(Reading time: 22 - 43 minutes)

வள் செய்கையின் அர்த்தம் விளங்க, வாயில் இருந்த கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் இறுக்கமாக பற்றிய நிரஞ்சன், “இறக்குது மீன்ஸ் டையிங்...நான் அதே சொல்லாது...ஐ வில் பி தேர் பார் யு ஆல்வேஸ்” என்றான் நிரு கரகரத்த குரலில்.

அவன் பார்வையில் தெரிந்த உறுதி மது மனதை சாய்த்து அவளை அவன் தோளில் சாய்த்தது…அந்த நொடியில் அவன் கரம் அவளை ஆதரவாய் அணைத்தது. சுற்றும் முற்றும் உள்ளவர்கள் இவர்களை வித்தியாசமாக வேடிக்கை பார்ப்பதை அறியாமல் சில நொடிகள் அமைதியாக கழிய,

“யு பீல் பெட்டர் நொவ்?”, மென்மையாக கேட்ட நிரஞ்சன் குரலில் தன்னிலைக்கு வந்து, சட்டென்று அவனை விட்டு விலகி, இரண்டு அடி பின்னோக்கி வைத்து காற்றில் பறந்த அவள் கேசத்தை சரி செய்தவாறு  “சாரி... பாட்டி நியாபகம்...அதான்” தயக்கத்துடன் சொன்னாள்.

“நோ சாரி. கீப் ஸ்மைலிங்… நான் நஞ்சுக்குள்  பாட்டு பாடுது“, என்று இரண்டு வரி பாட ஆரம்பிக்கவும், “நிரு இங்கு வந்து தமிழ் பாட்டை கொலை பண்ணீங்க தமிழ்நாடே கொந்தளிக்கும்…” என்று சிரிப்புடன் மிரட்ட, மீதி பொழுதும் இனிமையாய் கழிந்தது...

சென்னை அண்ணா பல்கலைக் கழகம்

ரெண்டரை  மணி நேரமா வெயிட் பண்றோம். இன்னும் சிஸ்டரை காணோம்” என கேட்டான் சிவா.

“ஐந்து மணிக்கு தான் வருவேன்னா மச்சி” என்றான் கார்த்திக்.

“அடப்பாவி….அதுக்கு எதுக்குடா மூணு  மணிக்கே வந்து காத்துகிடக்கோம்... ”, கேட்டான் சிவா.

“சூன்னர் தி பெட்டர் மச்சி”, என்றான் கார்த்திக் நிதானமாக.

“ம்ம்க்கும்….சூன்னியம் வைக்கிறது இதை விட பெட்டர்… மணி ஐந்தரை ...இனிமேலும் வருவான்னு நினைக்கிற?”  

என சிவா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, கையில் நீள பையை சுமந்து கொண்டு அவள் வருவதைப் பார்த்து,  அவளை நோக்கி நடந்தான் கார்த்திக். பையை வாங்க அவன் கையை நீட்ட, வெடுக்கென்று கையை பின்னே இழுத்து, “என் ஸ்டேடஸ்க்கு பஸ் போதும். நீங்க கிளம்புங்க”, அலட்சியமாக சொல்லிக் கொண்டே நடையைத் தொடர்ந்தாள். அவளுடனே நடந்து கொண்டு  வலுக்கட்டாயமாக அவள் கையிலிருந்த பையை தன் கைக்கு மாற்றி தனது காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அதற்குள் சிவா எதிரில் வர, அவனிடம் பையை கொடுத்து விட்டு, “மச்சி, இந்த பேக் எடுத்திட்டு கிளம்பு. சந்தியா கூட பஸ்ல வர்றேன்”, என்று சொல்ல,

பின்னே வந்த சந்தியாவிடம், “சிஸ்டர் பயபுல முதல் முறையா பஸ்ல வருது. பாத்து கூட்டிகிட்டு போங்க” என்றான்  சிவா. பதிலேதும் சொல்லாமல் அவள்  நடையை தொடர, அவளைத் தொடர்ந்தான் கார்த்திக்.

