(Reading time: 22 - 44 minutes)

ல்லை ஜெ...லோ” என்று சொல்லப்போனவன், அவள் பின்னாடியே அவள் ஜாடையில் ஒருவர் உள்ளே நுழைவதைக் கண்டு, அவள் அம்மாவகத்தான் இருக்கும் என்று எண்ணி,

 ‘னி... ஜெனி” என்றான்.

 அவளுடன் உள்ளே வந்தவரிடம் ஜெனி அனுவை காட்டி,

“இது அனும்மா...” என்றாள். அவரும் அன்புடன் அவள் தோளை அனைத்து,

 “ உன்னப் பத்தி ரொம்ப சொல்லிருக்காடா..... ரொம்ப கலாட்டா பண்ணுவீங்களாம்ல....”என்றபடி கவினைப் பார்த்து,

“இப்போ பரவாயில்லியா,.... சீக்கிரமே சரியாகட்டும்பா, கர்த்தர் அருள்புரிவாராக...” என்றபடி, “நான் கீழ ஒருத்தரை பார்க்கனும் பார்த்துட்டு இருக்கேன், ஜெனி பேசிட்டு கீழ வந்திரு” என்றபடி வெளியேறினார்.

அனு ஆச்சர்யத்துடன் ஜெனியை பார்க்க, ஜெனி,

 “அம்மா ரொம்ப friendly… ஆனா அப்பாக்கு ரொம்ப பயப்படுவாங்க, கீழே அவங்க friend admit ஆயிருக்காங்க.. நீ phone பண்ணோன்ன ரொம்ப பயந்துட்டேன் அனு...” என்று கண் கலங்கினாள்.

“Hey… ஜெ...லோ... அதெல்லாம் மாமாக்கு ஒன்னுமில்ல,... பாரு மீசைல மண்ணே ஒட்டல... இதுக்கெல்லாம் அழுவாங்களா...?” என்று சமாதானப் படுத்த, ஜெனி இன்னும் அழுதுக்கொண்டே இருக்க, அனு “ஏய்... ஒன்னுமில்லடா... பாரு அவனே சிரிச்சுட்டு தான் இருக்கான்.”

இவன் என்னிக்கு வலிக்குதுன்னு சொல்லிருக்கான்.” என்றபடி அவன் கால்களை பார்த்த ஜெனிக்கு கண்களில் பெருகியவண்ணம் இருந்தது,

“அழாத.... please…… அழாத....,” என்றவன், “தயவுசெய்து என் கண்முன்னாடி அழாத... போ.... வெளில போய் அழு...” என்றான் வெடுக்கென்று, ஜெனி அதிர்ச்சியோடு அவனைப் பார்த்து அழுதுகொண்டே வெளியில் செல்ல,

“லூசாடா... நீ.. அவ எவ்ளோ feel  பண்றா... அவள இப்படி திட்டுற” அனு கோபத்துடன் கேட்க.

“பின்ன.... அவ என் கண்முன்னாடி அழுதா கஷ்டமா இருக்குல்ல...”  என்றான்.

“ம்ச்ப்... போடா... அவ hurt  ஆயிட்டா...” என்றாள் வருத்ததுடன்,

“அவ அழுறத என்னால பாத்திட்டு இருக்க முடியாது...” சீரியஸாக சொன்னவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்த அனு, அவன் முகம் தீவிரத்துடன் இருப்பதைப் பார்த்து, குழப்பத்துடன்,

“என்னடா சொல்ற...??”

“ஆமா.... அவ என்னோட உயிர், அவள காலம் முழுதும் சந்தோஷமா வச்சிருக்கனும்னு நினைக்கிறேன். அவ கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரவிடமாட்டேன்...” என்றான்.

“ டேய் சும்மா ஓட்டாத... இத அவ கேட்டான்னா அவளுக்கு heart attack- ஏ வந்திரும்....”

அவளையே ஒரு கனம் அமைதியுடன் பார்த்தவன்,

“உனக்கு புரியல்லியா....? என்னிக்கு அவள முதல் தடவ பார்த்தேனோ அன்னிக்கே அவதான் என்னோட வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன்...” என்றான்.

அவன் முகம் இத்தனை சீரியஸாக இருந்தது அனு பார்த்ததே இல்லை.

“நீ அவள சும்மா கலாய்க்கிறேன்னு நினச்சேன்டா... அப்ப நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்னு சொல்றியா...”

வெறுமனே புன்னகைத்தவனை பார்த்து, இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு அவனை முறைத்தவாரே,

“அதென்ன பார்த்தவுடனே காதல், சும்மா கத விடாதடா... first year-ல  காதல் வருமா,,, லைஃப் பத்தி என்னடா தெரியும் இந்த வயசுல..???” என்றாள்.

“ஏன் அப்ப 2nd- 3rd year- ல வந்தா ஒத்துப்பியா... காதல்னா சும்மா ஒரு வார்த்தை இல்ல, அது ஒரு உணர்வு, அது வர்றதுக்கு maturity தேவையில்ல, கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு தான் maturity வேணும். நான் ஒன்னும் அவள நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லலியே.... அவள பிடிச்சிருக்கு இன்னும் நல்லா புரிஞ்சிக்கனும், அவளோட plus, minus தெரிஞ்சிக்கிறேன்.......”

