(Reading time: 9 - 18 minutes)

19. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

"ன்னிக்கு அந்தப் பொண்ணு பஸ் ஸ்டாப்புலே நின்னுகிட்டு இருக்கும் போது ஒரு பையன் பைக்லே சர்னு வந்து நிக்கிறான் ....இந்தப் பொண்ணு துப்பட்டாவாலே முகத்தை மூடிக்கிட்டு சடக்னு ஏறி உட்கார்ந்துகிட்டு போயிருச்சு சார்..........அன்னிக்கு நான் ஆன அதிர்ச்சி....அதுக்கப்புறம் அடைஞ்ச மனக்கஷ்டம் அதுக்கெல்லாம் அளவே கிடையாது சார்.இந்தப் பொண்ணா இப்பிடின்னு....ரொம்ப நாள் வருத்தப் பட்டுருக்கேன். அப்புறமும் அடிக்கடி இதுபோல ரெண்டு பேரும் ஒண்ணாவே போவாங்க. வந்த கோபத்துலே அவங்க வீட்டுலே போய்ப் போட்டுக் கொடுத்திரலாமான்னு கூட யோசிச்சுருக்கேன். அனா அப்புறமும் அது அப்பப்போ பஸ்ஸுலே வரும்போது புஸ்தகத்தை மட்டும் என் கிட்டேதான் கொடுக்கும்....நானும் வாங்கி வச்சுப்பேன்.

அப்புறம் என்ன ஆச்சுன்னே தெரியாது அந்தப் பொண்ணு ரொம்ப சோகமா ஆயிருச்சு.பைக் பையன் அப்பப்போ வந்து ஏறச் சொல்லிக் கூப்பிடுறதும் இது திரும்பிப் பார்க்காம கூட்டத்துக்குள்ளே போய் நின்னுக்கிறதுமா நடந்துச்சு.....எனக்கு மனசுக்குள்ளே ரொம்ப சந்தோஷம்தான்னாலும் அய்யோ பாவமே என்ன பிரச்னைன்னு தெரிலியேன்னு மனசு சங்கட்டமாத்தான் இருந்தது.

இப்படி இருக்கத்துலே ஒரு நாள் அப்படி நின்னுக்கிட்டு இருக்கத்துலே முகத்தை துணியாலே மூடிக்கிட்டு வேகமா பைக்லே வந்து அந்தப் புள்ளை மூஞ்சிலெ ஆசிடை ஊத்திட்டுப் பறந்திட்டானுங்க. அய்யோ....அந்தப் புள்ளை கதறுனே கதறலையும் துடிச்சதையும் கூட்டம் பார்த்துக்கிட்டு நிக்குது சார். மேல துணியெல்லாம் கருகிப் பொசுங்கிட்டு இருக்கு.....சடக்குனு தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன் சார்....அங்கேயிங்கே சுத்தி ...கெஞ்சிக் கூத்தாடிச் சேர்த்து....அந்தப் புள்ளை வீட்டுக்குச் சொல்லிவிட்டு...ஏன் கேக்குறீங்க.....பெத்தவங்க பதுறுன பதட்டம்.........அழுத அழுகை....அவ்வ்ளோதான் சார் அந்தப் பொண்ணு அன்னியிலிருந்து ஒரு வார்த்தை பேசுறதில்லை....ஒப்புக்குச் சாப்பிட்டு உறங்கின்னு ஒரு வாழ்க்கை.....பெத்தவங்க இடி வேற....கூடப் பொறந்தவங்க இடி....ஒரு பக்க முகமெல்லாம் வெந்தபிறகு மீண்டு வருவதுங்கறது பெரிய விஷயம் சார்.......அந்தப் பொண்ணு மீண்டு வந்துச்சு சார்.....நான் மீட்டுக் கொண்டு வந்தேன் சார்......