மாலை நேரம், அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிய, ஷேர் ஆட்டோவில் பேருந்து நிலையம் சென்று பேருந்து பிடித்தால் கூட்டத்தை தவிர்க்கலாம் என்று எண்ணி  அதில் ஏற, அவள் பின்னே கார்த்திக்கும் ஏறினான். ஷேர் ஆட்டோ குலுங்கிய குலுக்கில் பதறி போய் சீட் பெல்டை தேடி விட்டு பின் மற்றவர்களைப் பார்த்து கைப்பிடியை பிடித்துக் கொண்டான். என்ன தான் இடைஞ்சலாக இருந்தாலும்  அவன் அருகாமை இத்தனை நாள் தொலைத்து விட்டதை கண்டு விட்டது போல நிம்மதி தர, துப்பட்டாவை சரி செய்வது போல, வேடிக்கை பார்ப்பது போல அவனையறியாமல் பார்க்க அவள் செய்த முயற்சியில் துளி கூட அவன் செய்யவில்லை. பேருந்து நிலையம் வந்து பேருந்தில் ஏறியதும் ஷேர் ஆட்டோவில் போல அவளருகிலே அமரப் போன கார்த்திக்கை, பின்னே வந்த பெண்ணொருத்தி “தடி மாடாட்டம் இருந்துகிட்டு பொம்பளங்க பக்கம் உட்க்கார வந்துட்டானுங்க” சாடை மாடையாக திட்டுவதை கேட்டு அவன் முழிக்க,  சந்தியா அவனிடம் எதிரில் இருந்த ஆண்கள்  வரிசையில் அமரச் சொல்லி கை காட்டினாள். ஒன்றரை மணி நேரப் பயணம்…. பேருந்தில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது….

கூட்டத்தில் என்னைத் தான் உன் கண்கள் தேடணும்

என்றெல்லாம் என்னும் பைத்தியம் ஆனேனே

அதைக் கேட்டதும் அவளுக்கு உரைத்தது. இத்தனை நேரம் அவன் பார்க்க மாட்டானா என்று தான் ஏங்கிக் கொண்டிருந்தது…

பின்னாடியிருந்து பெரியவர் அழைக்க திரும்பிய கார்த்திக், “அடுத்த ஸ்டாப்ல இறங்கணுமாம்..அந்த பொண்ணு சொல்லிச்சு” சொன்னவுடன் சந்தியாவை பார்க்க திரும்பும் பொழுது  அவன் போனில் அழைப்பு வர கவனம் அதில் திரும்பியது. “மதுகிட்ட போன் பேசற மாதிரி பாவ்லா ….என்கிட்டயுமா?“, அவளை பார்க்காததற்கு மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டே இறங்குவதற்கு தயாரானாள். அடுத்த பத்து நிமிடங்களில் இருவரும் இறங்கவும், அந்த பேருந்து நிறுத்தத்தில் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார் எஸ். எஸ்.வி, கார்த்திக்கின் மாமா.  சந்தியாவை அன்பாக விசாரித்தவர், கார்த்திக்கிடம்,

“உனக்கு பஸ்ல வர ஆசைன்னா என் பொண்ணை ஏன்டா அலைய விடுற? விட்டா இங்கிருந்து வீடு வரைக்கும் ரெண்டு மைல் நடக்கவிட்டுருப்பான்”, என கார்த்திக்கை செல்லமாய் கடிந்து விட்டு,

 “நீ காரில் ஏறும்மா…” என்றதும் அவரது அவரது ஓட்டுனர் கார் கதவை திறந்து விட  அவர் சொல்லை தட்ட முடியாமல் அமைதியாக காரில் ஏறினாள்.

வீட்டிற்கு செல்லும் வழியில் “அந்த ப்ரஸ்கார பையன் மறுபடியும் எதுவும் பிரச்சனை பண்ணானா?” ஓட்டுனர் அருகில் அமர்ந்திருந்த எஸ்.எஸ்.வி. கேட்க விழித்த சந்தியாவிடம், “பாண்டியனை கேட்கிறாங்க மாமா” என பின்னிருக்கையில் அவளருகில் அமர்ந்திருந்த கார்த்திக் எடுத்துக் கொடுத்தான்.

