(Reading time: 22 - 43 minutes)

27. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

ஜூன் 1, வெள்ளிக்கிழமை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம்

 “னி, ஞாயிறு கூட வேலை குடுக்குறாரா உங்க வாத்தியாரு! நாளைக்கு ஊருக்கு வந்துட்டு போக வேண்டியது தான  சந்து?”

 “இந்த வாரமா நோ சான்ஸ்! எங்க பேட்ச் மேட் ஸ்வேதா ரிசப்ஷன்க்கு  போக வேண்டியிருக்குன்னு ஏற்கனவே சொன்னேன்ல டீச்சர்”, என்றாள் சந்தியா.

“நீயில்லாம வீடே வெறிச்சோடி போச்சு பாப்பா…சரி, காலம் கெட்டு கிடக்கு.  தனியா எங்கயும் போகாத...எங்க போனாலும் பிரண்ட்ஸ்சோட சேர்ந்தே போயிட்டு வா.  “, அறிவுறுத்தினார் லக்ஷ்மி.

“டீச்சர் நீங்க சொல்லிட்டீங்கல்ல, இனி இந்த சிங்கம்  சிங்கிளா போகாது. அதே மாதிரி நீங்களும்  எந்த நேரமும் நியூஸ் சேனல் பார்க்கிற பழக்கத்தை விடுங்க. ஒருத்தருக்கு நடந்ததையே திரும்ப திரும்ப சொல்லி சொல்லி மத்தவங்களை  அப்செட் பண்ணிடுவாங்க. சரி, இப்போ ஒரு வாரமா நான் சென்னையில் இருக்கிறப்போ நடந்த நம்ம ஊர்  வட்டார செய்திகளை ஒளிபரப்புங்க. கேட்டுக்கிட்டே பல்லை தேய்க்கிறேன்” என்றாள் கல்லாரி விடுதியின் குளியறையை நோக்கி சென்று கொண்டே…

சிறிது நேரம் பேசிய பின் போனை வைக்கப் போனவர்,

“கிளம்பற அன்னைக்கே கண்ணைக் கசக்கிட்டு போன…அதான் மனசே கேக்கலை. அடுத்த வாரமாவது வரப் பாரு பாப்பா..” என்று கோரிக்கை விடுக்க அன்று அந்த கும்மிருட்டில் மிக நெருக்கத்தில் கார்த்திக்கின் ஏக்க முகம் மட்டும் மிகத் தெளிவாய் கண் முன் வந்தது…”நல்ல வேளைக்கு தமிழ் நாடு மின்சார வாரியம் புண்ணியத்தில் கரென்ட் கட்டாகி அம்மா எதுவும் பாக்கலை..” என தனக்குள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,

“பால் வண்டி வந்திடுச்சு. நான் வெச்சுடுறேன். எக்ஸாம் முடிந்ததும் போன் பண்ணு...வாயில ப்ரஷ்சை வைச்சுகிட்டு பேசுறதை விடு”, என அவர் விடைபெற போனை அருகிலிருந்த ஸ்டேண்டில் போட்டு விட்டு, பல் துலக்கி, முகத்தை கழுவினாள்…

கார்த்திக்கை பார்க்க வேண்டாமென்று ஊரை விட்டு கல்லாரிக்கு ஓடி வந்து இதோடு ஒரு வாரமாகி விட்டது! கல்லாரி பேராசியரின் ஆராய்ச்சியில் ஈடுபட அவள் கேட்டதும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார் அவர். கல்லாரி விடுதியிலே தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தார்.  

