(Reading time: 22 - 44 minutes)

தூரத்தில் நந்து, ஆருவுடன் பேசியபடி கையில் பழங்கள் அடங்கிய கவருடன் வந்து கொண்டிருந்தாள். அவசரத்தில் கிளம்பியவள் என்று பார்த்தாலே தெரிந்தது. ஆனால், அந்த எளிமை கூட அவளை அழகாய் காட்டியது. அவன் மனது மயங்கியது.அவளைப் பார்த்தவாரே ஜன்னலில் சாய்ந்தவன் முகத்தில் மெல்லிய முறுவல் மலர்ந்தது, இவள் நம் வாழ்க்கையில் இன்றியமையாதவள் என்று அவன் மனதில் நிச்சயமானது. திரும்பி தன் அம்மாவிடம் சென்றவன் அவரை அழைத்து வந்து, ஜன்னலின் வழியே வெளியே காட்டி,

 “யாரு யாருன்னு கேட்டியே... இவதான் என் தேவதை” என்று கூறினான்,

ஆவலும் பயமுமாய் எட்டிப்பார்த்தவர், நந்துவும் ஆருவும் வருவதைப் பார்த்து ஒரு கணம் திகைத்து, பின் இன்ப அதிர்ச்சிக்குள்ளானார், முழு மகிழ்ச்சி அடையமுடியாமல் மனம் “ ஆருவாய் இருக்குமோ...?” என்று பதற,

“டேய் எந்த பொண்ணுடா...??” என்று அவசராமாக கேட்க,

“ஓ ரெண்டு பேர் இருக்காங்கள்ள, (அடப்பாவி....உன் கண்ணுக்கு ஆரு தெரியவே இல்லையா??) அதோ அந்த white chudi போட்டிருக்காளே.... அவதான்” என்றுவிட்டு, திரும்பி நின்று பேண்ட் பாக்கெட்டிற்குள் கைவிட்டபடி, ஒரு பெருமூச்சு விட்டான்.” “நந்திதா... என்னோட தேவதை” என்றான்.

(ம்க்கும்..... இப்போ நல்லா பேர சொல்லு)

இங்கு நளினுக்கு நம்பவே முடியவில்லை. இப்படி இருக்கும் என்று தான் ஏன் நினைத்துக்கூட பார்க்கவில்லை, அவரைப்  பிடிக்க முடியவில்லை, பின்னால் வெள்ளை உடையணிந்த சிறகு வைத்த தேவதைகளுடன், “நம்தன நம்தன” என்று பாட்டு பாடிக் கொண்டிருந்தார். இவ்வளவு நாள் மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரம் எல்லாம் இறங்கிப் போய் மனது T.R. ரேஞ்சுக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது, மனதிற்குள்ளேயே

“முருகா நீ ரொம்ப கிரேட்... உன் கணக்கே கணக்கு, கண்டிப்பா உனக்கு நேர்த்திகடனை செலுத்திறேன். என் செல்லம், புஜ்ஜீ என்று முருகனைக் கொஞ்ச, மேல வள்ளியும் தெய்வானையும் முருகனை ஒரு மாதிரிப் பார்த்தார்கள்.’ நல்லது பண்ணாலும் நம்மல வம்புல மாட்டிவிடுறாங்களே’ என்று முருகனை புலம்ப வைத்தார்.

தன் தாயிடம் இருந்து சத்தம் வராமல் போகவும், திரும்பிப் பார்த்தவன், அவர் ஏதோ பரவச நிலையில் இருப்பதைக் கண்டு, “அம்மா..... என்னாச்சு??”

“ஆமா... நிஜமாவே தேவதைதாண்டா... நீ முடிவே பண்ணிட்டியா....?” என்றார்

“ஆமா.... அவதான் என் மனசு பூராம் நிறஞ்சிருக்கா... ஆனா அவள நெருங்க முடியாம ஏதோ தடுக்குது,,, ஏதோ guilty feeling- ஆ இருக்குமா...” என்றான்,

சற்று யோசித்தவர்...

“அவ O.K  சொல்லிட்டாளா...???”

“இல்ல...ஆனா, கண்டிப்பா O.K தான். அவ கண்ணுலையே காதல் தெரியுதும்மா... என்னால தான் அவள நெருங்க முடியல”,

“என்னடா..இருக்கு ஆனா இல்லன்ற மாதிரி சொல்ற, பார்த்துடா ரொம்ப சின்ன பொண்ணா தெரியுறா, ஸ்டடீஸ டிஸ்டர்ப் பண்ணிட்டாத...”

அவரையே கூர்ந்து பார்த்தவன்,

“என்னை பத்தி தெரியாதா... எதுக்கு important-னு தெரியும்மா... ஆனா உனக்கு எப்படி அவ first year தான்னு தெரியும்???”

“அது....உன்னோட ஜுனியரை பாக்க வந்தா அவளும் ஜுனியராத் தான இருக்கணும்” என்றார்.

