(Reading time: 19 - 37 minutes)

****சென்னை****

ஹே அர்ஜுன் ரொம்ப வேலை செய்யாத வா ஒரு காஃபி குடுச்சுட்டு வரலாம்” என்று அவனது தோளை தட்டி அழைத்தான் நவீன்.

அர்ஜுனது கண்கள் மட்டுமே திரையில் இருந்தது அவன் மனமோ திருப்பூரில் இருந்தது. நண்பனது அழைப்பில் நிகழ்க்காலம் வந்தவன் அவனுடன் எழுந்து சென்றான்.

அர்ஜுன் எதுவும் பேசாமல் வர நவீனே பேச்சை ஆரம்பித்தான். “டேய் நம்ம டீம்க்கு புது ஆளு வந்து சேர்ந்திருக்கா பார்த்தியா?” என்று அவன் வினவ அர்ஜுன் காபியை அருந்தியவாறு இல்லை என்று தலை அசைத்தான்.

“இதை கவனிக்குரதை விட உனக்கு வேற என்னடா வேலை ஹ்ம்ம். ஆளு சும்மா ஹன்சிகா மாதிரி இருக்காள்டா” என்று கனவில் மிதப்பவன் போல் புலம்பினான். அவன் கூரியவிதத்தில் லேசாக சிரித்துவிட்டு ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அர்ஜுனின் செயலை கண்டு சந்தேகத்துடன் பார்த்தவன், “என்னடா மாப்ள ஒண்ணுமே சொல்ல மாட்டிங்குற?” என்று கேட்டான்.

“இதெல்லாம் ஒரு அழகாடா?!” வெளிப்புறம் பார்த்தவாறே கூறினான்.

“ம்ம்ம்ம் ஹ்ம்ம் நீ சரியேயில்லை” என்று அவனை உலுக்கினான்.

அவனது உலுக்களில் நிகழ்காலம் வந்தவன் ஒரு மார்கமாக சிரித்துவைத்தான்

“அய்யய்ய இது என்னடா சிரிப்பு? டேய் அர்ஜுன் என்னடா ஆச்சு?” என்று கேட்டு கொண்டிருந்தவன் சிறிது நேர இடைவேளையிலேயே மண்டையில் மணி அடிக்க “டேய் தம்பி நீ... லவ்வு கிவ்ன்னு ஏதும் பண்ணலையே?” என்று அவன் சந்தேகமாக கேட்டான்.

அதற்கு அஹல்யாவை நினைத்து மிதந்தவன் “ஆம்” என்று தலை ஆட்டினான்.

“போச்சுடா.... நல்லா இருந்த பயலை கெடுத்துட்டாங்க சரி மாப்ள இனிமே உனக்கும் எனக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை” என்று சீரியஸ்ஸாக கூறுவது போல் கூறி நகரத்தான்.

அவனின் செயலில் அதிர்ச்சி அடைந்தவன், “டேய் நில்லுடா ஏன்டா இப்படி சொல்ற? நீ இருக்கனு ஒரு தைரியத்துலதான்டா நான் லவ் பண்ண ஆரம்பிச்சேன்”.

“அது எப்படிடா, உன்னை நம்பி லவ் பண்ணாம என்னை நம்புற?”

“பின்னாடி ஏதாவது பிரச்சனைனா......” என்று அவன் இழுக்க

“நீங்க லவ் பண்ணுவிங்க நாங்க ஒதை வாங்கணும் அப்படிதானே?”

“இல்லை மாப்ள அது...”

“ஹ்ம்ம் சரிவிடு... இருந்தாலும் நான் இனிமே உங்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளிதான் இருக்கணும்”

“ஏன்டா??” என்று பாவமாக கேட்ட தன் நண்பனை பரிதாபம் அற்று ஒரு பார்வை வீசிவிட்டு “பின்ன என்னடா லவ் பண்ணா, உங்களோட நிறுத்தினால் பரவால்லை நீங்க காதல் மயக்கத்துல அவளோட பேச்சு இப்படி, அவள் பார்வை இப்படி, அவள் உலக அழகினு ஆரம்பிச்சா நிறுத்த மாட்டிங்கடா” என்று முன்பே நொந்த அனுபவத்தால் புலம்பினான்.

அவன் சொன்ன விதத்தில் வாய்விட்டு சிரித்தவன், “விடு மாப்ள நான் அப்படி இல்லை” என்று அவன் தோள் மேல் கை போட்டு அழைத்து சென்றான்.

“ம்ம்ம் சரி நம்புறேன் வா, சரி தங்கச்சி பேரு என்ன?”

“தங்கச்சியா? என்னடா தெரியாத மாதிரி கேட்குற அனன்யா!” என்று பதில் கூறியவனை இவனெல்லாம் காதல் செய்து என்ன பண்ண போகிறான் என்பது போல் ஒரு லுக் விட்டுவிட்டு தலையில் அடித்துக்கொண்டான்.. அர்ஜுன் மேலும் முழிக்க, “அது எனக்கு தெரியாதா நான் கேட்டது உன்னுடைய ஆளை பத்தி!” என்று விளக்கமாக கேட்டவுடன் தான் பல்பு எரிந்தது அர்ஜுனுக்கு.

