(Reading time: 32 - 63 minutes)

பாட்டி சொல்லிக் கொடுத்தாங்களே!”, பெருமையாக சொன்னாள் மது. அவர்கள் அருகில் இருக்கும் சுவரில் சாய்ந்தவாறு.

“கார்த்திக்குக்கும் பாட்டி தான் சொல்லிக் குடுத்தாங்களா?”, கேட்டது சந்தியா, எல்லா பாத்திரங்களையும் விளக்கி முடித்திருந்தாள்.

“இல்ல. அவனா இண்டரஸ்ட் எடுத்து பண்ணுவான். அவன்கிட்ட உள்ள நல்ல பழக்கம் அவன் தேவையை அவனே பாத்துப்பான். பிச்ன்ஸ்ல கூட  என் வேலையை என்னால மேனேஜ் பண்ண முடியாட்டி நான் அதை செய்ய தகுதி இல்லாதவன் சொல்லுட்டு செகரட்டரி கூட வைச்சுக்க மாட்டான்...டைம் மேனேஜ்மெண்ட்ல கில்லாடி”, கார்த்திக்கின் புகழ் பாடினாள் மது.

“செக்ரட்டரியை வைச்சு ஒழுங்கா  வேலை வாங்க தெரியலை. அதுக்கு சாக்கு. உங்க காதி பீயுப்புள் மேனேஜ்மெண்ட்ல  சோப்ளாங்கி ”, வழக்கம் போல குறை கூறிக் கொண்டே  கையை சிங்கில் கழுவி விட்டு, சற்று தள்ளி காயப்போட்டிருந்த கொடியில் இருந்த துண்டை எடுத்து கையை துடைத்தாள்.

“ஏய், உன்னை வைச்சே வேலை வாங்குறாராரே கில்லாடி கார்த்திக்கா தான்  இருக்கணும்” சக்தி சந்தியாவை வார,

“சக்கு உன் டாக் டைம் லிமிட் தாண்டி போயிடுச்சு. கூடிய சீக்கிரம் வெயிட்டா ரீசார்ஜ் பண்ணனும். பேசாம உன் ருக்குமணி ருக்குமணி ல

…ஒஹ...ஹஹோ….ஒஹஹஹோ….ஒஹஹஹோ (ஹம்மிங்கை பாடிக் காட்டினாள் சந்தியா)

பாடிட வேண்டியது தான். எனக்கு என்ன கவலைன்னா எந்த தப்பும் செய்யாத நேர்மையான போலீஸ் அதிகாரியும்  இதுல தண்டிக்க படுவாரேன்னு தான்” என  வருத்தப் படுவது போல பாவ்லா செய்தாள் சந்தியா, மதுவின் அருகில் வந்து நின்ற படி.

அதைக் கேட்ட சக்தி, “அவருக்காக கவலைப்படாதடி. நான் உன்னை பத்தி சொல்லி வைச்சிட்டேன். அவர் சமாளிச்சிடுவார். எங்க ருக்குமணி க்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு  இருக்கும். ”, அலட்சியமாய் சொன்னாள் பாத்திரங்களை கழுவிய படி.

“ ஹா….ஹா...பாக்கலாம்”, வில்லத்தனாமாக சிரித்தாள் சந்தியா.

மதுவுக்கு இருவரும் பேசுவது புரியவில்லை. “ருக்குமணியா அப்படின்னா??”

“அதுக்கு விளக்கம் இப்போ பப்ளிக்கா சொல்ல முடியாது. நைட் சொல்றேன்.“ மதுவிடம் ரகசியமாக சொன்னாள் சந்தியா.

“நைட்ன்னா? நான் வீட்டுக்கு போயிடுவேனே?”, மது

“இங்க தான் மது தூங்கப்போற. நான் ஆண்ட்டிகிட்ட பேசிட்டேன்.”, என்றாள் சந்தியா.

