(Reading time: 20 - 40 minutes)

***ஆபீஸ்***

““பொதுவாக என் மனசு தங்கம்...

ஒரு போட்டியின்னு வந்துவிட்டால் சிங்கம்

உண்மையை சொல்வேன், நல்லதை செய்வேன்

தானன நானா தானன நானா....

வெற்றி மேல்ல்ல்ல்ல் வெற்றி வரும்ம்ம்ம்.....

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்

ஆ ஆனந்தம் காணுவோம் என்னாளுமே”” 

என்று பரம சந்தோஷத்தில் குஷியாக பாடிக்கொண்டே தனது கேபினுக்கு சென்றான் அர்ஜுன். உள்ளே சென்ற அர்ஜுன் பக்கத்தில் இருக்கும் நவீனின் இருப்பிடம் காலியாக இருப்பதை பார்த்து சுற்றி முற்றி பார்த்தவன், ஓரத்தில் இருக்கும் ஜன்னல் மீது சாய்ந்துக்கொண்டு சோகமாக நவீன் நிற்பதை பார்த்து கொஞ்சம் ஆச்சர்யமாக பார்த்தான். இவன் இப்படி சோகமாக இருந்து பார்த்தது இல்லையே, என்ன ஆகிருக்கும் என்று யோசித்துக்கொண்டே அவனிடம் சென்றான். 

வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தவன் அவனை கண்டதும், அவன் தோள்மேல் கைபோட்டு தலையை குனிந்து சோகமாக இருந்தான். “டேய் என்னடா ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? ஏன் இப்படி இருக்க?” என்று நிஜமாகவே பதறிப்போய் கேட்டான் அர்ஜுன். அவன் அப்படி கேட்டதும் சட்டை பையில் இருந்து கைபேசியை எடுத்து அவனிடம் காட்டி, “இந்த பொண்ண எப்படி உஷார் பண்றதுன்னு சொல்றா மச்சான்” என்று கைபேசியில் இருந்த அர்ச்சனாவின் நம்பர் காட்டி சொல்லிவிட்டு அழுவதுப்போல் இரண்டு முறை மூக்கை உறிஞ்சிக்கொண்டான் நவீன். இவன் பேசியதை ஒரு நொடி அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவன் தலையில் அடித்துக்கொண்டான். “தயவு செஞ்சு இந்த நடிப்பை முதல நிறுத்தி தொலைடா கருமம் பார்க்க முடியலை” என்று நெற்றியில் கைவைத்துக்கொண்டான்.

இவன் சொல்லவும் அப்படியா இருக்கிறோம் என்று திரு திருவென முழித்துவிட்டு ஒளி மங்கிய தன் கைபேசி திரையில் தானே பார்த்துக்கொண்டு ப்பாஆஆஆஆஆ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான். “சரி விடு மச்சான் நிஜமா தான் கேட்கிறேன் இவளை எப்படிடா லவ் பண்ண வைக்குறது?” என்று திரையையே பார்த்துவிட்டு கூறினான்.

“ஏன்டா இப்படி ஆகிட்ட” என்று மெலிதாக சிரித்துக்கொண்டு அருகில் இருந்த ஜன்னலில் சாய்ந்துக்கொண்டான். “அப்படி என்னதான் சொன்னாள்?” என்று கேட்டான் அர்ஜுன்.

“ஏன்டா சொல்ல மாட்ட உன் காட்டில் மழை உனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆன திமிருடா” என்று அழுத்துக்கொண்டு, “என்ன பேசினாலும் உஷாரா இருக்காள்டா காதல் மேல எனக்கு நம்பிக்கை இல்லை என் அம்மா பாக்குற பையனை தான் கல்யாணம் பண்ணிபேன்னு ஒத்தை காலில் நிக்குறாள்டா” என்று அலுத்துக்கொண்டான்.

“அடலூசு அவளேதான் ஒரு ரூட் தராலே அதில் முயற்சி செய்ய வேண்டியது தானே?!” என்று இலகுவாக கூற, “என்னதுடா புரியலையே?!” என்று மீண்டும் வினவினான்.

“அதான்டா அவங்க அம்மாக்கு பிடிச்ச பையனாய் நீ மாறிடு” என்று சிறிய நக்கல் சிரிப்பில் கூறினான் அர்ஜுன்.

அவன் கூறியதும் கண்கள் விரித்து, “ஏன்டா ஏன் இந்த கொலைவெறி உனக்கு? நேரா போய் wanteda அடியை வாங்கிக்க சொல்ற...” என்று நொந்து போய் கூறினான். 

“அடவிடு மச்சான் கொஞ்சம் பொறுமையாய் இரு ஏதாவது வழி கிடைக்கும்” என்று ஆறுதல் கூறினான் அர்ஜுன்.

