(Reading time: 22 - 44 minutes)

க்டோபரில் எக்ஸாம் ஆரம்பிப்பதால், அனைத்து வகுப்பினரும், theory, practical  என்று பிசியாக இருந்தார்கள்.

இரண்டாம் model exam  முடிந்து , 1st year அனைவரும் லேபின் வெளியில் பேசிக் கொண்டிருந்த போது, வேகமாக ஆருவை நோக்கி வந்த வின்சி, அவளின் கையை பிடித்து இழுத்து அந்த corrider- ன் ஓரத்திற்கு சென்றான்.

பின்னாலயே போகப்போன கவினை, அனு தடுத்து நிறுத்தினாள். தூரத்தில் இருவரும் வாக்குவாதம் செய்வது தெரிந்தாலும் ஒன்றும் கேட்கவில்லை.

தனியாக வந்ததும் அவள் கையை விட்டவன், தன் இருகைகளாலும் தலை முடியை இறுகப் பற்றி சற்று ஆசுவாசமாகி,

“முடியல ஆரு... எதுலையும் concentrate பண்ண முடியல, நரகமா இருக்கு..” வேகத்தோடு பேசியவன், அவள் எனக்கென்னவென்று வேறேங்கேயோ பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து,

“உனக்கு புரியல்லையா... தாங்க முடியல.... கொஞ்ச கொஞ்சமா சாகடிக்கிற ஆரு... இப்படியே போனா ஒன்னுல கூட பாஸ் பண்ண முடியாது....”என்றவன், அப்போதும் அவள் அவனை வெறுப்புடன் பார்ப்பதை பார்த்து,

“இதோ இது தான் இந்த பார்வைதான்...அப்டியே நெஞ்சுக்குள்ள கத்திய விட்ட மாதிரி வலிக்குது ஆரு... செய்யாத தப்புக்காக வெறுக்கப்படுறது எவ்வளவு கொடுமை தெரியுமா...”என்றான் முகத்தில் வலியுடன்,

“என்ன....!!!! நீ தப்பே செய்யலையா..? அதான, உங்கிட்ட இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்...” என்றாள் உதாசீனமாக,

ஒருகனம் கைகளை அழுந்த மூடித்திறந்தவன்,

“அது ஒரு accident  ஆரு... சின்ன வயசிலிருந்து என்ன உனக்கு தெரியும் தான... நீ என்ன புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதானா?”

“என்ன பண்றது... மிருகத்தோட சுயரூபம் நேரம் வர்றப்பதான வெளிய தெரியுது” என்றாள் எகத்தாளமாக,

தன்மானம் சீண்டப்பட்டுவிட,கோபத்தில் சிவந்தவன்,

“என்ன சொன்ன மிருகமா..... உன் பின்னாடி இப்படி நாயா அலயுறேன்ல,அதான் ... இப்ப சொல்றேன் நீ என்னோட  பழைய ஆருவே இல்ல, அவ இப்டி மத்தவங்கள வார்த்தையால குத்தி கிழிக்க மாட்டா ......இவ்வளோ திமிரா இருக்கறவ எனக்குத தேவையே இல்ல போடி...” என்று கையை அவள் முகத்திற்கு நேரே ஆட்டிவிட்டு, பாதியாக இருந்த திண்டை ஏறி குதித்து, லேபை சுற்றி சென்றான்.

கோபமும் அவமானமுமாய் அங்கயே  நின்றவள்,அருகில் வந்த அனுவைக் கோபமாக பார்த்து,

“பார்தியா.... இதுதான் அவனோட உண்மையான character . இவனுக்கு போயி ன நீ  support  பண்றீயே.......!!” என்று விட்டு  hostel-க்கு சென்றாள்.

அனு “ஐய்யோ வின்சி, பிரச்சனையை பெரிசு பண்ணிட்டியே.......இத எப்படி சரி பண்றது” என்று கவலைபட்டாள்.

இரண்டு மாடல் exam-க்கு நடுவில்  college day  இருந்தாலும் ,மக்கள் சளைக்காமல் எல்லா program-மிலும் பங்குபெற்றார்கள். Final year  மட்டும் வர முடியாமல் போனது. அதனால் சம்மந்தபட்டவர்களுக்கு  மட்டும்  program ஏனோ தானோ என்று  இருந்த்து.

