(Reading time: 22 - 43 minutes)

ல்யூஷன் பேஸ் பண்ணி இலை, குச்சி, பெத்ர்ஸ் வைச்சு கூட்டு கட்டுது. அதே பாக்க  கேர்ல் ப்ரண்ட் வர்றப்போ சூப்பர் டான்ஸ் போடுது போவர் பேர்ட்….இதை பார்த்து கேர்ள் ப்ரண்ட் இம்ப்ரஸ் ஆகுது இல்லே பேயந்து ஓடுது” என்று சொன்னான் நிரு.

“வாவ்” என அவள் வியக்கும் பொழுது அவன் பேசுவதை கேட்டு பக்கத்தில் நின்ற இளம்பெண்கள் இருவர் அவனிடம் “நீங்க சொன்னதை நாங்களும் கேட்டோம். உங்களுக்கு இவ்வளோ தெரிஞ்சிருக்கே..” என கேட்க,

“பேர்ட் வாட்ச் ஹாபி ”, என பதிலளிக்க, அவர்கள் அவனிடம் அந்த ஏரியில் இருந்த பறவைகளைப் பற்றி சில விவரங்கள் கேட்க, பைனாகுலரில் அதை சுட்டிக் காண்பித்து விளக்கினான். அதன் பின்பும்  அந்த பெண்கள்  அவனிடம்  விடாமல் பேசிக் கொண்டிருக்க, மதுவிற்கு எரிச்சலாய் வந்து,

“நிரு எனக்கு தாகமா இருக்கு! ஏதாவது குடிக்கலாம்“, என அவர்கள் பேச்சில் இடை புகுந்தாள். அவர்களிடம் இருந்து விடைபெற்று அவளை  அழைத்து ஒரு திண்டில் அமர்த்தி விட்டு டீ வாங்கி வந்தான்.

நுரை ததும்ப வந்த டீயை  ருசித்து விட்டு, “நீங்க ஷை டைப் நினச்சேன். ஆனா நீங்க முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட கூட இவ்வளோ நேரம் பேசுறீங்க”, வியப்பாக கேட்பது போல கேட்டு விட்டு மனதிற்குள் பொசு பொசுத்தாள் மது.

“அது  ரம்பா இன்டரஸ்ட் காமிச்சது...அதான்.”, என்று நிரு இயல்பாக சொல்லிக் கொண்டே அவளருகில் அமர்ந்தான்.

“ரம்பாவா..” மதுவிற்கு நிமிடத்தில் கோபம் மறைந்து சிரிப்பு வந்தது!

“இல்லே அது பேரு தீபா” என்று அப்பாவியாக எடுத்துக் கொடுக்க, மதுவிற்கு மீண்டும் கோபம் வந்தது.

“அந்த  தீபாட்ட பேசுறப்போ நான் பார்த்த பேர்ட் பேர் என்ன?”, கேட்டாள் மது.

“அது க்ரே பெலிகேன்”, சிறிது கூட யோசிக்காமல் சட்டென வந்தது நிருவின் பதில்...

அதைக் கேட்ட மதுவின் கண்களில் வியப்பு!

“நிரு… இங்கி பிங்கி போட்டு கெஸ்ல தான சொன்னீங்க?”, குழப்பமாக கேட்டாள் மது.

அதற்கு சிரித்த நிரு, “ ஐ வாஸ் வாட்சிங் யு” என்றான்.

பைனாகுலரில் தான் பார்த்ததை எவ்வளவு நுணுக்கமாக கவனித்திருப்பான்… அதை நினைக்கும் பொழுது மதுக்கு உள்ளூர சந்தோஷமாக இருந்தது!.

அவள் யோசித்த படியே அடுத்த மடக்கை பருக, “மது,  ஒன் மினிட்” என சைகை செய்து விட்டு போன் பேசுவதற்கு சற்று தள்ளி சென்றான்.

அவன் சென்ற பின் அவள் அருகே பரிசு பெட்டி இருப்பதை பார்த்து அது அவளுக்கே என அறிந்து ஆர்வமாக பிரித்தாள். உள்ளே பூனைக்குட்டி போன்ற முகம் கொண்ட பிங்க் நிற கைக் கடிகாரம்! “ஹய்” கண்களில் வியப்பு காட்டி அதிசயக்கும் பொழுது, “யு லைக் இட்?” என அவளின் காதருகில் வந்து  ரகசியமாய் நிரு கேட்டான்.

“எஸ்...எஸ்…” என்றாள் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்க.

“இது ஸ்மார்ட் வாட்ச். என்னோட பர்ஸ்ட் இன்வென்ஷன். இதை ஸ்மார்ட் போன் போல யூஸ் பண்ணுது. நைட்  பேயந்தா இந்த பட்டன் பிரஸ் பண்ணுது...எனக்கு ஆட்டமாடிக்கா கால் வந்துடுது“   என்று விளக்கினான் நிரஞ்சன்.  

“உங்க பர்ஸ்ட் இன்வென்ஷன்! மை காட்! எப்போ?”

“அது ஆய்ந்து வருசத்துக்கு முன்னாடியே கண்டுபிடிச்சி பேடன்ட் வாங்கிட்டேன்”

“ஆய்ந்தா...ஹா...ஹா… யு ஆர் எ டெக்கி கை. வெரி நைஸ்.”, பாராட்டினாள் மது.

