(Reading time: 19 - 37 minutes)

****பெங்களூர்****

ஹே தேஜு ஃபீல் பண்ணாதடி” என்று அவளது தோழி ஜெனி ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்.

“இல்லை ஜெனி, நான் தப்பு பண்ணல.. அந்த lecture நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேட்கலை, எப்போ பாரு அந்த விவேகாகே சப்போர்ட் பண்றாங்க. என்னதான் விவேகா dean  பொண்ணா இருந்தாலும் இப்படியா?!” என்று தன் மனதில் உள்ள கோவத்தையெல்லாம் திட்டி தீர்த்துக்கொண்டிருந்தாள்.

இந்த கோவம் இப்போது வந்ததில்லை அவள் கல்லூரி ஆரம்பித்து சில நாட்களிலேயே இந்த போராட்டம் ஆரம்பித்தது. விவேகா இவளுடன் படிப்பவள்தான் ஆனால் தேஜுவின் மீது அவளுக்கு பொறாமை உண்டு அது ஏன் என்று இன்று வரை தேஜுவிற்கு தெரியாது.

எந்த ஒரு வேலை என்றாலும் ஆசிரியர்களும் தேஜுவையும் விவேகாவையுமே பொறுப்பாக போடுவர் ஆனால் அதன் விளைவு எந்த தவறு நிகழ்தாலும் பழி தேஜுவின் மீதுதான் விழும். dean பெண் என்பதால் அவளையும் கலந்துக்கொள்வதில் இருந்து தடுக்க முடியாமல், வேலைகளை பொறுப்பாக செய்வதனால் தேஜுவையும் விளக்க மனம் இல்லாமல் ஆசிரியர்கள் குலம்பிப்போனனர். தேஜுவை பற்றி அறிந்தமையால் சிலரோ வெறும் அக்கறையான பேச்சோடு விட்டுவிடுவர்.

இன்றும் அதேபோல் மாணவர்களிடம் இருந்து ரெகார்ட் நோட்டுகளை வாங்கிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தாள் தேஜு. வழியில் வந்த விவேகா உதவ முன்வரவும், சந்தேகமாக இருப்பினும் வெகு நேரம் தூக்கியமையால் கைகள் வலித்தது தேஜுவிற்கு. எனவே ஓய்வு எடுக்க விவேகாவிடம் ரெகார்ட் நோட்டுகளை கொடுத்தாள். ஆனால் அவளோ முதலில் ஆசிரியரின் அறையை அடைந்து வேலை செய்ததெல்லாம் தான் என்பதுபோல் காட்டிக்கொண்டு அலுப்பாக நின்றாள்.

தேஜு மறுத்து பேச முயற்சிக்க அது வினாக போனது. அந்த ஆசிரியர் முன்பே ஏதோ கோவத்தில் இருக்க, தன் கோவத்தை எல்லாம் தேஜுவின் மீது காட்டினார். என்றும் நடப்பதுதான் என்றாலும், இன்று ஆசிரியரின் பேச்சும் அந்த இடத்தில் இருந்த ஜூனியர் மாணவர்களின் கேலி சிரிப்பும் மனகஷ்டத்தை உண்டுபண்ணியது.

இவை அனைத்தையும் நினைத்து பார்த்தவளுக்கு கோவமும் வருத்தமும் கலந்து வர, வீட்டிற்கு அழைத்தாள்.

“ஹாய் அம்மா” என்று கஷ்டப்பட்டு கொண்டு வந்த புன்னகையுடன் பேசினாள்.     

“தேஜு நானும் அப்பாவும் இப்போ ஒரு reception க்கு போயிட்டு இருக்கோம், அப்பறமா பேசுறோம் முக்கியமான விஷயம் எதுவும் இல்லையே?” என்று அவசரமாக எனினும் அக்கறையாக கேட்டார்.

இந்நேரத்தில் எதற்கு அவர்களிடம் கூறுவானேன் என்று மனதை மறைத்து புன்முறுவலுடன் அழைப்பை வைத்தாள்.