 

அந்தப் புள்ளையோட ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் துணையா இருந்தேன் சார்.எல்லா இடத்துக்கும் அது கூடத் துணைக்குப் போறது...படிக்கப் போகமாட்டேன்னு சொன்னதை மாற்றி படிக்கச் சொன்னது....இப்பிடி...யாரும் முகத்தைப் பார்க்கவே பிடிக்காம இருந்தது கூட நாள் முழுக்கப் பேச நானிருந்தேன். மனசுக்குள்ளெ வைராக்கியமா படிச்சு முடிச்சு வேலை கிடைச்சப்புறம் தைரியமா அவங்க வீட்டுலே பொண்ணு கேட்டு கட்டிக்கிட்டேன் சார். இந்தப் பொண்ணுக்கு எப்படி வாழ்க்கை அமையும்னு கவலைப்பட்டவங்க சந்தோஷமா சரின்னாங்க.......எங்க வீட்டுலே கொஞ்சம் மனசுக்கஷ்டம்தான்....ஆனா இப்போ சரியாகிட்டாங்க....

 

அதுக்கப்புறம் அவளுக்கு நாந்தான் உலகம்.....எனக்கும்தான்....."

 

"அவங்க போட்டோ இருக்கா சார்....?"

 

"இங்கே பாருங்க....என்று பர்ஸை விரித்துக் காட்டினார்.

 

ஒருபக்கக் கன்னமேயில்லாமல் கண்கள் சுருங்கிப் போய் சுருக்கங்களை நீக்கினால்தான் ஜாடை என்னவென்றே புரியும் என்பது போல் ஒரு முகம்....தயா அசதியாகவும் அடக்கமுடியாத துக்கத்துடனும் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

 

"இடையிலே அந்தப் பைக் பையன் கூட என்ன சார் பிரச்னை.....அந்தப் பையன் ஏன் அப்பிடிப் பண்ணான்....அவங்க கிட்டே கேட்டீங்களா சார்...." எனக் கேட்டான் தயா.

"இதுவரைக்கும் அந்தப் புள்ளைகிட்டே அதைப் பற்றிக் கேக்கலை சார்...இனியும் கேக்க மாட்டேன்...அது எதுக்கு சார் நமக்கு...?" என்று சிரித்தார்.

 

யாவுக்கு முகத்திலறைந்தது போலிருந்தது. இவ்வ்ளோ நடந்தபிறகும் சந்தேகத்தின் நிழல் படாமல் இருக்கும் இவர்கள் எங்கே....எடுத்ததற்கெல்லாம் சந்தேகப் படும் நானெங்கே?....

ஷைனியைக் கட்டிக் கொண்டு அழவேண்டும் போல ஒரு உணர்வு எழுந்தது தயாவிடம். தயாவின் மறுபக்கம் விழித்துக் கொண்டது.' யாருமே சீண்டாத என்னிடம் அன்பு காட்டியதைத் தவிர வேறென்ன தப்பு செய்தாள் அவள்? அவளுக்குத்தான் நான் எத்தனை பெரிய தண்டனைகள் கொடுத்திருக்கிறேன்....சோத்துத் தட்டைத் தூக்கியெறிந்திருக்கிறேன். அடித்து விளாசியிருக்கிறேன்..இனி ஷைனியைப் பூ போலத் தாங்கப்

போகிறேன்' என்று நினைத்துக் கொண்டான்.ஊர் பேர் தெரியாத அந்த மனிதர் தெய்வம் பலத் தெரிந்தார். இனி ஊராவது....தாடிமாமாவாவது...?...சடக்கென்று பெட்டியைத் தூக்கிக் கொண்டு "சார் நான் உடனே இறங்கணும்.....உங்களை வாழ்நாள்லே மறக்கமுடியாது சார். நான் வர்றேன்...." என்றவாறு முன்பக்கமாக நகர்ந்தான்.

 

"திடீர்னு என்னாச்சுப்பா...."

 

"வாழ்க்கைனா என்னான்னு திடீர்னு புரிஞ்சுருச்சு சார்....பார்க்கலாம் " என்றவாறு கீழே இறங்கினான்.

 

புது மனிதனாக , புது நினைவுகளோடு திருந்தியவனாக புது வாழ்க்கை ஆரம்பிக்கப் போகும் கனவுகளோடு மனசு முழுக்க அன்பையும் கண்கள் நிரம்ப நீரையும் ஏந்திக் கொண்டு பெங்களூரு செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தான் தயா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.