(Reading time: 21 - 41 minutes)

வன் உள்ளே செல்லும் பொழுது அங்கு ஞானபிரகாஷ் கதிரின் தாயரிடம் பேசிக் கொண்டிருந்தார். உள்ளே வந்தவனைப் பார்த்து கதிர் புன்னகைக்க, கவின் தலையை உருட்டியபடி,

“ ம்....நடக்கட்டும்...நடக்கட்டும்....” என்றான் கேலியாக,

அவன் தலையை ஒரு கையால் நிறுத்திய சந்துரு,

“ரொம்ப உருட்டாத...” என்றான்.

“ எஸ் பாஸ்...” என்று பம்மியவன், விட்டா தலையையே உள்ள அமிக்கிருவாரு போல, இவருகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் என்று நினைத்துக் கொண்டான் தலையை தடவியபடியே.

ஞானபிரகாஷ் சந்துருவின் அருகில் வந்து,

“ எல்லாம் சொல்லிடேன்ப்பா....இன்னும் ஒரு 15 நாள் கதிருக்கு வெறும் மெடிக்கேசன் அப்றம் ஃபிஸியோதெரபி தான் கொடுக்கனும், அதுனால்ல கதிர இன்னிக்கு டிஸ்சார்ஜ் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிரலாம். அம்மா நாளைக்கு வந்திருவா, அவ பார்த்துப்பா... கதிர் அம்மாகிட்ட பேசிட்டேன்... நீ உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிடு...” என்றுவிட்டு சென்றார்.

சந்துரு கூறவும், அனைவரும் நாளையிலிருந்து காலேஜுக்கு செல்ல ஆயத்தமானார்கள். அனு தன் தந்தையிடம் வந்து,

“ நீங்க கிளம்புங்கப்பா...இன்னிக்கு சண்டே தான, நாங்க ஈவினிங்க் கிளம்பி ஹாஸ்டலுக்கு போறோம்...நீங்க இப்போ கிளம்பினாதான் நைட் வீட்டுக்கு போகமுடியும்..” என்றாள். சரியென்று அவரும் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்.

திர் உறங்கிய நேரம் தவிர மீதி நேரமெல்லாம் ஒரே அரட்டையில் கழிய, இப்போது நர்சூம் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டார்.

மாலையானதும் பெண்கள் அனைவரும் ஹாஸ்டலுக்கு கிளம்ப யத்தனித்தனர். அனு கதிரின் தாயிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, அவள் முகத்தை வருடி நெட்டி முறித்தவர்,

“ நீ என் வீட்டுக்கு மறுமவளா வர, நான் குடுத்து வச்சிருக்கனும் கண்ணு...தங்கமா போய்ட்டு வா தாயி...நீ இருக்கயில்ல  எம்பிள்ளைக்கு ஒரு கொறவுமில்ல... வெரசா படிப்ப முடிச்சிட்டு வாதாயி...” என்றார்.

கதிரிடம் சென்றவள், அவன் தலையை வருடிக்கொடுக்க, ஏக்கத்துடன்  அவளைப் பார்த்தவனிடம்,

“ ஒழுங்கா டாப்லெட்ஸ் எல்லாம் எடுத்துக்கோ...கவனமா இரு...” என்றுவிட்டு தொண்டையை செறுமிக்கொண்டவள், “வீக் டேஸ்ல வரமுடியாது அதுனால சன்டே வந்து பாக்குறேன்...” என்றாள். ஒன்றும் சொல்ல முடியாமல் கதிர் தலையை மட்டும் ஆட்டினான்.

“ ம்ச்....ம்ச்....அனு பொண்ணு என்னமா..... ஃபீல் பண்ணுது.....” என்று கவின் உணர்ச்சிவசப்பட, இப்போது அடி விழுந்தது ஆருவிடம் இருந்து, அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு,

“ நீயுமா ஆரு....நாமெல்லாம் அப்படியா பழகிருக்கோம்.....” என்று டயலாக் விட, அவள் அசால்ட்டாக,

“ நீ யாரு மேன்....?” என்று கேட்க,

“நா....ன்.......யா....ர்.....” என்று நெஞ்சில் கைகளால் குத்திக் கொண்டு அழ, அவன் செய்கையில் அனைவரும் சிரித்தபடியே விடைபெற்றுக் கொண்டார்கள்.

றுனாள் காலேஜில்,

புதனில் ஆரம்பித்து விடுபட்ட நான்கு நாட்கள் நடந்த க்ளாஸைப் பற்றி பேசியபடி அமர்திருந்தனர் நந்து மற்றும் நண்பர்கள். இது இரண்டாம் வருடம் என்பதால் முதல் வருடத்தை விட ப்ரொஃபஸர்ஸும், பாடங்களும் கடினமாக இருக்கும் என்று சீனியர்ஸ் பயமுறுத்த, அந்த கொடுமையிலும் எப்படி குதூகலம் அடையலாம் என்று கவின் அன் கோ திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள்.