இன்று மிக முக்கியமான நாள். இரண்டு வருட கல்லாரி வாழ்க்கையின் கடைசி நான்கைந்து மாதங்கள் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ப்ராஜெக்ட் செய்து அதை சமர்பித்து பேராசிரியர்களுக்கு விளக்கும் தேர்வு - எம்.பி.ஏ பராஜெக்ட் டெமோ.  அத்தனை நண்பர்களையும் ஒன்றாக பார்க்க போகும் ஆவலில் கல்லாரிக்கு சற்று விரைவாகவே வந்து விட்டாள். “எல்லாரும் நேத்தே கார்த்திக் பீச் ஹவுஸ்க்கு போயிருப்பாங்க...” என்று எண்ணிக் கொண்டே கையில் இருந்த போனில் பேஸ் புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் என அத்தனையும் புரட்டினாள். அவள் எதிர்பார்த்த படியே நண்பர்கள் புகைப்படங்களை போட்டிருந்தனர்...கார்த்திக்கை தேடினாள்…..அவன் அதில் இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் போனில் இருந்து பார்வையை விளக்கி நிமிர, காரிடரின் எதிர் முனையில் சக்தி நண்பர்களுடன் அவளை நோக்கி வந்தாள்.

வெகு நாள் கழித்த சந்திப்பில் நண்பர்கள் அனைவரும்  தேர்வை பற்றி எண்ணமின்றி உச்ச ஸ்துதியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.  சற்று நேரத்தில் தேர்வுக்கு வரிசை எண் படி ஒருவர் பின் ஒருவராக அழைக்கப் பட, உள்ளே செல்பவரைத் தவிர மற்றவர்கள் தங்கள் அரட்டையை தொடர்ந்தனர். அதிலும் முந்தைய நாள் அந்த கடற்கரை பங்களாவில் இவர்கள் அடித்த லூட்டி தான் ஓடிக் கொண்டிருந்தது.

“காகா  கார்த்திக் பாத்து செம வழிசல் ஜந்து”, சக்தி சொன்னதும்,

அந்த காகா அடைமொழிக்கு சொந்தக்காரியான காயத்ரி காமேஷ்,

”ஹே….உங்க பாஸ் செம ஹேண்ட்சம்”  என சந்தியாவிடம் புகழ,

“அழகா இருக்கிற பசங்களை விட சுமாரா இருக்கிற பசங்க தான் ஸ்மார்ட்டா இருப்பாங்க”, என்றாள்  சந்தியா எரிச்சலுடன்.

“நோ..நோ.. கார்த்திக் இஸ் வே டூ ஸ்மார்ட்! என்னோட ட்ரீம் பாய் மாதிரியே இருக்கான்”, என அவள் சொல்ல, அதற்கு இன்னும் இரண்டு பேர் ஜால்ரா தட்ட  சந்தியா உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருந்தாள். அதற்குள் தேர்விற்கு அவளது பெயர் அழைக்கப்பட, கையில் ரிபோர்ட் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஓடினாள்.

தேர்வு முடிந்த பின்னரும் நண்பர்களுடன் காரிடாரில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த சந்தியாவின் அருகில் வந்த பேராசிரியர் ஆராய்ச்சி சம்மந்தமாக அவளிடம் சில விவரங்களை சொல்லிவிட்டு,

“இந்தா பிடி என்னோட வைப் உனக்காக கொடுத்து விட்டது!” என மதிய உணவு டப்பாவை  நீட்ட,

“என்ன சார் எங்களுக்கு எல்லாம் கிடையாதா?” அருகில் நின்ற அவளது நண்பர்கள் கிண்டலடிக்க, “எனக்கே ஏதோ சந்தியா புண்ணியத்தில் கிடைக்குது. நீங்க வேற” என அவரும் கிண்டலாக சொல்லி விட்டு சென்றார்.

“மேம் சாப்பாடு அருமையா இருக்கும். கேண்டீன் போய் இன்னும் கொஞ்சம் ஆர்டர் பண்ணி  லஞ்ச்சை முடிப்போம்” என்று நண்பர்களை கிளப்பும் பொழுது,

“மச்சி தம்மு வைச்சிருக்கியா?” என கேட்டுக் கொண்டே அவளை நோக்கி வந்தான் நண்பன் யாதவ்.. அவன் பின்னால் இன்னும் இருவர்….பத்த வைக்க  காத்துக் கொண்டிருந்தனர்.

