(Reading time: 22 - 43 minutes)

நீ போன் எடுக்க மாட்டேங்கிறன்னு அப்செட்டா இருக்காடி. இதுல கார்த்திக் வீட்டிலையும் யாரும் சரியா அவ கூட பேச மாட்டேங்கிறாங்களாம். நான் கூட நோட் பண்ணேன்... நேத்து ரெயில்வே ஸ்டேஷன்க்கு கார்த்திக்கும் நிருவும் தான் எங்களை பிக் அப் பண்ண வந்தாங்க. அப்போ கூட கார்த்திக் ஏதோ போன் பேசுற மாதிரியே பாவ்லா பண்ணிட்டு அவகிட்ட சரியா பேசலை. ” என்றாள் சக்தி.

“பிக் அப்க்கு எம். எஸ். வரலையா? சென்னை காவல்துறைல இருந்துகிட்டு பியான்சியை பிக் அப் பண்ண ஜீப்போட வந்திருக்க வேண்டாமா…நீயும் புஸ் புஸ்ன்னு ஜோதிகா மாதிரி இருக்க.

என்னைக் கொஞ்சம் மாற்றி

என் நெஞ்சில் தீயை ஊற்றின்னு

சிட்டிவேஷன் சாங் பாடியிருக்கலாம்” என்றான் நண்பன் யாதவ். கையிலிருந்த ரிபோர்ட் புத்தகத்தை எடுத்து அவன் முதுகில் மொத்த போன  சக்தியை தடுத்த  சந்தியா,

“என்ன சொன்ன? கார்த்திக் பிக் பண்ண வந்தாரா? அப்போ உங்களுக்கு முன்னாடியே சென்னை வந்தாச்சா?“, என சந்தியா கேட்க,

“சீதை இருக்கும் இடம் தான ராமருக்கு அயோத்தி! போன வாரமே வந்தாச்சு! “, என்றாள் சக்தி நமுட்டு சிரிப்புடன்.

அந்த தகவல் சந்தியாவிற்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. “அவன் எங்க இருந்தா உனக்கு என்ன?” தனக்குள் சொல்லிக் கொண்டாள். மதிய உணவிற்கு பின்,  அனைவரும் ஒன்றாக கார்த்திக்கின் வீட்டிற்கு கிளம்பினர் சக்தியைத் தவிர.

“ஏன்டி சக்கு நீ போகலையா?”

“எம். எஸ் இன்னும் அரை மணி நேரத்தில் கூப்பிட வருவார். அதுக்குள்ள உன்கிட்ட பேசணும்” என்ற சக்தி, மேலும் தொடர்ந்தாள்.

“நாளை கழித்து ரிசப்ஷன் வைச்சிகிட்டு ஸ்வேதாவே கெட்டுகேதர்க்கு வர்றா. உனக்கு என்னடி? ரிசேர்ச் பண்ற வேலையெல்லாம் ஒரு மூணு நாளைக்கு மூட்டை கட்டி வைச்சிட்டு எங்க கூட  வர முடியாத ஜந்து? மறுபடியும் இப்படி எல்லாரையும் ஒட்டு மொத்தமா மீட் பண்ற சந்தர்ப்பம் கண்டிப்பா எனக்கு கிடைக்காதுடி. “, சக்தி வருத்தத்துடன்.

“எனக்கும் வர ஆசை தான். ஆனா, அவன் முகத்தில் முழிக்கணுமே!”, என்றாள் உதட்டை சுழித்துக் கொண்டு.

அவள் சொல்வதை கேட்டவுடனே வேகமாக போனில் யாரையோ அழைத்தாள் சக்தி. அவள் யாருக்கு அழைக்கிறாள் என புரியாமல் அவளை பார்த்த படி இருந்தாள் சந்தியா. சில மணி அடித்ததும் அழைப்பு எடுக்கப்பட,

“ஹலோ ஷக்தி”, என்ற கார்த்திக்கின் குரல் ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் சந்தியாவிற்கும் கேட்டது… அவன் கேட்டது தான் தாமதம்  சக்தி வேகமாக,

“கார்த்திக், சந்தியாவிற்கு கெட் டுகெதர்க்கு அங்க வர ஆசையாம். ஆனா, உங்க முகத்தில் முழிக்கணும்னு தான் வர மாட்டே”

அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வேகமாக போனை பிடுங்கி ஆப் செய்தாள் சந்தியா.

“சக்கு மக்கு  உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு?”, திட்டினாள் சந்தியா.

“பைத்தியம் பிடிச்சா கூட தெளிய சான்ஸ் இருக்கு. பிடிவாதம் பிடிச்சா கஷ்டம்!“ என்று சக்தி சொல்லும் பொழுதே மீண்டும் கார்த்திக் அழைப்பு வர,  அதை எடுத்த சக்தியிடம்,

“ஷக்தி..என்ன சொன்னீங்க…நான் இருக்கேன்னு தான் சந்தியா இங்க வர மாட்டேங்கிறாளா?”, நிதானமாக கேட்க முயன்று தோற்றான். லேசாக உடைந்த குரலில் அவன் வருத்தம் அப்பட்டமாக தெரிய அது சந்தியாவிற்கும் தொற்றிக் கொண்டது.

