அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த பாண்டியன் தன் தவறை உணர்ந்தான்.... “கூடா நட்பு கேடில் முடியும்” என்பதை! தாய் தகுந்த நேரத்தில் சரியாக வழி நடத்தி இருந்தால் இந்த கேடு கெட்டவனை சந்தித்திருக்க மாட்டான்....
என்ன தான் வன்மம் இருந்தாலும், ஒரு பெண் தன் கண் முன் கற்பழிக்க படுவதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை... பச்சை, படம் பிடிக்க வேண்டும் என்று சொன்ன பொழுதே மனதிற்குள் இருந்த உறுத்தல் அவனின் இந்த செயலில் பூதாகாரமானது. பச்சையை உடனடியாக தடுக்க நினைத்த பொழுது அந்த சம்பவம் நடந்தது...
நகரின் முக்கிய புள்ளியின் ரத்த சொந்தம் என்ற பயத்தாலும், கார்த்திக் முகத்தில் தெரிந்த பதட்டத்தாலும் தாமதியாமல் தனது அலுவலகத்தை தொடர்பு கொண்ட எம்.எஸ்., அடுத்த ஐந்தே நிமிடங்களில் கார்த்திக் அலைபேசி எண்ணை வைத்து அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டார்..... அது அவள் கடத்த பட்டிருப்பதை உறுதி செய்தது... பின் சுற்றி உள்ள காவல் நிலையத்திற்கு தகவல், செக் போஸ்ட்டில் வாகன சோதனை என தேடும் படலம் அரங்கேறியது.... கார்த்திக்கின் அலைபேசி எண்ணை தொடர்ந்து ட்ராக் செய்ய சொல்லி விட்டு எம். எஸ்.ஸும் கார்த்திக்கும் கிளம்ப, சக்தியும் உடன் வர அடம்பிடித்தாள். மதுவை நிரஞ்சனுடன் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு எம்.எஸ்ஸின் போலீஸ் ஜீப்பிலே கிளம்பினர்.. .எல்லாம் நொடிப் பொழுதில் நடந்து கொண்டிருந்தன....
“கார்த்திக், உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? உங்க மாமாவுக்கு வேண்டாதவங்க இப்படி யாராவது....” கேட்டார் எம்.எஸ். வாகனத்தை புயல் வேகத்தில் சைரன் ஒலி எழுப்பி ஓட்டிக் கொண்டே....
அவனிருந்த நிலையில் எதுவுமோ தோன்றவில்லை.... சந்தியா மட்டும் தான் மனதில் நின்றாள்...அவளுக்கு என்ன ஆகுமோ? ஏது ஆகுமோ? என்று உணர்வுகளின் பிடியில் இருந்தான்... மூளை முடங்கி கிடந்தது... அவர் கேட்ட கேள்வி கூட விளங்கவில்லை....
இயந்திரத்தனமாய் மறுப்பாய் தலையாட்டினான்....
“யாராவது அவங்க ப்ரண்ட்ஸ்ல, சொந்தக்காரங்களில் காதலிக்கிறேன்னு அவளை விரட்டி இருக்காங்களா....அதைப் பத்தி சொல்லியிருக்காளா? அவ கிடைக்கலைங்கிற ஆத்திரத்தில் கூட கடத்தி இருக்கலாம்....”, எம். எஸ். கவனத்தை ரோட்டில் செலுத்திக் கொண்டே தனது விசாரித்தார்.... அதற்கு அவன் பதில் சொல்லும் முன்னே சக்தி இடை புகுந்தாள்...
“காலேஜ்ல எல்லாருக்கும் அவ மேல தனி மரியாதை இருக்கும்...யாரும் அவகிட்ட வம்பு இழுத்ததே இல்லையே...”, சொல்லிக் கொண்டே வெடித்து அழுதாள்....
அவள் அழுகைக்கு சட்டை செய்யாமல், “சொந்தக்காரங்க....மாமன், ‘மச்சான், அத்தான் இந்த மாதிரி யாராவது பகை...இல்ல காதல் கீதல்ன்னு...ஏதாவது”, விசாரிக்கும் தொனியில் கேட்டார் எம்.எஸ்.....
