(Reading time: 21 - 41 minutes)

சார்..” என்ற கவினின் இடைச் சொறுகல் கேட்க, 

“ என்னடா..? “ என்றவனிடம்,

“ கைல சாப்பிட முடியலைன்னா....ஸ்பூன்ல கூட சாப்பிடலாம்...இதோ எங்கிட்ட இருக்கே இது மாதிரி....” என்றான் பவ்யமாக,

“ உன் ஸ்பூன்ல சாப்பிடுறதுக்கு, நேரடியா பாய்சன சாப்ட்டுறலாம்....” என்றான் சிரிக்காமல். அதைக் கேட்டு மற்ற அனைவரும் சிரிக்க,

“ ம்....சனி பகவான் ஏ.சியோடு செட்டில் ஆயிட்டார் போல இருக்கு...” என்றான் தனக்குள்ளே.

“எங்கடா.?.” அருண்,

“ எங்க...என் நாக்குல தான்..!!!.” என்றான் விரக்தியாக.

ஒருவாறு சாப்பிட்டு முடித்த சந்துரு,

“ போதும்டா...தாங்க்ஸ் செல்லம்...” என்றபடி நந்துவின் தலையை செல்லமாக தட்டியவாறு எழுந்தவன், ஒரு வாய் தண்ணீரை விழுங்கிவிட்டு,

“ மறந்துட்டேன் பாரு...லன்ச்க்கு அப்றம் எல்லாரும் ஃபார்மக்காலஜி லேப்க்கு போயிருங்க...” என்றான்.

“ அங்க போய் என்ன சார் பண்ணனும்..? “ ஆர்வக்கோளாராக அருண் கேட்க,

“ ம்...பழைய அம்பாசிடர்க்கு டிங்கரிங்க் பார்க்கணும்...போடா...போய் பாரு என்னன்னு தெரியும்...” என்றுவிட்டு சென்றான்.

“ அசிங்கப் பட்டான் மங்குனி மந்திரி...ஹா...ஹா...” என்று கவின் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.

கை கழுவும் இடத்தில் எல்லோரும் தன்னைப் பார்த்தபடி குசுகுசுவென்று பேச, கொஞ்சம் படபடப்பானன நந்துவைவின் தோளை அழுத்தி அமைதிபடுத்தினாள் அனு. அதற்குள் கவினிடம் என்ன விஷயம் என்று கேட்டுத் தெரிந்து கொண்ட அருண் மற்றும் செல்வா, அவள் வந்தவுடன்,

“ மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்,

அண்ணன்............” என்று ஃபீலிங்கோடு பாடி அவளைக் கலவரப் படுத்திய படி லேபை நோக்கி நடந்தார்கள்.

லேபிற்கு உள்ளே நுழைந்ததும், எல்லாருடைய சீட் முன்னாடியும் ஒரு வெய்யிங்க் மெஷின் வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த கவின்,

“ஹ்ம்...எங்க நான் படிக்காம போனா, எங்கப்பா அவர் கடையில் இந்த வேலையை செய்ய விட்டிருவாறோன்னு பயந்துதான் இங்க ஓடி வந்தேன்...இங்கயும் இதே வேளையை குடுக்குறாங்களே...” என்று நொந்து போனான். ஆனாலும் கொஞ்ச நேரத்திலேயே அந்த வேளை பிடித்துவிட, மும்முரமாக அதைக் கொண்டு மவுத் வாஷ், பேஸ்ட் என்று செய்யத் துவங்கினான்.

