(Reading time: 21 - 41 minutes)

"னக்கு ரெண்டு பேருமே கிடைப்போம், என் மேல நம்பிக்க வை. அழுறத நிறுத்து. அழுகை மனுஷன கோழையாக்கிரும்.. நீயே சொல்லு பொய் சொல்லிட்டு வந்தா எந்த அப்பாக்கு தான் கோபம் வராது... அது சரி அன்னிக்கு எப்படி அவர் அங்க வந்தார்..?"

"Rotary club  விஷயமா ஞானபிரகாஷ் அங்கிள பார்க்க வந்திருக்கார். என்னோட ஸ்கூட்டிய பார்த்துட்டு விசாரிச்சு மேல வந்திருக்கார். ஆனா நான் நெஜமாவே வீட்டுக்கு போனதுக்கப்புறம் டாடி கிட்ட ஹாஸ்பிட்டல் போனத பத்தி சொல்லனும்னு தான் நெனச்சிட்டு இருந்தேன். ஆனா அத சொல்றதுக்கு அவர் வாய்ப்பே குடுக்கல. இதுக்குத்தான்.. இப்படியெல்லாம் ஆகும்னு தான் உன்கிட்ட வேணாம் வேணாம்னு சொன்னேன். இப்ப பாரு.... நான் எப்படி அவர சமாதானம் பண்ண போறேன்னு தெரியல..."

தன்போக்கில் புலம்பியவளின் வார்த்தையைக் கேட்டு முகம் மாறியவன், பிறகு அவளிருக்கும் சூழ்நிலையை புரிந்து கொண்டு புன்னகைத்தபடி

"இப்ப இன்ன உங்க அப்பாவ உன்கூட பேச வைக்கனும், அட்லீஸ்ட் திட்டவாவது வைக்கனும்.. அதான?" என்றான்.

"ஆமா" என்று தலையாட்டியவளை பார்த்து

“ஓ.கே உங்க அப்பாக்கு 3 நாள் டைம் குடுப்போம்.. அதுக்கு மேலேயும் அவர் பேசலைனா.. நம்ம ப்ளான ஒர்க் அவுட்  பண்ணலாம்.." என்றான்.

"என்ன ப்ளான் ?"

"அத மூனு நாளைக்கு அப்புறமா சொல்றேன்.."

"அவர் பாராமுகமா இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் கஷ்டமா இருக்குடா.. மூனு நாள் ரொம்ப கஷ்டம்..."

"ஜெ.லோ.. பெரியவங்க நம்மகிட்ட கோபபடுறாங்கன்னா அந்தளவுக்கு உன் மேல நம்பிக்கையும் பாசமும் வச்சிருக்காங்கனு அர்த்தம். அதனால அவர் எவ்வளவு கோபமா இருந்தாலும் நீ அவர் கிட்ட எப்பவும் போலவே இரு.." என்றான்.

ஒருவாரு  சமாதானம் பண்ணி இருவரும் கிளம்பும் நேரம், அவன் கைகளை பிடித்துக் கொண்ட ஜெனி,

"ஒருவேளை எங்கப்பா என்கிட்ட பேசிட்டா, அவர் பேசுற முதல் வார்த்தை என்னவாயிருக்கும் தெரியுமா.. 'உன்கூட பேச கூடாது பழகக் கூடாது சத்தியம் பண்ணு' கிறதுதான். என்றாள்.

"அப்படி அவர் கேட்டா சத்தியம் பண்ணிரு ஜெனி" என்றவன் நிதானமாக எழுந்து போக, அவன் பின்னாலேயே போனவள்

"எனக்கு பொய் சத்தியம் பண்ணி பழக்கமில்ல.." என்றாள் கோபத்துடன்.

"நானும் உன்ன பொய்யா பண்ண சொல்லல.. உண்மையாவே தான் சொல்றேன்.."

"நீ சொல்றதுக்கு அர்த்தம் புரியுதா உனக்கு?"

"எல்லாம் புரியுது, உனக்கு தான் புரியல.. நல்லா கேட்டுக்கோ.. எனக்கு தேவை நீ என்ன விரும்புறியான்றதுதான்.. உனக்கு தேவை உங்கப்பாவோட பழைய அன்பு, அது கிடைக்கறதுக்கு நாம் ரெண்டு பேரும் பேசாம இருக்கனும்னா சரிதான்..."

"இதுக்கு தான் இவ்ளோ கஷ்டப்பட்டியா?"

“ நான் உன்ன பாக்குறேனோ இல்லையோ, பேசுறேனோ இல்லையோ என்னோட உலகம் எப்பவும் உன்னச் சுற்றியே இருக்கும். நீ எம்மேல நம்பிக்கை வச்சு எல்லாப் பொறுப்பையும் எங்கிட்ட குடுத்திட்டு, நான் உன்ன பார்க்கும் போது கொஞ்சம் சிரிக்க மட்டும் செய். அத பாக்கறது கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும் அதுதான் எனக்கான பூஸ்ட்...” என்றவன் தொடர்ந்து,

“இப்போதைய பூஸ்ட் சாப்பாடு தான்...அதுனால்ல நாம போய் அத  கன்டினுவ் பண்ணுவோம்...” என்று அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு கேன்டினுக்குள் சென்றான்.

வர்கள் இருவரும் போவதை மரத்தின் மறுபக்கம் அமர்ந்து ஸ்பூனால் சாப்பாட்டை அளந்து கொண்டிருந்த தீப்தி, இவர்கள் பேசியதையெல்லாம் கேட்டவள், ஏதோ நினைத்தாற் போல புன்னகைத்தவள், சாப்பாட்டை அலட்சியமாய் கீழே வைத்துவிட்டு எழுந்து கேன்டினிக்குள் சென்றாள்.