“அது....யாரும் இல்லை....” என்று அழுதவள் யோசனை வந்தவளாய், “இல்லை....ஆனா, சந்தியாவோட மாமாவை கட்டி வைக்க முடிவு செய்து பின்ன நிச்சயத்தை நிறுத்திட்டாங்க. அந்த ஆத்திரத்தில் அவன் சண்டை போட்டு சந்தியா மீதுள்ள கோபத்தில் பக்கத்து வீட்டு அக்காவை கூட கழுத்தை நெரித்து மிரட்டியிருக்கான்... ஒரு வேளை அவன் ஜந்துவை ஏதாவது....”, நினைக்கும் பொழுதே குமுறி அழுதாள்.... சக்தி சொன்னதும், கார்த்திக்கிற்கு பொறி தட்டியது... “அந்த...பாண்டியன்........வெள்ளை ஆம்னில...எங்க பின்னாடி.....”, புள்ளிகளை இணைக்க முயன்றான்.... நெஞ்சம் பதை பதைக்க....
கார்த்திக் முழுதாக சொல்லி முடிக்கும் முன்னரே ...எம். எஸ். அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்....அவனது அலைபேசி எண்ணை கண்டுபிடித்து ட்ராக் செய்ததில் அவன் தான் கடத்தியிருகிறான் என்பது உறுதியானது.... தொடர்ந்து தனது அலுவலத்தோடு தொலைபேசியில் தொடர்பில் இருந்து அவன் செல்லும் திசையில் வேகமாகச் சென்றனர்... அவர்கள் கிட்டத் தட்ட அவனை நெருங்கும் சமயம்.... வெள்ளை நிற ஆம்னியை கண்டறிந்தால் பிடித்திடலாம் என்ற நிலையில் அந்த சம்பவம் நடந்தது....
பாண்டியனின் வாகனத்திற்கு முன்னே சென்ற விளையாட்டு சாதனங்களை சுமந்து சென்ற அந்த சிறு லாரியிலிருந்த கயிறு கட்டவிழ்ந்து இருந்தது. ரோட்டில் இருந்த பள்ளத்தில் இறங்கும் பொழுது வேகமாக ஓட்டப் பட்ட அந்த லாரியின் பாடி குலுங்க அதிலிருந்த பந்து, ஹாக்கி கட்டை போன்ற பொருட்கள் ஒன்றிரண்டாய் சிதற ஆரம்பித்தது....கூடவே ஈட்டி எறியும் விளையாட்டிற்கான கூர்மையான இரும்பு கம்பிகள்...
அதில் ஒன்று அதி வேகமாக, அசுரனை வதைக்க வேலவன் அனுப்பிய வேலாயுதம் போல.... தீவினை பலனாக கால தேவன் அனுப்பிய கருங்கல்லைப் போல.... பலரது வாழ்க்கையை நரகமாக்கியவனை நரகத்திற்கு அனுப்ப எமதர்மன் அனுப்பிய பாசக் கயிறைப் போல.... அசுரனை மிதித்து கொல்ல வந்த துர்க்கையின் பாதம் போல அந்த வேனை நோக்கி பாய்ந்து வந்தது.
பச்சையின் பேச்சிலும் செய்கையிலும் கூடவே சன்னமாக கேட்ட காவல் துறை வாகனத்தின் சைரன் ஒலியில் கவனம் சிதறிய பாண்டியன் வாகனத்தை நோக்கி வந்த ஈட்டியை மிக அருகில் வந்த பின் கவனித்து திடுக்கிட்டு தடாலடியாக ஸ்டேரிங்கை திருப்பி கொண்டே பதட்டத்தில் ப்ரேக்கை ஓங்கி அழுத்தினான்.... திடீர் ப்ரேக்கால் காமப் பசியில் வேட்டையாட ஆயத்தமாகி நின்ற பச்சையின் உடம்பு அந்த வேன் சென்ற வேகத்தில் காரின் கண்ணாடியில் தூக்கி எறியப் பட, அதில் முட்டிய அவன் தலையை கண்ணாடியை துளைத்துக் கொண்டு வந்த ஈட்டி பிளந்தது....