லேப் முடிந்து வெளியே வந்தவர்களை மறித்த சீனியர்ஸ், நாளைக்கு ஃப்ரெஷர்ஸ் வரப் போவதாள், காலையில் சீக்கிரமே வந்து ராகிங்கில் கலந்து கொள்ளவேண்டும் என்றுவிட்டுப் போனார்கள். ஒரே குஷியுடன் நாளைக்கு என்னன்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவர்கள் பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த சந்துரு, அனுவையும், நந்துவையும் தனியாக அழைத்து,

அனுவிடம்,

“ கதிர் வீட்டுல நல்லா செட் ஆயிட்டான். அம்மா வந்துட்டாங்க அதுனால நீ நிம்மதியா இருப்பியாம், கதிர் சொல்ல சொன்னான்..இது கதிரோட நம்பர், ஃப்ரீயா இருக்கப்போ கால் பண்ணு...இனிமேல் என்னால இந்த போஸ்ட்மேன் வேளைலாம் பாக்க முடியாது. எதுவா இருந்தாலும் நீங்களே பேசிக்குங்க...” என்றான். பிறகு,

“ அவ்ளோ தான், நீ போகலாம்..” என்றான்.

“ சார்...இதெல்லாம் டூ......மச். நந்து நாயில்லாம ஹாஸ்டல் வரை தனிய வரமாட்டா..” என்று வம்பிலுக்க,

“ அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம்...நீ கிளம்பு...” எனவும் அவளும் சிரித்தபடியே அங்கிருந்து நகன்றாள்.

“ வர சாட்டர்டே உன்ன அம்மாகிட்ட கூட்டிட்டு போகப்போறேன்....பீ ரெடி..” என்றான் போலியாக மிரட்டியபடி,

“ சாட்டர் டேயா...அப்பா வர்றாங்களே...” என்றாள் குழப்பத்துடன்,

“ அப்போ சரி, அவங்களையும் மீட் பண்ண வச்சிரலாம்..” என்றான் ஈஸியாக,

“ நான் இன்னும் அப்பாகிட்ட ஒன்னுமே சொல்லலையே...” தவிப்புடன் சொன்னவளின், தோள்களை மென்மையாக பற்றியவன்,

“ ரீலாக்ஸ் பேபி... நீ எதுவும் அப்பாகிட்ட சொல்ல வேணாம்... நான் உங்கப்பாகிட்ட நேரடியா பெர்மிஷன் கேட்டுக்கிறேன்....பொண்ணு கேக்கப் போறேன்னு வச்சுக்கோயேன்...நீ சொன்ன மாதிரி உங்கப்பாவே உன்ன எங்கிட்ட தாரைவார்த்துக் குடுக்கட்டும்...” என்றான் தீவிரத்துடன்.

பிறகு இயல்பாகி,

“ குழப்பத்த ஃப்ரைடே வரை ஒத்திப் போடு...ஏன்னா.. நான் மூனு நாள் ஹௌஸ்சர்ஜன் கான்ஃபரன்ஸ்க்கு நாளைக்கு கோவை போயிருவேன்....” என்றான் சோகமாக, நந்து ஏற்கனவே அவன் தாயை சந்திப்பதை நினைத்து பயந்தவள், சந்துருவையும் மூன்று நாட்கள் பார்க்க முடியாது எனவும், சோர்ந்து போனாள்.

“ இப்பிடி முகத்த வச்சுக்கிட்டா நான் எப்பிடி சந்தோஷமா போறது.. ப்ளீஸ் பேபி எனக்காக ஒரே ஒரு ஸ்வீட் ஸ்மைல்..” என்று கெஞ்சியும் அவள் உம்மென்றே இருக்க,

“ இப்போ நீ சிரிக்கலைனா, நான் எல்லார் முன்னாடியும் கிஸ்ஸடிச்சிருவேன்...” என்று ஹஸ்கி வாய்சில் மிரட்ட, பயந்து போனவள் கஷ்ட்டப்பட்டு “ஈ” என்று சிரித்து வைத்தாள். அதை தன் கேமராவில் பதித்துக் கொண்டவன், அதன் மேல் உதட்டைப் பதித்துவிட்டு,

“நான் இந்த கிஸ்ஸ தான் சொன்னேன்...நீ எத நெனச்ச..?” என்று அப்பாவியாய் கேட்க, ஒரு கணம் விழித்தவள், பின் செல்லமாக அவனை தள்ளிவிட்டுவிட்டு ஓடினாள். அவள் செய்கை அத்தனையையும் அவன் செல்ஃபோன் பதிவு செய்து கொண்டே இருந்தது.