கேன்டினுள் நுழைந்து, அவர்கள் இடத்தில் அமர்ந்தவுடன், கவின் தன் பழைய கலகலப்பை ஆரம்பித்தான். நொடியில் மாறிய அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் ஜெனி. கொஞ்ச நேரத்தில் கவினின் நண்பர்களும் வந்து கலந்து கொள்ள அந்த இடமே ரணகளமாகியது. அந்த குறும்பு கண்ணனின் ( யாரு? கவினா...?? எல்லாம் நேரம்..) லீலைகளில் திளைத்து, தன்கவலை மறந்து போனாள் அந்த கோதை சே..பேதை...கன்ஃயூஸ் ஆயிருச்சுப்பா....நீங்களே போட்டுக்கோங்க....

“ இன்னும் ஒரு சீட் காலியா இருக்கே....தல எங்க போச்சு...?” என்று நந்துவைப் பார்த்துக் கேட்க அவளுக்கு புறை ஏறியது. அந்த சமயத்தில், “ ஹல்லோ ” என்றபடி அந்த இடத்தில் வந்து அமர்ந்தது சந்துருவல்ல, தீப்தி. சிரித்தமுகமாய் அங்கு அமர்ந்தவள், அங்கு கவினைத் தவிர யாரும் இல்லாதது போல் நடந்து கொண்டாள்.

“ஹாய் கவின், ரொம்ப நாளா பாக்கமுடியலையே....இப்போ அந்த சீனியர், அவர் பேரென்ன..ம்....கதிர்...கதிர்...இப்போ எப்படி இருக்கார்? பரவாயில்லையா...ஓ.கே..நீ சாப்பிடுறப்போ ரொம்ப டிஸ்டர்ப் பண்ண விரும்பல, பார்க்கலாம் பாய்...” என்று ஒரு அழகான புன்னகையையும் வீசிச் சென்றாள்.

மற்ற அனைவரும் வாயில் இருக்கும் சாப்பாட்டை விழுங்குவதா, வேண்டாமா என்று யோசித்து கொண்டிருக்க, கவின் திறந்த வாயுடன் கண்ணைச் சிமிட்டி சிமிட்டி பார்த்தான். பிறகு ஜெனியிடம் திரும்பி,

“என்னைக் கொஞ்சம் கிள்ளு...” என்று கேட்க, அதற்காகவே காத்திருந்தாற் போல அவன் பாதி சதையை பிய்த்து எடுத்து விட்டாள்.

“ஆஆஆஆ...” என்று அலறியவன்,

“ஸ்.....ப்பா....பாரு இப்போ வந்தவ எப்படி ஜில்லினு பேசிட்டுப் போனா...நீயும் இருக்கியே...அவகிட்ட இருந்து கத்துக்கோ...”என்றவுடன் என்ன கிடைத்திருக்கும், அதே தான் 1562 ஆவது தடவையாக ஜெனியிடம் இருந்து மொத்து வாங்கி ஜென்ம சாபல்யம் அடைந்தான். பிறகும்,

“ இப்போ வந்தது யாரு?...எனக்கு தீப்தி மாதிரி தெரிஞ்சது...உங்களுக்கு?? ” எனவும்,

“டேய் அடங்குடா... அது எப்படிடா, இந்த பொண்ணுகளுக்குலாம் பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா, இந்த கொள்ளிகட்டைளாம் வேணாமாமா...? “ என்று அருண் பொறாமையில் பொங்கினான்,

“அட நீ வேற ஏன்டா...நானே வில்லங்கம் ஏன் நம்மள தேடி வருதுன்னு யோசிக்கிறேன்...” எனவும்,

“ ஐய்...சும்மா வுடாதடா...நீயே முன்னாடிப் போய் அந்த பொண்ணுகிட்ட பிட்ட போட்டுட்டு இப்போ சீனப் போடுவ...உன்ன பத்தி தெரியாதா மாப்பு...” என்றான் செல்வா,

“ ஆகா...ஒன்னுகூடி குடும்பத்துக்குள்ள கும்மியடிக்காம போக மாட்டிங்க, நடத்து, நடத்து.....” என்று புலம்பும் போதே சந்துரு வந்துவிட,

“வாங்க சார், உங்கள தேடப் போயிதான் இவ்வளவு பேச்சும்...” என்றான்.

“ என்னடா சொல்ற..? “ என்றவன் அவன் சொல்வதை கேட்க நேரம் இல்லாதவனைப் போல் நந்துவிடம் திரும்பி,

“நந்து ஃபாஸ்டா ரெண்டு வாய் ஊட்டிவிடு, பேஷன்ட் வெய்ட் பண்றாங்க....ஹான்ட் வாஷ் பண்ண டைம் இல்ல...” என்றான் அவசரமாக, நந்து அதிர்ந்து போய் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தயங்க,

“ அங்க என்ன பாக்குற...எனக்கு பசிக்குது, ஊட்டிவிடுறியா, இல்ல பசியோட போகட்டுமா.?.” என்று எழ முயலவும், அவசரமாக தனது ப்ளேட்டிலிருந்து ஒரு வாய் தக்காளி சாதத்தை எடுத்து அவன் வாயில் தினித்தாள். சாதாரணமாக அதை வாங்கிக் கொண்டவனின் கண்கள் மட்டும் ரகசியாய் மின்ன, சிவந்த கன்னங்களை மறைக்க அடுத்தடுத்த வாயை ஊட்டினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.