“அதுவாடா... அஹல்யா” என்று பெயரை மிகவும் ரசித்து விட்டத்தை பார்த்து கூறினான்.

அவனது போஸ் வைத்தே ஒரு முடிவிற்கு வந்தவன் இவனும் விதிவிலக்கு அல்ல என்று எண்ணிக்கொண்டு “சரி என்ன பண்றாங்க எப்போ propose பண்ணின?” என்று வருசையாக கேட்க

“பி.காம் final இயர், இன்னும் propose பண்ணலைடா... நான் லவ் பண்றேன் ஆனால் அது அவளுக்கு புரிஞ்சுருக்குமானு தெரியலை” என்று யோசனையாக கூறினான்.

அவனது பதிலில் அதிர்ந்தவன் “டேய் ஒன் சைடு லவ்க்கு தான் இவ்ளோ feel பண்ணியாடா?” என்று அவனை பார்த்து கேட்டான்.

அவன் எதுவும் கூறாமல் தலை குனிய “சரி விடு மாப்ள இருக்கவே இருக்கு செல்... ஃபோன் பண்ணி கேட்டுக்கோ” என்று ஐடியா தந்தான்.

“என்கிட்ட அவள் நம்பர் இல்லைடா”

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “சரி விடு, இப்போ இருக்க பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் உஷார்தான் உடனே ஃபோன் நம்பர் தர மாட்டாங்க வீட்டு அட்ரஸ் தெரியுமா?” என்று கேட்டான்  

அதற்கும் இல்லை என்று தலை ஆட்ட, “மாப்ள நான் ஒரு ஐடியா சொல்லவா பேசாம நீ லவ் பண்ற ஐடியாவ விட்டுரு” என்று குதர்க்கமாக சிரித்துக்கொண்டே கூறினான்.

“என்னடா இப்படி காலை வாருற, ஐடியா சொல்லுடா மாப்ள”

“ம்ம்ம்ம்.... சரி அஹல்யா படிக்குற காலேஜ் தெரியுமா?” என்று சந்தேகமாக கேட்க அவன் அவன் ஆர்வ மிகுதியில் பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டினான்.

“டேய் பயமுடுத்தாதடா...” என்று கூறிவிட்டு “அவ்வளவுதான் மேட்டர் ஈசி யாரையாவது கரெக்ட் பண்ணி அட்ரஸ் வாங்கவேண்டியது தானே” என்று அவன் மீண்டும் ஐடியா தந்தான்.

“அது லேடீஸ் காலேஜ்டா போனா மாட்டிப்போம் செம ஸ்ட்ரிக்ட்” என்று விளக்கம் தந்தான். அவன் கூறுவதும் சரியென தோன்ற “யாராவது தெரிஞ்ச பொண்ணு படிக்குதா அங்க?” அடுத்த ஐடியாவிற்கு வழிவகுத்தான்.

ஆம் என்று முன்பு போல் இல்லாமல் லேசாகவே தலை அசைத்தான். “அப்போ அந்த பொண்ண மூலமா நம்பர் வாங்குடா” என்று விடாமல் ஐடியா தந்தான் நவீன்.

நவீன் அர்ஜுனின் பதிலை எதிர்பாக்க அவனோ, “அது வந்து.... என்னோட prestige போயிடும்டா” என்று இழுத்தான்...     

அர்ஜுன் சொன்ன பதிலில் கோவம் வர “அட போடா.....” என்று திட்டிவிட்டு நகர்ந்தான். அர்ஜுனோ என்ன செய்வது என்று புரியாமல் “டேய் நில்லுடா...” என்று கெஞ்சிவாறு அவனது கையை பிடித்துக்கொண்டான்.

“இங்க பாருங்க தம்பி prestige லாம் பார்த்தாள் லவ் பண்ண கூடாது புரியுதா?!, அவன் அவன் 2 நாளுல டேட்டிங் அது இது போறானுங்க ஹ்ம்ம்... நீ எப்போ அஹல்யாவை பார்த்த?” சற்றே வெறுத்துபோய் பேசினான் நவீன்.

“ஒரு 8 மாசம் இருக்கும்டா”

மீண்டும் அர்ஜுனின் பதிலில் அதிர்ந்தவன் “டேய் என்ன நம்பிக்கைல இருக்கடா நீ? அந்த பொண்ணு உனக்காக வெயிட் பண்ணுவான்னு எப்படி நம்புற?” என்று அவன் கேட்டதற்கு அர்ஜுனிடம் பதில் இல்லை ஆனால் நம்பிக்கை இருந்தது.

இருப்பாடா கண்டிப்பா இருப்பா... அன்று அவள் பார்த்த பார்வை என்னிடம் காதல் கூறியது என்று மனம் ஆறுதல் தந்தது. அதையே பின்பற்றி “இருப்பாள் நவீன்” என்று கூறி இடத்தை விட்டு அகன்றான் அர்ஜுன்.           

அதற்கு மேல் அர்ஜுனை எதுவும் கேள்விகேட்க விரும்பாமல் தங்கள் இருப்பிடத்திற்கு சென்றனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.