ரவு, ஹாஸ்டலில் தனது அறையில் சந்தோஷமாக நடமாடிக் கொண்டிருந்த தீப்தியை விசித்திரமாக பார்த்துக்கொண்டிருந்தாள் நந்து. நந்துவைப் பார்த்து புன்னகைத்தவள், அவளிடம் வந்து தான் மிகவும் சந்தோஷமாய் இருப்பதாகவும், நாளைக்கு அவளுக்கு மிகவும் முக்கியமானா நாள் என்றும் கூறினாள். நந்துவுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் புன்னகைத்து வைத்தவள், கிடைத்த கேப்பில் அனுவின் அறைக்கு பறந்தாள். ஆனால் அங்கு அனுவுக்கும் ஆருவுக்கும் தீவிரமாக வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கவும், சத்தமில்லாமல் தனதறைக்கே திருப்பினாள்.

அனுவின் அறையில், அனு கோபத்துடன் ஆருவிடம்,

“ நீ பண்றது தப்பு ஆரு...உன்னால ஒருத்தன் தடுமாறிப் போரான்னா, நீதான் அத சரி பண்ணனும். இதுக்கும் அவன் நம்ம கூடவே வளர்ந்தவன் தான..!!!” என்றவுடன், ஆருவும் கோபத்துடன்,

“ என்ன சொல்ல வர்ற...நாந்தான் அவன ஃபெயில் ஆக சொன்னேனா?...படிக்கிறதும் பாசாகுறதும் அவனோட ரெஸ்பான்ஸிபிலிட்டி....இதுல நான் எங்கிருந்து வந்தேன்...” என்றாள்.

“ தப்பே பண்ணாம யாராவது இருக்க முடியுமா, சொல்லு?...நாம தான் சூழ்நிலைய புரிஞ்சுகிட்டு அவங்கள மன்னிக்க முயற்சி செய்யனும்..அட்லீஸ்ட் அவங்கள புரிஞ்சுக்கவாவது முயற்சி செய்யனும்...” என்றாள் அனு

“ அதாவது, அவன் செஞ்சது தப்பில்லன்னு சொல்லி, அவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டனும், அதான. .ஒரு விஷயத்த நல்லா புரிஞ்சுக்கோ அனு, அவன மன்னிச்சாலுமே, அவனோட காதலை என்னால ஒத்துக்க முடியாது. ஏன்னா...எனக்கு இந்த மாதிரி காதல் மேல துளிகூட நம்பிக்கை இல்ல. அதுக்காக உன்ன தப்பு சொல்ல வரல... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி நம்பிக்கை இருக்கும்.. என்னப்பொறுத்தவரைக்கும் கல்யாணத்துக்கு அப்றம் வர்ற காதல்ல தான் உண்மையும், நேசமும் அதிகமா இருக்கும் நம்புறேன். அதுனால என்ன மாத்த முயற்சி பண்ணாத, வேணுன்னா அவன மாத்த முயற்சி பண்ணு...” ( எவ்ளோ பெரிய டயலாக்....) என்றுவிட்டு அறையை விட்டு வெளியேரினாள்.

அவள் சொன்னதைக் கேட்ட அனுவிற்கு சோர்வாய் இருந்தது. இதை எப்படி சரிசெய்வது என்று, அவள் சொன்னதையே வெகு நேரம் யோசித்தவளின் மண்டைக்குள் மணியடித்தது. “ சே...இத முன்னாடியே யோசிக்காம போய்ட்டோமே....பரவாயில்ல இப்பவும் லேட் ஆயிடல.. சீக்கிரமே செயல்படுத்த வேண்டியதுதான்...” என்று ஒரு வில்லி சிரிப்புடன் தன் ஃபோனை கையில் எடுத்தாள். 

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 11

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 13

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.