மனம் பெரிதும் குழம்பி இருக்க பகிர்ந்துகொள்ள தோழிகளும் இல்லாமல் அறை வெறுமையாக இருந்தது. கைபேசியை எடுத்து அனுவை அழைத்தாள் அவளும் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க மன வருத்தம் எல்லாம் கோவமாக மாறியது. எப்போதாவது வரும் அந்த புதியவனின் குறுஞ்செய்தி கூட வராமல் இருக்க காரணம் இல்லாமல் அதுவும் கோவம் தந்தது. முன்பெல்லாம் வேண்டாத குறுஞ்செய்தியாக இருந்ததெல்லாம் மாறி, இப்போதெல்லாம் அந்த குறுஞ்செய்திக்காக காத்திருக்கத் தோன்றியது. சோகத்தை சொல்லி தீர்க்க யாரும் இல்லாதது போல் ஒரு வெறுமை தோன்ற கண்களில் நீர் திரண்டு இப்போது வரவா வேண்டாமா என்று அவளது பதிலுக்கு காத்திருந்தது.

அவள் கண்சிமிட்டி பதில் கூற கண்ணீர் அவளுக்கு வலிக்காமல் கன்னம்வரை உருண்டு வந்தது. அந்த நீர் வெளியே வரவும் கையில் இருந்த அலைபேசியின் திரையில் குறுஞ்செய்தி வரவும் சரியாக இருந்தது. அது அந்த புதியவனது குறுஞ்செய்தி தான் என்று அறிந்ததும் மனதில் ஆவல் கூட திறந்தாள்.

 ““வான்மகள் தன் துயரை கண்ணீரால் வெளிபடுத்தும் போது, உன் விழிநீரை தாங்க என் தோள் உள்ளது கண்ணே, உனக்காக என்றும் நான் உண்டு என்று தன் தோள் தந்து காத்திருப்பான் நிலமகன். அதுபோல் உன் துயரை தாங்க என் தோள் உள்ளது மயில்”” என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது.

ந்த குறுஞ்செய்தி பார்த்தவுடன் மனதில் இருந்த கவலை மேகங்கள் எல்லாம் களைந்து போக இதழோரம் புன்முறுவல் தோன்றியது. அவன் புதியவனே ஆனாலும் அந்த அக்கறையை அப்போது மனம் நாடியது. புதியவனுக்கு எப்படி தெரியும் என்று யோசிக்கவில்லை, தோன்றவும் இல்லை. ஆனால் அந்த இரு வரிகளில் மனம் நிறைந்தது. ஒரு புதிய உறவு மலர்தது நட்பு இல்லை, காதல் தானா என்று தெரியவில்லை ஆனால் துயரைப்போக்க தோள் தரும் உறவு, இனிமையாக இருக்க அனுபவித்தாள்.

மீண்டும் மீண்டும் குறுஞ்செய்தி பார்த்துக்கொண்டிருந்தவள் தோழிகள் வரவும் செல்லை மறைத்தாள் என்றும் இல்லாத நாணம் வந்தது, மறைக்க சொல்லித்தந்து, ரசித்தாள், சிரித்தாள். தோழிகள் சென்றவுடன் திருப்தியுடன் “நன்றி” என்று மட்டும் அந்த புதியவனுக்கு அனுப்பினாள்.