“எல்லாம் தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்பறமா அவளோட characters  புடிக்கலைன்னா..??”அனு கேட்க,

“எப்படி பிடிக்காம போகும்...காதல்னா ஒருத்தரோட குறை நிறைகளையும் சேர்த்து காதிலிக்கிறதுதான்...” என்றான் கவின்,

“என்னவோ போடா... ஒரே கால்குலேஷன் மாதிரி சொல்ற... இதுக்கு, நல்லா புரிஞ்சிட்டு friends-ஆவே இருக்கலாமே...” என்றாள் அனு,

“friends-க்கு எல்லைகோடு இருக்கு, ஆனா காதலுக்கு அது இல்ல, எவ்ளோ திக் friends- ஆ இருந்தாலும் அது ஒரு எல்லை கோடோட நின்னுடும்,நம்ம பெர்சனல் ஸ்பேஸ்க்குள்ள வரமுடியாது. ஆனா ஒரு காதலியா அவ எனக்குள்ளே எவ்ளோ தூரம் வேணா நிறைஞ்சிக்க முடியும்....சரி விடு...இதெல்லாம் ரூம் போட்டு கத்துக்குடுக்க முடியாது....தானே உணரனும்,ஏன் உனக்கு இந்த மாதிரி எப்பவும் தோனினதே இல்ல....” என்று கேட்க,

அனுவால் இல்லை என்று சொல்ல முடியவில்லை. மனதில் கதிர் தன் குறும்பு சிரிப்புடன் “அப்படியா??” என்றான், உள்ளம் குறுகுறுக்க ,அமைதியானாள். அப்போது வேகமாக உள்ளே வந்த ஜெனி, எதுவுமே பேசாமல் டேபில் மேல் வைத்திருந்த தன் பர்ஸை எடுத்துவிட்டு, விறுவிறுவென்று வெளியேறினாள், கண்களில் கண்ணீர் வழிந்ததற்கான அடையாளம் தெரிந்தது.

அனு அதிர்ச்சியுடன் “டேய்... அவ இங்கதான் இருந்திருக்கா... எல்லாத்தையும் கேட்டிருப்பாடா” என்று பதட்டமாக கூற,

“அவ அப்பவே வந்திட்டா, அவ இருந்தது தெரிஞ்சு தான் பேசினேன், அவளுக்கும் என் மனசுல என்ன இருக்குன்னு தெரியனுமில்ல,” என்றான் முடிவாக.

அனு தயங்கியவாரே, “கவின் ... அவ முடியாதுன்னு சொல்லிட்டா... என்ன பண்ணுவ?”

“கண்டிப்பா முடியாதுன்னு தான் சொல்லுவா.... ஆனா அவள எப்படி சமாளிக்கறதுன்னு எனக்குத்தெரியும்...” என்றான் நம்பிக்கையுடன்,

“அவ அப்பா...??”

“அவர் எல்லா விஷயத்துலையும் நேர்மையா இருக்கனும்னு நினைக்கிறாரு... அவர்கிட்ட நாம நேர்மையா இருந்தாலே அவரை கவர் பண்ணிரலாம்...”என்றான்.

சற்று நேரம் இருவரும் தத்தம் எண்ணங்களில் மூழ்க, இடையில் ஒரு நர்ஸ் வந்து, அனுவிடம் சில medicine வாங்கி வர சொல்லிவிட்டு கட்டை சோதிக்க ஆரம்பித்தார்.

ந்துரு தன் வீட்டில்,

phone- ஐ கட் பண்ணிவிட்டு வந்தவன், நளினியிடம்,

“அம்மு .... junior-க்கு fracture- ஆம் நான் போய் பார்த்துட்டு வரேன்...” என்று கிளம்பியவன், சட்டென்று நின்று நளினியைப் பார்த்து,

“நீயும் வாம்மா... அவனும் உன்ன மாதிரி தான் துறுதுறுன்னு இருப்பான்” என்று அவரையும் அழைக்க

“என்னடா.... ஆச்சர்யமா இருக்கு!!! அவ்ளோ முக்கியமானவனா அவன்?” என்று எண்ணியபடி அவனுடன் சென்றார்.

சந்துருவும் நளினியும் கவினின் அறைக்குள் சென்ற பொழுது அங்கு கவினையும் நர்ஸையும் தவிர வேறு யாரும் இல்லை.

“கவின்...” என்று அழைத்தவாரு உள்ளே நுழைய முற்பட்டவனை தடுத்த நர்ஸ்,

“டூ மினிட்ஸ் dressing முடியுர வரைக்கும் வெயிட் பண்ணுங்க” என்றார், கவினைப் பார்த்தவன் அவன் முகம் வலியில் சுனங்கி இருக்க, திரும்பி தன் தாயுடன் வெளிவராண்டாவில் தன் தாயை அமரவைத்துவிட்டு, சற்று தூரம் நடந்து வராண்டாவின் ஓரத்தில் இருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தான், பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் சுவாரஸ்யம் ஏறியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.