சோர்வே உருவாய் வந்து கதிரைப் பற்றி விசாரித்த வின்சியிடம், உரிய பதிலைக் கூறிய அனு அவனை தனியாக அழைத்து என்னவென்று கேட்க, ஒரே விரக்த்தியாக பதில் அளித்தவன், கடைசியில் தான் ஒரு பேப்பரில் கேரி ( தப்பா நெனச்சுடாதீங்கப்பா......கேரின்னா அரியர், அடுத்த 6 மாசத்துல்ல க்ளியர் பண்ணனும், இல்லினா ஆப்பு தான்...) என்றதும், அனுவிற்கு அதிர்ச்சியாய் ஆனது. சின்ன வயதிலிருந்தே படிப்பில் தனி கவனம் செலுத்தி படிப்பவன். எதற்காகவும் படிப்பை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளாதவன், இன்று யுனிவெர்சிடி எக்ஸாமில் ஃபெயில் என்றால் அவளால் நம்பவே முடியவில்லை. ஏன் என்று கேட்டவளிடம், கேட்காதே என்றுவிட்டு போய்விட்டன். அனுவிற்கா தெரியாது, அவள் ஆற்றாமையுடன் ஆருவை பார்க்க, அவள் இதில் எதிலும் சம்மந்தபடாதவளாய் சந்தோஷமாய் பேசிக்கொண்டிருந்தாள். இன்று எப்படியும் இதற்கு ஒரு முடிவு தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் முடிவு செய்துக் கொண்டாள்.

கவின் அனைவரிடனும் பேசி சிரித்துக் கொண்டிருந்தாலும், அவன் கண்கள் என்னவோ ஜெனியைத் தேடி தேடி அழுத்தது. அவளை அந்த சுற்றுப் புறத்திலேயே காணவில்லை. வருத்தத்தை மனதிலே மறைத்துக் கொண்டு கேலியில் பங்கு கொண்டான். அவன் தேடியதை இரு விழிகள் கவனித்துக்கொண்டது.

நேரம் ஆகவும், ஒருவழியாக அனைவரையும் க்ளாஸிற்கு அள்ளிச் சென்று அடைத்தார்கள். உள்ளே நுழையும் போதுதான் கவனித்தான், ஜெனி நந்துவின் அருகில் அமர்திருந்தாள். அவன் உள்ளே வருவது தெரிந்தும், நிமிர்ந்து கூட பார்க்காமல், சோர்ந்து போன முகத்துடன் இருந்தவளைக் கண்டபோது, என்னதான் இதை எதிர்பார்த்திருந்தாலும் கவினுக்கு கஷ்டமாக இருந்தது. அவளையே பார்த்தபடி தன் இடத்தில் போய் அமர்ந்தவன், ப்ரொபஸர் வந்ததும் மற்றதை மறந்து பாடத்தில் ஒன்றிப் போனான்.

ன்ச் ப்ரேகில், கேன்டினில் அனு, ஆரு, நந்துவுடன் அமர்திருந்தவளின் அருகில் வந்தமர்ந்தான். அவன் வந்து அமர்ந்தவுடனே அவள் எழுந்து செல்ல முயல, அவள் கைகளை பிடித்து அழுத்தி அவளை அமர வைத்தான்.

"இப்போ எதுக்கு எழுந்து போற..?"

"..."

"பேசு.. சொன்னாதான தெரியும்.."

"...."

"அப்பா ரொம்ப கோபமா பேசிட்டாங்களா..?"

"இல்லை" என்ற தலையாட்டல் மட்டுமே பதிலாய் கிடைத்தது.

"அப்புறம் ஏன்... please  இங்க என்ன நிமிர்ந்து பார்த்து பேசு.."

என்று கூறியவுடன் வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றவள், அவள் பின்னாலேயே இவனும் செல்ல, யாருமில்லாத ஒரு மரத்தடியில் அமர்ந்தவள், முகத்தை மூடியபடி அழவும், கவினும் அவள் அருகில் அமர்ந்து கொண்டு அவள் முதுகை தட்டிக் கொடுத்தான். பிறகு

"அழாத ஜெனி.. இங்க பாரு, அழுறதால ஒண்ணுமே நடக்க போறது இல்ல. எழுந்து உட்காரு.. கண்ண தொட" அவள் அவ்வாறே செய்யவும்

"அப்பா தான் கோவமா பேசலைல, அப்றம் ஏன்..?"

"Daddy என் கூட பேசவே மாட்டேங்கிறார் கவின்.. காலைல எழுந்ததிலிருந்து அவருக்கு எல்லாமே என் கையால தான் செய்யனும். ஆனா இப்போ என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்கிறார். கஷ்டமாயிருக்கு கவின்.. இதுக்கு அவர் என்ன திட்டிறலாம்”.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கவின் சிந்தனையில் ஆழ, அவனை நிமிர்ந்து பார்த்தவள்

"எனக்கு நீயும் வேணும், அப்பாவும் வேணும் டா.. நான் என்ன பண்ணட்டும் சொல்லு..?" என்று அழுதபடியே கேட்க, அவள் கண்களை துடைத்துவிட்டபடி

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.