அவனுடனே தூக்கி எறியப் பட்ட சந்தியா காரில் மோதி அடி படாத படி அந்த காமுகனின் உடலே வேலியாகிப் போனது....அவன் மீது மோதி முன்னிருக்கை இரண்டிற்கும் நடுவில் மல்லாக்க விழுந்தாள்... அதில் இடது தோள்பட்டை எலும்பு உடைந்தது.....விபத்து கொடுத்த அதிர்ச்சியும், அடிபட்ட வேதனை தாங்காமல் லேசாக கண் விழித்தவள் முன்னே பாண்டியன்......
ஸ்டீயரிங்கில் முட்டியிருந்தவன் போட்டிருந்த கண்ணாடி உடைந்து கண்களுக்குள் குத்திக் கொண்டிருந்தது....வலியை உணர்ந்தாலும் தலையில் அடிபட்டதில் அசைய முடியாமல் கிடந்தவனின் வாயிலிருந்து வந்த “வலிக்குது....வலி.....க்குதே....” என்ற முனகல் சத்தம்.
மயக்கமான நிலையில் இருந்தாலும் மூளை சும்மாவே இருக்காது.... கனவில் மிதக்கும்....பழைய சம்பவங்களை கோர்த்து புதுக் கதைகளை தயாரிக்கும்....ஏதேதோ எண்ண ஓட்டங்களுக்கு இடையே தான் அவள் கண் திறந்தாள்....பாண்டியனின் தலையில் வழிந்த ரத்தம், அவனின் கதறல் மனதின் ஆழத்தில் இருந்த பூமாவை காப்பாற்றிய நன்றியுணர்ச்சியை கிளறியது... டவுசரை காப்பாத்தணும் என்று எண்ணிக் கொண்டே, மயக்கத்தில் இருந்து விடு பட முடியாமல் அந்த எண்ணம் உளறலாக வெளிப்பட்டு கண்கள் மீண்டும் சொருகியது...
சில வாகனங்களுக்கு முன் சென்ற ஆம்னி நிலைகுலைந்து தடுமாறி ரோட்டின் ஓரத்தில் நிற்பதைக் கண்டதும் அது தான் சந்தியா இருக்கும் வாகனம் என அதனருகில் விரைந்தார் எம்.எஸ். ஜீப் நிற்கும் முன்பே குதித்து இறங்கி ஓடினான் கார்த்திக்.... வேனின் கதவை போராடி திறந்து அவளைத் தேடினான்.....
முன்னிருக்கைகளின் இடுக்குக்குள் அவள் கசங்கிய பூவாய்.....முத்தம் கேட்டு இரைந்த உதடுகள் ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது.......மல்லாக்க மயங்கி கிடந்தவளின் கிழிந்த சட்டையில் வெளிப்பட்டு தெரிந்த அவள் உடம்பை பதறிப் போய் தன்னோடு வாரி அணைத்து மறைத்தான்..... கண்ணீர் பெருக்கெடுக்க, “வள்...” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை....துக்கப் பந்து தொண்டைக்குள் சிக்க சத்தமின்றி அழுதான்.....
வாழ்வில் மின்னல் போல வந்து வெளிச்சம் காட்டியவள், இருளில் தவிக்க விட்டு போய் விடுளோ என்ற பயத்தில் அவள் நாசியில் கை வைத்துப் பார்த்தான்..... அவள் சுவாசக் காற்றை உணர்ந்த பின்பும் நம்பிக்கையின்றி கன்னத்தை தட்டி எழுப்பி பார்த்தான்....
“வ...ள்...ளி...வள்ளி....வள்ளிக்கண்ணு”, அழைத்து விட்டு தன்னோடு அணைத்து “எதாவது பேசுடா” என்றான் உடைந்த குரலில்...
“சந்தியாவுக்கு என்னாச்சு” அழுகையும் பதற்றத்தோடு அவன் பின்னே வந்த சக்தியும், எம்.எஸ்ஸும் அவள் நிலைமையைக் கண்டதும் விக்கித்து போய் நின்றனர்... விரைந்து அவனருகில் சென்ற சக்தி தனது புடவை தலைப்பை அவளுக்கு மேலாடை ஆக்க, கார்த்திக் அதற்குள் அவன் சட்டையை கழட்டி போட்டு விடும் பொழுது அவள் கை அசைக்கப் படவே வலியில் “ஸ்ஸ்...” லேசான முனகல்...பின் அதுவும் நின்று விட்டது.....
