அருண் கூற,

அவள் தனியாக ஒரு ஓரமாய் நிற்பதைப் பார்த்தவன், அருணைப் பார்த்து,

“மங்குனி அருணாரே... உன்னை வந்து கவனித்துக் கொள்கிறேன்....” என்றுவிட்டு, ஜெனியை நோக்கிச் சென்றவன், திரும்பி அனுவைப் பார்த்து,

 “எஸ்கார்ட்..... ஜான்” என்றான் யாருக்கும் தெரியாமல் உதட்டை மட்டும் அசைத்து,

“மவனே..... மாமி வேலையா பாக்க வக்கிற... போய்த்தொல ஜெனிக்காக பார்க்கிறேன்...” என்று முறைத்தபடியே தலையை உருட்டினாள்.

ஜெனியிடம் சென்றவன், அவன் அவள் அருகில் வரவும் tension ஆவதை உணர்ந்து, “cool...... ஜெ.லோ... இப்ப என்ன ஆயிருச்சு, ஏன் இப்படி tension ஆற..... friends?” என்று கையை நீட்ட, அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“இல்ல, எப்ப நீ வேற மாதிரி நினைச்சியோ... இனிமே என்ன உன்னால ஒரு friend-ஆ மட்டும் பார்க்க முடியாது, அப்படி சொன்னா அது பொய்யா தான் இருக்கும்” என்றாள் தீர்மானமாக,

முகத்தில் புன்னகை விரிய,

“ஏ… ட்யூப் லைட்டு, சீக்கிரம் ஆன் ஆயிருச்சே....நீ இந்தளவு தெளிவா இருந்தாலே போதும்... மீதிய நான் பாத்துக்கிறேன்...” என்றான் இலகுவாக.

“என்ன பாத்துக்கிறேன்..!!!. எங்கப்பாவை அன்னிக்கு பாத்தேல்ல, இன்னிக்கு ஜான் லீவு இல்லைனா நீ இருக்கிற பக்கமே வந்திருக்க மாட்டேன்... இங்கபாரு கவின், எங்கப்பா எந்த காலத்துலையும் இதுக்கு ஒத்துக்க மாட்டார். அதனால மத்ததெல்லாம் மறந்துட்டு ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பார்ப்போம்” என்றாள் சின்ன குழந்தைக்கு விளக்குவதைப் போல,

“அப்போ... இப்ப ப்ரச்சனை உங்க அப்பாதான். உனக்கு ஓ.. கே தான், correct- ஆ?”

“நான் அப்படி சொன்னேனா..?”

“பின்ன... இங்க பாரு, நீ எதையும் இப்போ யோசிக்காத. எப்பவும் போல இரு... நான் உன்ன yes- னு சொல்லுன்னு கட்டாயப் படுத்தல.... no-னு சொல்லாதன்னு மட்டும்தான் சொல்றேன். அதுக்கும் ஒன்னும் அவசரமில்லை. என்னால உனக்கு எப்பவும் ஒரு கஷ்டமும் வராது,வர விடவும் மாட்டேன். எனக்கு எப்பவுமே நீ happy- ஆ இருக்கனும். எனக்காக உன்னோட friends-அ avoid பண்ணாத” என்றுவிட்டு விறுவிறுவென்று சென்றான்.

“நீ இப்படி பேசுவதால் தான் என்னால உன்ன வேண்டாம்னு சொல்லமுடியலை” என்று மனதினுள் நினைத்துக்கொண்டு, அனுவிடம் வந்து சேர்ந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.