பிறகு நந்துவும், ஆருவும் hospital- க்குள் நுழைவதைப் பார்த்தவர், ‘நந்து தன்னைப் பார்த்துவிட்டால், இருவருக்கும் அவர்களுடைய உறவு தெரிந்து விடும். எதுவாயிருந்தாளும், அவர்கள் அவர்களாகவே தங்களை புரிந்துக் கொள்ளட்டும். இதில் இடையில் உறவு வந்து எந்த உரிமையையோ கட்டாயத்தையோ தர வேண்டாம்’ என நினைத்தவர், சந்துருவிடம்,

“அப்பா லன்ச்க்கு சீக்கிரம் வந்திருவாராம்... இப்போ தான் ஞாபகம் வந்துச்சு, வா கவினை சீக்கிரம் பார்த்துவிட்டு போகலாம்” என்று அவனை இழுத்துக் கொண்டு கவின் அறைக்குள் சென்றார். அங்க கவின் கண் மூடி படுத்திருக்க, நர்ஸ் ஏதோ எழுதிக்கொண்டிருந்தவர், இவர்களை திரும்பிப் பார்த்து,

 ”சும்மா தான் படுத்திருக்கிறார், வந்து பார்க்கலாம்” என்றார்.

கண்களை திறந்து பார்த்த கவின், சந்துருவைப் பார்த்து முகம் மலர “சார்.... வாங்க.. வாங்க” என்றவன் பின்னாடி வந்த நளினியை பார்த்து முழிக்க,

“என்னோட அம்மா....” என்றவுடன் 

“வணக்கம்மா...” என்று பவ்யமாய் கரம் குவிக்க,

(டேய் அவ்ளோ நல்லவனாடா நீயி...)

நளினி கையை நீட்டி, “ Hai.... dude....... “ என்றார்,

சந்துரு சிரிக்க, கவின் அவர் கையை பிடித்துக்குலுக்கினான். தன் கையில் இருந்த பழங்களை டேபிளில் வைத்தவர்,

 “வலியேதும் இல்லையே...??, இதுதான் சாக்கு உன் friend- ஐ எல்லாம் நல்லா வேலை வாங்கிக்கோ...” என்று வேறு எடுத்துக்கொடுத்தார்.

அதற்குள் report-ஐ அடுத்து வாசித்த சந்துரு,

“ஒன்னுமில்லடா, hairline fracture தான் 25 days-ல கட்டு பிரிச்சுறலாம்... நீ எப்படி ஊருக்கு போவ, car வேனா arrange பண்ணவா...” என்று கேட்க,

“இல்ல சார், அப்பா நாளைக்கு காரோடுதான் வர்றார். நாளைக்கே ஊருக்கு போயிடுவேன்...” என்றவன் நந்துவைப் பற்றி கேட்க நினைத்து நளினியைப் பார்த்து தயங்க,

“கவலப்படாத கவின்... இவன் திரும்ப ஈவினிங் வந்து பார்ப்பான். இப்போ இவங்க அப்பா வெயிட் பண்ணுவார்... உன்னோட friends வந்திட்டு இருக்காங்க...” என்றார்,

“என்னடா தனியாவா இருக்க?...”என்று கேட்க,

“இல்ல சார், அனு இங்கதான் இருந்தா... medicines வாங்கப் போயிருக்கா... இப்போ வந்திருவா” என்றான்.

“கிளம்பளாமா?” என்று நளினி சந்துருவை கேட்க, அவன் ஒரு நிமிடம் தயங்கினான், நந்துவை அருகில் ஒருமுறை பார்த்துவிட்டு செல்லலாமா என்று நினைத்தவன்... மறுகணம் அனைவர் முன்னாடி தன் பலவீனத்தைக் காட்ட வேண்டாம் என்று முடிவு செய்து,

“போகலாம்” என்றான்.(சரியான ஈகோ பார்ட்டி).

கவினிடம் விடை பெற்று சென்ற சிறிது நேரத்தில் ஆருவும், நந்துவும் உள்ளே நுழைந்தனர். அனுவும் அவர்களுடன் சேர்ந்தே வந்தாள்.

டேபிளில் ஏற்கனவே பழங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு, “ஃப்ரூட்ஸ் இருக்கே... யாருடா வந்தா?” என்று அனு கேட்க

நந்துவைப் பார்த்துக்கொண்டே,

“சந்துரு சாரும் அவங்க அம்மாவும் வந்திருந்தாங்க...” என்றான். நந்து கண்களால் அங்கும் இங்கும் தேடுவதைக் கண்டு,

“ஏதோ அவசர வேலை இருக்குன்னு உடனே கிளம்பிப் போயிட்டாங்க...” என்றான்... நந்து உதட்டை கடித்தபடி தலை குனிந்தாள்.

சிரிது நேரத்தில் செல்வா, அருண், நிகிலும் வந்துவிட, ரூமே கலை கட்டியது. இடையில் வந்து திட்டிய நர்ஸை அவர்கள் கண்டுக்கொள்ளவே இல்ல. கத்தி கத்தி தொண்டை தண்ணீர் வரண்டு அவருக்கே trips ஏத்த வேண்டியதாயிற்று. முடிவில் டாக்டர் வந்து இரண்டு பேர் மட்டும் உள்ளே இருங்கள், மற்றவர் வெளியில் இருங்கள் என்று விரட்ட ஒரு வழியாய் சத்தம் கொஞ்சம் குறைந்தது. (கொஞ்சமே கொஞ்சம் குறைந்தது)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.