ஒரு நொடி அதிர்ந்த மது, தோழிகளுடன் இரவை கழிக்க விரும்பினாலும் தனக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட, “அது….அது…..நான் வீட்டுக்கே கிளம்புறேன் சந்தியா ப்ளீஸ்” என்றாள் தயங்கிய படி..

“ஏன் ”  கேட்டாள் சந்தியா.

“பாட்டி புடவை  எடுத்துட்டு வரலை சந்தியா. நான், நாளைக்கு ஸ்லீப் ஓவர் போடுறேன் “ தயக்கத்துடன் சொன்னாள்.

அதை கவனித்த சந்தியா “பாட்டி புடவை இல்லைன்னா தூக்கம் வராதா? பச்ச பிள்ளை மாதிரி பேசுற? சும்மா எந்த நேரமும் பாட்டி பாட்டின்னு.” சற்று  அதட்டலாக கேட்டாள் சந்தியா.

அவள் கேட்டது தான் தாமதம். மதுவின் கண்கள் குளம் கட்டியது.

“அய்யோ….சாரி மது. உனக்கு பாட்டின்னா அவ்வளவு இஷ்டமா?” மென்மையாக கேட்டாள் சந்தியா.

“ம்ம்…” கைகை கட்டி சுவரில் சாய்ந்தவள்  தலையாட்டி விட்டு தலையையும் சுவரில் சாய்த்தாள். மதுவின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் விழி வரையில் மதில் மேல் பூனையாக குதிக்கவா வேண்டாமாவென யோசனை செய்தது.

வேலையை முடித்துவிட்டு கையை துண்டில்  துடைத்துக் கொண்டே அந்த நேரம் அவளருகில் வந்த சக்தி, “ஏன்டி ஜந்து அவளை ஹர்ட் பண்ண. அவளுக்கு பாட்டி சேலையில் ஏதாவது சென்டிமென்ட் இருக்கும்.” என்று சந்தியாவை அதட்டினாள் சக்தி.  அப்போது பொல பொலவென கண்ணீர் வடித்தாள் மது.

மது அழுகை சந்தியாவின் மனதை பிசைய, “ப்ளீஸ் அழாத மது. நான் உன்னை ஹர்ட் பண்ணனும்ன்னு நினைக்கலை. யு ஆர் மை பெஸ்ட் பிரண்ட். உன் மேல உள்ள அக்கறைல தான் சொன்னேன். சாரி”

“தாட்ஸ் ஓகே சந்தியா. நீ சொன்னதும் பாட்டி நியாபகம் வந்திருச்சு” சொல்லிவிட்டு கண்களை துடித்த மதுவிற்கு சிறு வயது நினைவுகள் மனதிற்குள் அவிழ்ந்தது,

“எங்க பாட்டி, தாத்தாவுக்கு நான் தான் பெட். சின்ன வயசுல பாட்டி தாத்தாக்கு நடுவுல, தாத்தா மேல காலை போட்டு பாட்டி சேலையை பிடிச்சுகிட்டே தான் தூங்குவேன்.  தாத்தா ஊருக்கு போனா, என்  காலுக்கு தலைகாணி வைச்சிட்டு போவாங்க. அப்படி தான், ஐந்தாவது ஆனுவல் சயன்ஸ் எக்ஸாம்க்கு படிச்சிட்டு படுக்க வந்தப்போ  காலுக்கு தலைகாணி வைத்துட்டு கன்னத்தில கிஸ் பண்ணிட்டு ஊருக்கு போனாங்க...அப்போ  எனக்கு தெரியாது அது தான் என் தாத்தா கொடுத்த கடைசி முத்தம்ன்னு”  குரல் கம்மி அழுகை வர, அவளை அணைத்து, மென்மையாக தட்டி கொடுத்த சந்தியா,

“அவங்க போய் எத்தனை வருஷமாச்சு இன்னும் ஏன் அழணும்.” இதமாக சொன்னாள்.