“இல்லை..அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றாள் அவரைப் பார்த்து வேகமாக.

ந்த நேரம் கார் கடற்கரை பங்களாக்குள்  நுழைந்து கொண்டிருந்து. “ம்ம்… காதி அநாவசியமாக யார் வம்புக்கும் போக மாட்டான். அந்த பையனை ஏன் கவனிக்க  சொன்னான் இப்போ தான புரியுது!” என்று சிரித்துக் கொண்டே சொன்ன எஸ். எஸ். வி.,க்கு அந்த பையன் அவர்களை பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்தது தெரியாது….

ஆட்டோவை ஒரு ஒதுக்குப்புறமாக நிறுத்தி விட்டு பச்சையுடன் இறங்கினான் பாண்டியன்… சற்று தொலைவிலிருந்து அவர்கள் அந்த வீட்டிற்குள் நுழைவதை நோட்டம் விட்ட படியே, “நம்ம செவப்பியா இது? வத்தலும் தொத்தலுமா பஞ்சத்தில அடிப்பட்டவ போல இருப்பா, இப்போ தல தளன்னு தக்காளிப் பழம் போல இருக்கா! ”, அவளை உச்சி முதல் பாதம் பார்வையால் விழுங்கியபடியே கேட்டான் பச்சை.

“ஆமா பச்சை அந்த திமிர்ல தான் ஆட்டம் போடுறா...போலீஸ்காரன் வீட்டுக்கு வந்துட்டு போனதுல இருந்து சுத்தி உள்ளவங்க எல்லாம் ஒரு மாதிரி பாக்கிறாங்க. இவளால பொறந்த ஊரிலயும் மானம் மரியாதை போச்சுன்னா..பொழைக்க வந்த ஊர்லயும் இப்படி ஆச்சு!. இவளும்  இவ குடும்பமும்  அசிங்கப்பட்டு போக ஏதாவது வழி சொல்லு ...” என்றான் வெறி கொண்டவனாய்.

“இதே நம்ம ஊரா இருந்தா கள்ளிக் காட்டுக்கு தூக்கிட்டு போய் காரியத்தை முடிச்சிருப்போம். எங்களை எதித்து ஒரு பய கேஸ் போட மாட்டான்.. அப்படியே மீறினா ஆசிட் முட்டை ”, வக்கிர செயல்களை பெருமையாக சொல்லிக் கொண்டே சிகரெட்டை பத்த வைத்தான் பச்சை. ஒரு முறை புகையை உள்ளிழுத்து வெளியே விட்டவன்,

“சிட்டில செல்வாக்கா இருக்கிறனை எதித்து செய்யணும்னா யார்க்கும்  சந்தேகமே வராம செய்யணும். இந்த சிவப்பி மூடி மறைச்சிருக்க அழகை அவளுக்கே தெரியாம போட்டோ பிடிச்சு கடை விரிச்சு காட்டிட்டா மேட்டர் க்ளோஸ்” என்றான் சாவகாசமாக.

“என்ன சொல்ற பச்சை?”, அதிர்ச்சியாய் கேட்டான் பாண்டியன்.

“அவளை மயக்க மருந்து அடிச்சு கடத்திவோம்.  வேற எதுவும் செய்தா கண்டிப்பா போலீஸ்ல மாட்டிடுவோம். அதனால அவ உடம்பை போட்டோ பிடிச்சிட்டு ஓடிடுவோம். மயக்கம் தெளிந்து அவ முழிக்கிறப்போ யாரு எதுக்கு கடத்துனாங்கன்னு தெரியாது! ஆனா, அடுத்த நாள் ஊருக்கே தெரிஞ்சிடும்...அப்புறம் என்ன அவங்க அப்பன் வெளில தலை காட்ட முடியுமா…. அத்தனை பேர்  கண்ணுக்கும் விருந்தான இவளை எவன் கட்டிப்பான்?” கேட்டு விட்டு மீண்டும் புகையை உள்ளே இழுத்தான்.  

ஆட்டம் தொடரும் ...

Go to Episode 26

Go to Episode 28

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.