அவள் முகத்தை ஆராய்ந்தவாறே, “இல்லை...இல்லை...உங்க முகத்தில் முழிக்க ஆசையா இருக்குதாம். உங்களை கூப்பிட வரச் சொன்னா..எத்தனை மணிக்குன்னு சொல்லிடு ஜந்து” என்று போனை அவளிடம் கொடுத்தாள். தயக்கத்துடனே போனை வாங்கிய சந்தியா,

“நீங்க வர வேண்டாம். நான் பாத்து வந்துடுவேன்”  என்றவளிடமிருந்து போனை கைப்பற்றிய சக்தி,

“இவ சொல்ல மாட்டா கார்த்திக். அஞ்சு மணிக்கு காலேஜ் ப்ரண்ட் என்ட்ரன்ஸ்ல நிப்பா. வந்து கூப்பிட்டுக்கோங்க” என்று இணைப்பை துண்டித்தாள்.  அவள் சொல்வதை கேட்டு சந்தியா முறைப்பதை சட்டை செய்யாமல்,

“இதெல்லாம் லவ்ல ஜகஜம்டி…ஒரு போன் கால்ல சால்வ் ஆகிடுச்சு பாத்தியா...இதே மாதிரி  மதுக்கு கொஞ்சமாவது பீலிங்க்ஸ் ஆப் இந்தியா வர நிரு இன்னும் பல பிறவி எடுக்கணும் போலயே..” என்று அலுத்துக்கொண்டாள்.

“ஏன்? ”, கேட்டாள் சந்தியா.

“பெவிகால் கம் போட்டு ஒட்டாத குறையா நிரு கூடவே சுத்துறா, இருந்தாலும் அவனை காமெடி பீஸாட்டம் நினைக்கிறாளோன்னு டவுட்டா இருக்கு!”, என்றாள் சக்தி குழப்பியவளாய்.

“ரெண்டு பேரையும் தனியா பேசி பழக எங்கயாவது அனுப்பி வைக்கலாமே? ”, யோசனை சொன்னாள் சந்தியா.

“அப்படி தான் ரெண்டும் வேடந்தாங்கல் போயிருக்காங்க”, என்று சக்தி சொல்ல,

“விளங்கின மாதிரி அங்க போய் இரண்டும் இறகு பொறுக்க போகுதுங்களா.....இந்த ஐடியாவை கார்த்திக் தானே கொடுத்தது?” என சந்தியா கேட்தும்  ஆமாமென தலையாட்டினாள்  சக்தி.  

“பழுத்த பழனியப்பா...” முனங்கினாள் சந்தியா.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்:

மித வெயில் நேரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை வந்தடைந்தனர் மதுவும் நிரஞ்சனும். நுழைவாயில் இருந்த சரணாலயத்தின் குறிப்பை பார்த்த மது, நிரஞ்சனை அழைத்து காண்பித்தாள்,

“இந்தியாஸ் ஒல்டஸ்ட் வாட்டர் செஞ்சுவரி எங்க ஊரில் இருக்கு பார்த்தீங்களா நிரு?”, இல்லாத காலரை  தூக்கி விட்டு பெருமை அடித்தாள் மது.

“ம்ம்...உங்க ஊரிலே இறக்குறது சூப்பர்”

“இறக்குதா...அய்யோ நிரு”, என மது அவன் தோளில் தட்டி சிரிக்க, அவனோ அவளை ரசித்த படி திறந்த வாயை மூடாமல் நின்றான். அவளோ அதை அறியாது விழிகளால் சிரித்து, தலையாட்டிக் கொண்டே விரல்களை அழகாக விரித்து  “நிரு இறக்குதான்னா...” என்று விளக்கம் அளிக்க ஆரம்பித்தாள் (சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா மாதிரி)...

அவனோ “யு ஆர் கில்லிங் மீ”, மெல்லியக் குரலில் அவள் மீது  காதல் பார்வை வீசி  விட்டு முன்னே நடக்க ஆரம்பித்தான் நிரஞ்சன். மதுவிற்கு அவன் பாடி லேங்குவேஜ் புரிந்திடுமா என்ன? ஆனால் அவன் சொன்னது புரிந்து விட்டது. அவன் பின்னாலே ஓடிச் சென்று அவன் வழியை மறைத்த படி நின்று,

“கில்லிங் மீ ன்னா  கொல்றதுன்னு அர்த்தம். இறக்கிறது ன்னா டையிங்”, தோள் வரை வளர்ந்த கூந்தலைக் ஒரு கையில் கோதியவாறு மறு கையை ஆட்டி சொன்னாள்...

“அப்கோர்ஸ்...ஐ ஆம் டையிங்” என்றான் நெடிய பெருமூச்சுடன்....

சற்று தூரம் போய் பறவைகளை பார்க்கச் சென்றனர். கையில் வைத்திருந்த பைனாகுலரில் அவன் சில பறவைகளை காட்டி விளக்கம் அளித்தான். “பேர்ட்ஸ் கூட்டு  கட்டுது எதுக்கு?”

“கூட்டு இல்ல...கூடு .. கூடு கட்டுறது குஞ்சு பொரிக்கிறதுக்கு” என்றாள் மது.

“பட், போவர் பேர்ட்ஸ், அப்படி இல்ல. அது அழுக்கா  ஆர்ட் கேலரி போல இம்பர்சிவ்வா கூட்டு கட்டுது எதுக்கு தெரியுமா?”

“அழுக்கா...சீ...அழகா கூடு கட்டுறது பின்ன  எதுக்காம்?”, கேட்டாள் மது.

“கேர்ள் பிரண்ட் இம்ப்ரஸ் பண்றதுக்கு”, என்றான் நிரு.

“ரியலி? இன்ட்ரஸ்ட்டிங்”, விழி விரிய வியந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.