“தாத்தாவை நினைச்சாலே, கடைசி முத்தம் கன்னத்தில் இன்னும் இருக்கிற மாதிரியே ஒரு பீலிங் வரும்”, கேவலுடன் சொன்னாள்.

“உங்க தாத்தா அப்படி, எங்க தாத்தா எங்களை அவர் முகத்தில கூட முழிக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு மது. அவங்களுக்கு பொம்பளை பிள்ளைங்களே ஆகாது. என்னை கள்ளிப் பாலை ஊத்தி சாகடிக்கலைன்னு எங்கப்பா கூட அவர் சாகுற வரைக்கும் பேசலை.  உனக்கு இவ்வளோ பாசமான தாத்தா கிடைச்சதுக்கு சந்தோஷம் தான் படணும். அழக் கூடாது“, தனது குடும்ப விஷயத்தை பகிர்ந்து  மதுவை ஆறுதல் படுத்தினாள். பின்,

“பாட்டி சேலையை  பிடிச்சிட்டு தூங்குறது உனக்கு சின்ன வயசு  பழக்கமா?” கேட்டாள் சந்தியா.

“ஆமா…. தாத்தா இறந்ததுக்கு அப்புறம் என்னை விட்டு பாட்டியால பிரிஞ்சு இருக்க முடியாது. என்னால பாட்டியை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது. நான் காலேஜ் பைனல் இயர் படிக்கிறப்போ, இந்த ஊரிலே ஒரு  நல்ல வரன் வர, என்னை உள்ளூரிலே கல்யாணம் பண்ணி கொடுத்தா பக்கத்திலே வைச்சு பாக்கலாம்ன்னு பாட்டி அத்தையை கல்யாண ஏற்பாடு பண்ண சொன்னாங்க. கல்யாணம் முடிச்சு பாட்டி வீட்டை விட்டு போகப்போறோம்ன்னு தெரிஞ்சவுடனே மனசுக்குள்ள சின்ன வயசுல இருந்த பயம் மறுபடியும் வர ஆரம்பிச்சிடுச்சு. “

“டெல்லியில் இருந்து பாட்டி வீட்டுக்கு வந்த புதுசுல எத்தனை நாள் நடுராத்திரி திடுக்குன்னு பயந்து எந்திரிப்பேன் தெரியுமா….இப்போ அதெல்லாம் மறந்துடுச்சு, மறந்தாலும்….ஒன்னு மட்டும், அதை சொல்லும் போதே மதுவின் உடல் நடுக்கத்தில் சிலிர்த்தது. அவளை மீண்டும் தன்னுடன் அணைத்து, “பயப்படாம சொல்லு  மது. அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் தான.” அவளை மேலும் சொல்ல தூண்டினாள்.

“ஒரு ராத்திரி நான் நல்லா தூங்கிகிட்டு இருக்கிறப்போ  திடீர்ன்னு என் மேல கட்டையால சுளீர் சுளீர்ன்னு…கைல முதுகுல கால்லன்னு அடுத்து அடுத்து அடி.. பயங்கரமா வலில  அலறிட்டேன்  சந்தியா.”  என்றவளின்  கண்ணீரில் குரலும் கரைந்து ஒரு நொடி பேசாமல் மவுனித்த பொழுது,

பிஞ்சு மேனி அடி பொறுக்க முடியாமல்  நெளிந்து கதறியது மனதில் படமாக ஓடியது

...அய்யோ...ஆஆஆ அம்மா...அம்மா….”

“வலிக்குது…. மம்மி ப்ளீஸ்...நோ மம்மி...ப்ளீஸ் மம்மி...ப்ளீஸ் மம்மி“

மனதில் ஓடும் படம் வாய் வழியே கதறலுடன் வந்தது. “ப்ளீஸ் மம்மி ப்ளீஸ் மம்மி...ப்ளீஸ்”, மீண்டும் மீண்டும் சொல்லிய வண்ணம்  சத்தம் போட்டு அழுது சாய்ந்திருந்த சந்தியாவின் தோளை கண்ணீரால் நனைத்தாள்.