அதைப் பார்த்து வேதனையில், ”சாரி டா...சாரி டா....” என்றான் கெஞ்சலாக...... “எங்கடா வலிக்குது....எனக்கு தெரியலையே” இயலாமையில் வருந்தி மெதுவாக சட்டை போட்டு விட்டவன் தன்னோடு கட்டி அணைத்து அழுது கொண்டே அவள் லஞ்சமாய் கேட்ட முத்தங்களை வாரி வழங்கினான் முகமெங்கும்! அப்படியாவது விழித்து பேசி விட மாட்டாளா என்று அவன் நெஞ்சம் துடிதுடித்தது!.... சில நொடிகளில் ஆம்புலன்ஸ் வர, அவள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டாள்.....
ithu ippo thaan paarkkirean... haa.. haa,, yeppdi yellam condn podureenga :(
Just sent my UD. Final Upate will be published soon. Sorry for making you wait this time long! Thanks for your patience! Special Thanks to Vinodharsini!
Oops sacrified my breakfast to wind up my final UD..
Is it fine sis????
:zzz
plsssssssssssssss
mondy vara wait panuma.........oooooooooooooh my god :-?
Thanks for your support and patience...
Can't waittttttttttttttt....... Plz... Plz.... Plz....
Kaadhiya paaka mudiyathu nu feelings la thapa adichutten
Super episode usha mam... i like the way kartik told to the doctor...
waiting for your next episode...
I like d way you writing d story...
All d best wishes for your final episode
wait for last episode....
Thoroughly enjoyed your story :) superb work.
aana onnu thaanga bayangra disappointment kadhi thiya kalyanatha ippadi oru varila muduchuttingale :-|
idhu vida periya sogam next episodeoda kadhai mudiya poguthe athan
Last year sandy birthday 10 episode eluthinenga Intha year oru 10 pages eluthunga mam...
ennudaya santhegam ennavenral ivvalavu kelvikalai undakka koodiya antha nerudalana sampavam intha kathaikku entha vagaiyil avasia pattathu.
oru velai kathaikku oru aluthamana climax venumnu nenachingalanu theriyala.
once again i am really sorry to say this mam.....................
muruganin vel pol vantha eeti avanai kuthiyathu. yen avan sandy yai nerunga muyarchikkum pothe avanai kuthi avalai kapatriyirukkalame.
sandy ethayum easya eduthukolla koodiya boldana character udayavalaga irukkalam but entha oru pennalum
intha mathiriyana oru aakiramippai avvalavu easyaga maranthu thooki poda mudiyathu.
oru velai kathiyin anpal, avanin venduthalal aval marakka muyarchikkalam but aval manathil irukkum antha vali avalukkul oru thaalvana ennathai erpaduthi konduthane irukkum.
appadi irukkumpothu ivvalavu naal perithaga koorapatta sandyoda boldana thanithanmai avasiyame illamal adipattu poividatha?
சந்தியா நல்ல மனது கொண்ட தைரியமான பெண் தான்... ஆனால், அவள் கையை மீறி ஒரு நடந்த சம்பவம். வாழ்க்கையில் ஆயிரம் திருப்புமுனைகள் வரலாம்.. அதே போல அவளுக்கு ஒரு துயரம் வந்து விட்டது... பெண்கள் ஏதாவது ஒரு முறையாவது முகம் தெரியாத மனிதர்களால் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறோம்... கார்த்திக் சொன்னது போல பஸ்ஸிலோ, ஓரு திருவிழாவிலே... ஒரு சந்தையிலே... நடக்க தான் செய்கிறது... உலகில் 14 இல் 1 இதே போல அவதி படுகிறார்களாம்..
சந்தியாவால் உடனே ஏற்று கொள்ள முடியாது.. அவளுக்கு அந்த நினைவுகள் வருத்தும்... நான் அதை நிறைவு பகுதியில் விவரிப்பேன்.. அதற்காக அவளால் மீள முடியாது என்பது இல்லை.. நல்லவர்களுக்கு கெட்டது நடந்தாலும் அவளை சுற்றி உள்ள நல்லவர்கள், சம்பவங்கள் அவள் மீண்டு மனமாற்றம் பெறுவதற்கு உதவுவார்கள்.