யாரையும் எதிர்பார்க்காமல் college day வந்தது , ஆனால் அதற்கு முந்தின இரவு எல்லோரும் அவரவர் practice-ல் இருக்கும்போது ,திடீரென்று  hostel-இல் இருந்து ஒரே சத்தம்.கீழே போய் பார்த்த போது,சுபத்ரா spirit-யை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாள் என்று தெரியவந்தது. நல்ல வேளையாக அவள் குடிப்பதற்கு முன்னரே அவள் ரூம்மேட் அனுமானித்து,அவளிடம் இருந்து பறித்துவிட்டாள். ஆனாலும் அந்த அதிர்ச்சி மறைய நேரமாகியது. சுபத்ராவை கவுன்சிலிங்காக அழைத்துச் சென்றார்கள். இதே பேச்சில் ப்ராக்டிஸ் எல்லாம் பாதியில் நின்று போனது.

றுனாள் நந்துவை தேடி வந்த சந்துரு, அவளை தனியாக அழைத்து பேச முற்படுகையில் ,அங்கு கோபத்துடன் பிரேம் வர,சட்டென்று நந்துவை மறைத்தார்போல் நின்றான் சந்துரு.அதில் இன்னும் கோபமானவன்,

 

“இப்போ உனக்கு சந்தோசமா.....ஏதோ அதிர்ஷ்டத்துல பிழைச்சுட்டா....இப்போ உனக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல” கோபத்துடன் சொன்னவனைப் பார்த்து, நிதானமாக

 

“அவள் குணா மாதிரி சாகலையே, உயிரோடுதான இருக்கா.....” என்றான்.

 

சந்துருவையே கோபத்துடன் பார்த்துவிட்டு வேறெதுவும் பேசமுடியாமல் ப்ரேம் சென்றுவிட்டான்.

ப்ரேம் சென்றவுடன் நந்துவிடம் திரும்பியவன், முதல் முறையாக அவள் முகத்தில் கோபத்தை கண்டான். அவன் அழைக்க திரும்பி பார்க்காமல் தன்னுடைய friends-டன் வந்து நின்று கொண்டாள். அவளையே கூர்ந்தவன்,அதன்பிறகு அவளுடன் சந்திக்க முயலவில்லை.அவர்களுக்குள் ஒரு பனிப்போர் மூண்டது.

ஒவ்வொருக்கும் இருந்த தனிப்பட்ட பிரச்சனையால் காலேஜ் டே கடைமையே என்று முடிந்தது.

மூன்றாம் மாடல்  exam முடிந்ததும் அனைவருக்கும் தேர்வு ஜூரம் பிடித்துக் கொண்டது. எதற்காக படித்தார்களோ இல்லையோ, ஒரு பேப்பர் போனால் கூட ,ஆறு மாதம் பின்தங்கிவிடக் கூடிய “break system”  என்பதால் ,தன் friends-யை இழந்துவிடக்கூடும் என்பதால் கவனத்துடன் படித்தனர். அதிலும் கவின் அண்ட் கோ ,விழுந்து விழுந்து ,உருண்டு உருண்டு படித்ததாக சொல்லப்பட்டது .அவர்கள் hall- ticket  வாங்க வந்த அழகே அழகு. தாடியெல்லாம் (shave பண்ணக் கூட நேரமில்லாமல் படிக்கிறார்களாம்.)வைத்து பழுத்த பழம் போல் நெற்றி முழுவதும் பட்டை போட்டு , hall- ticket வினியோகித்த A.O வின் காலில் விழுந்து ஆசிவாங்கிக் கொண்டனர்.

சரசர வென்று நாட்கள் ஓடியதே தெரியவில்லை. Exam  முடிந்து,ரிசல்டும் வந்து ,லீவும் முடிந்து, இதோ நந்து மற்றும் friends அனைவரும் second year-யில் காலடி எடுத்து வைத்துவிட்டனர். படிப்பில் சற்று மிரலும் செல்வாவையும் எப்படியோ மிரட்டி உருட்டி படிக்கவைத்து தங்கள் கூடவே வரவைத்துவிட்டார்கள் கவின் அண்ட் கோ.

பழைய  house surgeons பிரியா விடை பெற்றுப்போக ,புதிதாக சந்துருவின் பேட்ச் house  surgeons ஆனார்கள்.

சந்தோமாய் பேசி சிரித்துக் கொண்டு,முதல் நாள் class க்கு செல்வதற்கு காத்துகொண்டிருந்தவர்களின் கண் முன்னாடியே அந்த கொடூரம் அரங்கேறியது....

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 07

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 09

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.