அழுகை சற்று அடங்கியதும், கேவலுடன், நடுங்கிய குரலில், “ஆனா அம்மா…அம்மா…”, சொல்லி விட்டு ஏங்கியவாறு “அடிக்கறதை நிறுத்தவே இல்லை…“ அதைக் கேட்டு   சக்தியும் அழுது விட்டாள்.

“போதும் ஜந்து. கேக்கவே கஷ்டமா இருக்கு.” அழுது கொண்டே சக்தி சொல்ல,

“கேக்குறது கஷ்டமாயிருக்குன்னும்,  இவளை அழாம பாத்துக்கணும்ன்னும்   அவகிட்ட யாரும் இத்தனை வருஷமா இதை பத்தி பேசவேயில்லை. அவ நம்மகிட்டயாவது ஷேர் பண்ணட்டும் விடு” என்று சக்தியிடம் சொல்லிவிட்டு, அவள் தலையை கோதிய படி, “கல்யாணத்தை பத்தி பேசுன பிறகு மறுபடியும் இந்த பயம் வந்துடுச்சா?”, கரிசனத்துடன் கேட்டவாறு அவளை மேலும் சொல்ல தூண்டினாள்.

“அது பயமா...என்னன்னு சரியா சொல்ல தெரியலை. ஆனா திடீர்ன்னு ஒருத்தர் கூட வாழ்க்கை முழுதும் வாழ நான் தயாராயில்லை. பாட்டிகிட்ட சொன்னேன், பாட்டி கல்யாணம் ஆனா எல்லா பொண்ணுங்களும் மாறிடுவாங்க. நீயும் மாறிடுவன்னு சொல்லிட்டாங்க. எனக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்ன்னு பாட்டிக்கு ஆசை. அவங்க ஹார்ட் பேஷன்ட் வேற. வேண்டான்னு சொன்னா அழுது புலம்புவாங்க. என்னால பாட்டி ஆசையை தடுக்க முடியலை. அதே நேரம் அந்த பயம் மனசை அரிச்சுகிட்டே இருந்தது. ராத்திரி எல்லாம் தூங்க முடியாது. எனக்கு நிச்சயம் பண்ண அன்னைக்கு அந்த மாப்பிள்ளை மேல என நம்பிக்கையே வரலை. அவன் கூட தனியா வாழ்றதை என்னால நினைச்சே பாக்க முடியலை. அப்பா இப்படி தான என்னை டெல்லிக்கு  கூட்டிகிட்டு போனார். எனக்கு என்ன ஆச்சு? மறுபடியும் நரக வேதனையா?. பகல்ல எல்லாரும் இருக்கிறப்போ அந்த பயம் வராது. ஆனா ராத்திரி….சாகணும்ன்னு ஒரு உணர்வு வந்துகிட்டே இருக்கும். உலகத்தை விட்டே போயிட்டா இந்த கல்யாணம், அதுனால வர்ற பயம் எல்லாமே போயிடும்ன்னு அசட்டுதனமா ….” என்றவள் விழிகள் மீண்டும் ஈரமாக, “ஆனா நான் எப்படியோ  பிழைத்து, பாட்டி தான் என்னை விட்டுட்டு போயிட்டாங்க.”, மெல்லிய குரலில் சொன்னவள், துக்கம் தொண்டையை அடைக்க, “என்னை இத்தனை வருஷம் வளத்த பாட்டியை நானே கொன்னுட்டேன்” வார்த்தைகள் குளறி தெளிவின்றி விடுவித்து மீண்டும் தேம்பி  அழுதாள்.