“இருக்கே“, என்று கைப்பையில் இருந்து சிகரெட்டை அவர்களிடம் கொடுக்கப் போவது  போல நீட்டிவிட்டு பின் கையை தன்புறம் இழுத்துக் கொண்டு  “ஆனா நானும் வருவேன்...தம்மடிக்க”, வளைந்த புருவங்களை உயர்த்தி பேரம் பேசினாள்.

அதைக் கேட்டு பதறிய யாதவ், “அய்யோ…. ஒளவை உன் கொலவை யை ஆரம்பிச்ச முடிக்கவே மாட்ட...வுட்டுடு ஆத்தா!” என அவள் கையில் இருந்த சிகரெட் பாக்கெட்டை பறித்துக் கொண்டு ஓட,

அவனை விடாமல் பிடிக்க ஓடினாள் சந்தியா. “எருமை...கபோதி.. தம்மடிச்சா  சாவடா..கேன்சர் வரும்..லங்க்ஸ் வீக்காகிடும்…கண்ணு நொல்லையாகிடும்...தொண்டை எல்லாம் புண்ணாகிடும்..பாதி டெட்  பாடியாட்டம் தான் நடமாடுவ மச்சி ” என்று திட்டிக் கொண்டே அவனைத் துரத்தி பிடித்தாள். அவள் உபதேசத்தில் எரிச்சலாகிய யாதவ் “ஒளவை இந்தா புடி நீயே வைச்சுக்கோ” என சிகரட்டை அவள் கையிலே திணித்தான். வெற்றி புன்னகையில் மலர்ந்தாள்  சந்தியா.

சற்று தாமதமாக யாதவுடன்  கேண்டீனிற்கு வந்து சேர்வதற்குள் சக்தி தலைமையில் நண்பர்கள் கூட்டம் அவளது உணவை காலி செய்திருந்தனர்…”நம்ம கொட்டு வைப்க்கு சமைத்ததை உன்கிட்ட கொடுத்து பிட்டை போட்டு வேலை வாங்குறார்..“ என்றாள் காயத்ரி.

சந்தியாவுடன் வந்த யாதவ் காயத்ரியின் பேச்சைக் கேட்டு, “கொட்டு சூப்பர் கேரக்டர். அவர் கொடுத்ததை ஒண்ணுமில்லாம மொக்கிட்டு அவரையே கிண்டுற  காகா “, என்று காயத்ரியை லேசான அதட்டலுடன் கேட்டான்.

“ஜந்து இந்த புகை வண்டிங்க தான் திருந்தாத ஜென்மங்கன்னு தெரியும்ல. ஸ்மோக் பண்றவங்களுக்கு மட்டும் இல்ல, அவங்க பக்கத்தில் நிக்கிறவங்களுக்கும் அது  கெடுதி. தெரியும்ல?”, நின்று கொண்டிருந்த யாதவ்வை அலட்சியமாக பார்த்துக் கொண்டே  தன்னுடன் நாற்காலியை பகிர்ந்த சந்தியாவிடம் கேட்டாள்  சக்தி.

“அதான் தம்மடிக்க விடாம பண்ணிட்டாளே!... அடமன்ட் ரவுடி...உன்கிட்ட சிக்குறவன்  ரொம்ப பாவம்” என்று  யாதவ் கிண்டலாக சொல்லிக் கொண்டே அடுத்த மேஜை அருகில் இருந்த நாற்காலியை அவர்களருகில் இழுத்து போட்டு  உட்கார்ந்தான்.

“அதல்லாம் சிக்கியாச்சு..”, என்று நமுட்டு சிரிப்புடன் சக்தி சொல்லும் பொழுதே சந்தியாவின் காலணிகள் சக்தியின் பாதத்தை மிதமாக பதம் பார்த்தன. “ஆ...பிசாசு.காலை எடுடி. உன்கிட்ட சிக்கினவர் மட்டுமா...மது கூட உன்னை ரொம்ப மிஸ் பண்றா. “என்றாள்   சக்தி.

“ரிசேர்ச் வொர்க்ல பிஸியா இருக்கேன்னு மதுக்கு  ஈமெயில் பண்ணேனே!”,  என்றாள் சந்தியா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.