பெண்ணிற்கு உடல் வலிமை குறைத்து கொடுத்த ஆண்டவன் மனவலிமையை அதிகமாக கொடுத்திருக்கிறான்.. அதனால் தான் இந்த உலகம் இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது.
அடுத்த இது இந்த கதைக்கு தேவையா? மூன்று வாரத்தில் முளைத்த இவர்கள் காதல் பிரிவு, சந்தோஷம், ஊடல், கூடலை கடந்து துயரம் என்னும் கட்டத்தை பயணிக்கிறது.. இதிலும் ஒருவர் காயத்திற்கு மற்றொருவர் மருந்தாகி "தங்களுடைய சந்தோஷம் தங்கள் கையில்" என்பதை மனதால் உணர்ந்து இனிய வாழ்க்கை துவங்குவர்... சந்தியா இதை எவ்வாறு எதிர்கொண்டாள் என்பது அடுத்த அத்தியாத்தில் உங்களுக்கு தெளிவாகும்...
pala idangalil nadanthu kodu irukka koodiya ithagaya pathippugalai yeppothuma ennala iyalpa yetru kolla mudivathillai.
athanalathan ennavo storyla kooda ippadi oru situationa padikkum pothu easya eduthukku mudiyala............
but konjam matura yosicha intha mathiriyana vilakkangal inraya sulalil avasiyanuthan thonuthu.
and a small request mam......
ungaludaya adutha padaippugalil ippadi oru situation vanthathenral athil intha mathiriyana pathippugalai thadupatharkundana valigalaum sollanumnu ketu kolgiren.
thank you mam................
Adutha or alavirku safe thaan Sandy... But antha sambavathil iruntha aval meendu vara seiyum muyarchigal adutha episode il konjam tharuvaen.. informative aah irukkum..
but i can't accept something. ( really sorry to say this mam)
intha update post ana udanye continuesa 4 times paduchen then 1 hr thaniya yosithu pathen analum ennala samathanam agikka mudiyala sari ungakittaye ketralamnu nenachen irunthalu mathavungaludaya karuthukal epdi irukkumnu pakkalamnu thonuchu. avangala porutha varai kathai oru strongana situationoda end stage ku poguthunu nenachurukalamnu thonuhtu.
but ennala appadi yosikka mudiyala
yenna intha storya thirumpa thirumpa ethanai murai paduchirupennu enakke theriyala antha alavigu manathodu onrakoodiyatha irunthathu. cinna cinnatha sandaigal, humorous, kutti kuttiya cute romances, superana family mempers nu pasitiva and rompa softathan storya ithuvaraikkum kondu vanthurukinga.
from your comments i can see that you feel so entwined with the story. but as i said in my comment to the last epi, rape or sexual abuse is not the end in a girl's life. yes i accept it is very difficult for a girl/woman to digest the incident and she cannot forget it easily.
But as Gandhiji during the calcutta riots post partition when hindu women were raped by muslims, asked the hindu men to show their courage not by beating the men but by accepting the molested women and giving them the strength they need. Psychologically, any loss can be managed better with moral fiber and with family strength.
Ofcourse i don't have an answer on whether this scene was needed for the story.
i respect your thoughts and comment..........
but my comment is only relate about this story. i don't mean our real life................
Real lifela nadakkura visayangalai avvalavu easiya pesi theervu kaana mudiyathu...........
sexuala pathikka patta pinpum athai antha pennum avalai sutriulla samuthayamum iyalpa etru kolla vendumnu solringa i am also accept this.
but ippadi patta pathippugalai thaduppatharku ellorum muyarchi panninal nallarukkumennu nan ninaikkurn.
simpla sollanumna...........
neenga etharthathai solringa.................
naan ennudaya ethir paarpai solren..............thats all...
but yen ippadi thidilnu mudikkareenga..
atleast immediate ah next series start pannanum ok va..
one line la marriage ah mudichutingale.... waiting for the next epi
Sandy is still not convinced... Final Episodela, Konjam Flashback pola yeppadi Sandy marriagekku accept pannannu varum... Athan piragu thaan after marriage scences varum ie., Sandy's bday!
Enga kaadhi mama happy nrathala keerthana vum happy