“எல்லாத்துக்கும் சாவுனால விடிவு வராது மது. உங்க பாட்டி தான் ஹார்ட் பேஷன்ட் சொல்றியே. அப்புறம் எப்படி நீ கொல்ல முடியும். நீ பிழைத்து விட்டன்னு சந்தோஷம் தான் பட்டிருப்பாங்க. அவங்க கவலை நீ கல்யாணம் பண்ண மாட்டேன்னு சாகுற வரைக்கும் போனது தான்.” இதமாக, ஆனால் தன்னால் முடிந்த அளவு மதுவிற்கு எடுத்து சொன்னாள் சந்தியா.

“ப்ச்…. எதுவோ….ஆனா, பாட்டி என்னால தான் இறந்துட்டாங்கன்னு கில்ட்டியா இருக்கு. சின்ன வயசுல அம்மாட்ட எத்தனை அடி வாங்கினாலும் பாட்டியோட சேலையை வைத்துக்கிட்டு தூங்கினா ஒரு நிம்மதி வரும்.  என்னை காப்பாத்தின அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் தூங்க பயப்படுவேன்னு பாட்டி சேலையை  கொடுத்திட்டு போனாங்க….அடுத்த நாள் தாத்தாவை மாதிரி அவங்களும் ஒரேடியா போயிட்டாங்க” குமுறி அழுதாள். அழுது கொண்டே இருந்தாள்.

கொள்ளைப்புறம் சென்ற பெண்களை இன்னும் காணவில்லை என்று லக்ஷ்மி அழைத்துக் கொண்டே அங்கே வர கேட்டவரிடம் “மதுக்கு பாட்டி நியாபகம் வந்துடுச்சு. அதான் அழுதுகிட்டு இருக்கிறா” என சந்தியா சொல்ல, அவளுக்கு ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்தி உள்ளே அழைத்து சென்றார்.

மது, சந்தியா, சக்தி மூவர் உள்ளமும் கவலையால் நிரம்பியிருந்தது. மதுவிற்கு பழைய நினைவுகள் மீண்டும் வந்து மனதுக்குள் ஆக்கிரமித்துக் கொண்டன. எளிதில் உணர்ச்சி வசப்படாத சந்தியாவிற்கே, தன்னிலைக்கு வர கடினமாக இருந்தது. நிரஞ்சன் மதுவை ஒரு நொடி கூட வருத்தப்படாமல் வைத்துக் கொள்ள வேண்டுமே என்று தோன்றிய மறுகணம், அவன் காதல், அவளை வார்த்தை கூட காயப்படுத்தி விடக் கூடாது என எண்ணும் அவனின் அளவு கடந்த அன்பு, மதுவிற்கு அவன் தான் சரியான தேர்வு என்பதை உறுதி செய்தது.

இதே தான் கார்த்திக் சொன்னான், என்று நினைத்தவள், “நல்லா  மேட்ச் மேக் பண்ணிட்டு என்னை மட்டும் டீல்ல விடு”, உள்ளுக்குள் அவனுடன் பேச வேண்டும் என்ற ஏக்கம் தலை தூக்கியது. “இதுல சாரி சந்தியா வேற…..எப்படா வள்ளிக்கண்ணுன்னு கூப்பிடுவ? அட்லீஸ்ட் அந்த இடியட் சிவா சொல்லி கொடுத்த செல்லம்ன்னாவாது கூப்பிடுடா ப்ளீஸ்“, அவனை சுற்றியே  அலைபாய,

“மது இவ்வளோ கவலையில் இருக்கிறப்போ அவன்கிட்ட என்ன கொஞ்சல் வேண்டி கிடக்கு. மது மனநிலையை மாத்து“ மூளை இதயத்தை அதட்டியது. இரவு உணவை முடித்து, சிறு சிறு வேலைகளை செய்து முடித்து படுக்கும் முன் மொட்டை மாடிக்கு  காற்று வாங்க சென்றனர்.

ஆட்டம் தொடரும் ...

Go to Episode 21

Go to Episode 23

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.