“எனக்கு கிப்ட்ன்னா எப்போதும் பிடிக்கும் நிரு... காதி கூட இப்படி தான் எப்பவும் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பான். ”, அதுவரை சிரித்தவள் முகம் கவலையில் சுருங்கியது.

“காதி என் கூட சரியாவே பேச மாட்டேங்கிறான். ”, என்றாள் வருத்தத்துடன்.

“கார்த்திக் வேலேலே  பிஸியா இருக்குது. அதான்… ”, என்றான் நிரஞ்சன்.

“நீங்களும் தான் பிஸியா இருக்கீங்க...ஆனா என் கூட டைம் ஸ்பென்ட் பண்றீங்க தான?”

“கார்த்திக் என்னோட வொர்க் சேர்த்து பண்ணுது மது. ”

“உங்களுக்கு தெரியாது நிரு..வீட்டில் யாருமே என்கூட சரியா பேசுறதே இல்லை...நீங்களும் இதே மாதிரி ஒரு நாள் மாறிடுவீங்க!” சொல்லும் போதே கண் கலங்கி விரக்தியுடன் சொன்னாள்.

“மேட் ராம் தான் நீர்ந்தா ராம்” என்றான் நிரஞ்சன்…

“மேட் ராம் நீர்ந்தா ராம்...இது ஏதாவது பெங்காலி பாட்டா நிரு?”, புரியாமல் முழித்தாள்...

“இல்லே.. தமில் புண் முளி...ஐ மீன் லைக் ப்ரோவெர்ப் ”

“தமிழ் பொன் மொழி...ஓ...மாற்றம் தான் நிரந்தரம்..இதை தான் சொன்னீங்களா? ”, சிரித்துக் கொண்டே கேட்டாள் மது.

“எஸ்...எஸ்..  இன்னொரு புண் முளி சொல்லுது” என ஆரம்பிக்க,

கையை எடுத்துக் கும்பிட்டு “தெய்வமே உங்க புண் முளியை இங்கிலீஷ்லே சொல்லிடுங்க...சத்தியமா முடியலை நிரு”, சீரியஸாக சொல்ல முயன்று சிரித்துக் கொண்டே முடித்தாள்.

“லிவ் தி ப்ரசன்ட்...ஸ்டாப் வோரியிங் அபொட் பியூச்சர்” என்றான் நிரு.

அவன் சொன்னதும், “நீங்க ஜீரா நோ சொல்லிடுவான்னு வொரி பண்ண மாட்டீங்களா நிரு” கேட்டாள் மது.

 “அது ஜீரா சொல்றப்போ பாத்துக்கிடலாம். இந்த நிமிசம் இப்படி ஜாலியா உட்க்கார்ந்து பேச எனக்கு பிடிச்சிருக்கு..உனக்கு பிடிச்சிருக்கா?” ஆங்கிலத்திலே கேட்டான் நிரஞ்சன்.

 “பிடிச்சிருக்கு நிரு… ஆனா நீங்க அந்த தீபா கூட பேசுனப்போ அவ பைனாகுலரை பிடுங்கி தண்ணிக்குள்ள எரியணும்னு ஆத்திரமா வந்தது...அப்போ உங்களை பிடிக்கலை…. அந்த ஜீராவுக்கு இதே மாதிரி எங்கூட பேசுறது பிடிக்காம போனா என்ன செய்வீங்க நிரு?”, ஏக்கமும், பயமும் கலந்து கேட்டாள்.

தனக்காக போட்டி போடுகிறாள் என தெரிந்ததும் மனதிற்குள் மகிழ்ந்து அவள் தான் ஜீரா வென சொல்ல வந்த துடித்த அவன் உதடுகளை சிரமப்பட்டு தடுத்தான். “ஒரு வேளை தெரிந்தால் எப்படி ரியாக்ட் செய்வாளோ….அவளுடன் செலவிடும் இந்த தங்கமான நேரத்திற்கு துளி கூட  பங்கம் வரவழைக்க அவன் விரும்பவில்லை.

“மது நரியா  நனைத்து கொளம்புது...போதும். லெட்ஸ் கோ ஹோம்” என்று சொல்லி எழுந்தான். அவளோ எழுந்தரிக்க எண்ணமின்றி,

“நீங்க சொன்னது போல மாற்றம் தான் நிரந்தரமா? நிரந்தரமா பாசம் வைக்க எல்லாருக்கும் அம்மா அப்பா இருப்பாங்க. எனக்கு இல்லையே! அப்படியே என் மேல பாசம் வைக்கிறவங்க எல்லாம் விலகி போயிடுறாங்க...இல்லை உலகத்தை விட்டே போயிடுறாங்க  ஏன் நிரு?”, விடை தேடி பரிதவிக்கும் அவள் கண்களை பார்த்து வருந்தியவனாய், அவளை நெருங்கி,

“மது....இங்க பாரு... உனக்காக  நான் இறக்குது!  ” என்றான் தீர்க்கமாக.

“எனக்காக ஒரு உயிர் போனது பத்தாத!” என்று பதறிக் கொண்டே  மெல்லிய விரல்களால் அவன் வாயைப் பொத்தினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.