விட்டத்தைப் பார்த்து யோசித்தவாறு படுத்திருந்த நிரஞ்ஜனின் கண்களில் இன்று தேஜு முகவாட்டத்தோடு விடுதிக்கு சென்றதே படமாக ஓடியது. அவளது சோகம் நிரஞ்ஜனை மிகவும் வாட்டியது. முதல் முறை அவளிடம் மயங்கியதை என்னும் போதெல்லாம் தெவிட்டாத இன்பமாக இருக்கும். மயில் கழுத்து நிறத்தில் ஷராரா ஒன்றை அணிந்து அவளது பெற்றோரின் திருமண நாள் அன்று கண்டது இன்னும் அப்படியே கண்களில் இருந்தது. அனன்யா அவளை மயில் என்று அழைத்தப் போது மிகவும் பொருத்தமாக இருந்தது தேஜுவிற்கு. அன்று முதல் நிரஞ்ஜனின் மனதிலும் நினைவிலும் நிறைந்தாள் அவள். அவள் கண்கள் அங்கும் இங்கும் துருதுருவென செல்ல, பாடலுக்கு ஏற்றார்போல் இதழ்கள் அசைய நளினமாக தேஜு அன்று நடனம் ஆட மொத்தமாக அவளிடம் விழுந்தான் நிரஞ்ஜன். அவளை நினைத்து உருகிக்கொண்டிருந்தவனின் நினைவை ஒரு குறுஞ்செய்தியின் அழைப்பு கலைத்தது.

என்றும் தேஜுவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியதும் அவளிடம் இருந்து பதில் வராது என்று அவனுக்கு தெரியும், எனவே யாரோ என்று எடுத்து பார்த்தவனுக்கு ஆச்சர்யத்தில் பேச்சே மறந்து போனது. தேஜு தானா அவனது தேஜுவே தானா என்று கண்கள் நம்பாமல் பார்த்துக்கொண்டிருந்தான். நன்றி என்று வந்திருந்தது, அது மூன்று எழுத்தாக இருந்தாலும் திக்கு முக்காடி போகும் அளவிற்கு சந்தோஷமாக இருந்தான் நிரஞ்ஜன். பதிலுக்கு எதாவது அனுப்பலாமா வேண்டாமா? இத்தனை நாள் கலுச்சு இப்போதான் நன்றியே வருது நிரஞ்ஜன் கெடுக்காத அடக்கிவாசி அப்பறம் பதில் அனுப்புறதை நிறுத்திட போகிறாள் என்று மனம் எச்சரிக்கை செய்ய அந்த குறுஞ்செய்தியை திரும்பி திரும்பி பார்த்தவாறு படுத்திருந்தான்.         

குறுஞ்செய்தியை தள்ளிவிட்டு ஒரு அழைப்பு வர சந்தோஷத்தை கெடுத்த அழைப்பை பார்த்தவனுக்கு கடுப்பாக இருந்தது, ஆனால் திரையில் வந்த பெயரோ அவனுக்கு மகிழ்ச்சி தர அழைப்பை எடுத்தான்.

“என்னடா மாப்ள? எப்படி இருக்க?” என்று உற்சாகமாக நிரஞ்ஜன் பேசினான்

“எனக்கு என்னடா சூப்பர், நீ என்ன என்னைக்கும் இல்லாம இன்னைக்கு பயங்கர சந்தோஷமா இருக்க?” என்று வினவினான் அஸ்வத்.

“பின்ன இருக்காதா என் ஆளு ஒரு மெசேஜ் அனுப்பிசாலே அதான்” என்று உற்சாகம் குறையாமல் பேசினான்.

“ஏன்டா ஒரு மெசேஜ்க்கு இவ்ளோ effecta?” என்று கிண்டல் செய்தான்

“சரி என் கதையை விடு உன் கதை என்ன ஆச்சு?”

“ம்ம்ம்ம் குரூப் study லெவல்க்கு வந்திருக்கு” என்று கொஞ்சம் அடக்கமாகவே ஆனால் ஆனந்தமாக கூறினான்.

“போதும்டா வழியுது தொடச்சுக்கோ லவ் சொல்லுறதுக்கு முன்னாடியேவா?” என்று பதிலுக்கு கிண்டல் செய்தான்

“ஹலோ சீனியர ஜூனியர் கிண்டல் பண்ண கூடாதுப்பா நான் உனக்கு முன்னாடியே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்” 

“ரொம்ப பெரிய difference பாரு, ஒரு வாரம் தானே வித்தியாசம்” என்று சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

இவ்வாறு தோழர்கள் இருவரும் தங்கள் காதலை பற்றியும் தங்கள் காதலிகளின் தோழமை பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர்.       

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.