“பொறுமைன்னா எவ்வளவு நாள்டா?” என்று பொறுமை இழந்து கேட்டான். “நாளா??? டேய் கொஞ்சம் ஓவர்டா atlest என் கல்யாணம் வரைக்குமாவது பொருத்து இரு” என்று கூறி அவனின் தோளைத் தட்டி இழுத்துச்சென்றான்.

நேரம் மெதுவாக நகர, சிரமப்பட்டு நகர்த்திக்கொண்டிருந்தான் அர்ஜுன். மணி ஏழு என்றது அவசர அவசரமாக system ஐ off செய்துவிட்டு அரக்க பறக்க ஓடினான். வெகுநேரம் பயணித்து விடுதி அடைந்து சாப்பிட்டு படுக்கையறையில் கால் நீட்டி படுத்த உடனே மனம் துள்ளல் ஆட்டம் போட்டது. கை பேசியை எடுத்து, “my darling” என்ற நம்பர்க்கு அழைத்தான்.  

எப்போதும் போல் அவனது அழைப்பிற்காக கைபேசி திரையை பார்த்துக்கொண்டிருந்தவள் அவனது அழைப்பு வந்ததும் சின்னதாக ஒரு வெட்கதோடான புன்னகை விரிய அழைப்பை ஒரு ப்ளானோடு எடுத்தாள்.

“ஹலோ...” பாதி தூக்கத்தில் பேசுவது போல் நடித்தாள்.

அவளது குரலில் மயங்கி சிரித்தவன் “ஹே நடிக்காதடி” என்று கிண்டல் செய்ய. அச்சச்சோ கண்டு பிடுசுட்டானே என்று நினைத்துக்கொண்டு “நான் ஏன் நடிக்கணும் நிஜமாவே நான் தூங்கிட்டேன்” என்று தூக்கத்தோடு பேசுவது போல் நடிப்பை தொடர்ந்தாள். 

“அப்போ நீ தூங்கிட்டு இருந்த அப்படிதானே?”

“ஹ்ம்ம் எத்தனை தடவை சொல்லுறது ஆமாம்....” என்று வேண்டும் என்றே அலுத்துக்கொண்டாள். “ஆனால் தூங்கிட்டு இருந்தவங்க எப்படி முதல் ரிங்குலையே போன் அட்டென்ட் பண்ணின????” என்று கிண்டல் செய்து சிரிக்க, அட லூசு அஹல்யா இப்படியா சில்லிதனமாய் மாட்டிக்கொள்வது என்று தன்னை தானே நொந்துக்கொண்டு “அ... அது.. முதல் ரிங்குலையே முளித்துடேன் அதான் எடுத்தேன்” என்று மழுப்பினாள்.

அவள் தட்டு தடுமாறி பேச அதை கேட்ட அர்ஜுன் சத்தமாக சிரித்துக்கொண்டே “சரி சரி நம்பிட்டேன் கஷ்ட்டப்பட்டு நடிக்காத... இப்போ முளுச்சிட்ட தானே இப்போ பேசு...” என்று குரலில் ஆர்வம் காட்டி கேட்டான். அவனது சேட்டைகளை எல்லாம் ரசித்தவண்ணம் “ம்ம்ம் ஹ்ம்ம் எங்க வீட்ல கல்யாணத்துக்கு முன்னாடி இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க” என்று மெல்லியதாக சிரித்துக்கொண்டே கூறினாள்.

“பாருடா வீட்டுக்கு பயந்த புள்ளைய?! ஓவராய் சீன் போடதிங்க மேடம்... எல்லாம் நேரம் அவன் அவன் கஷ்ட்டப்பட்டு காதலை வீட்டில் சொல்லி திருமணத்துக்கு அனுமதி வாங்குறதுக்குள்ள உயிர் போய் உயிர் வருது எல்லாம் ஈஸியா கிடைதிடுச்சுல அதான் இவ்வளவு வாலுத்தனம் பண்ணுற” என்று கிண்டல் தோணியிலே எதார்த்தத்தை கூறினான்.

“அடப்பாவி கோழிகண்ணா touchwood touchwood” என்று படுத்திருந்த கட்டிலை தொட்டுவிட்டு “ஏன்டா இப்படி ஒரு பொறாமை உனக்கு ஹ்ம்ம்” என்று பொருமினாள் லியா.

அவள் செய்கையில் நன்றாக சிரித்தவன், “ஏண்டி தினம் எதாவது ஒரு காமெடி பண்ணி என்னை சிரிக்க வச்சுகிட்டே இருக்க?!” என்று ரசித்துக்கூரியவன். “அது என்ன கோழிகண்ணா??? என் கண்ணு என்ன அவ்வளவு குட்டியாகவா இருக்கு?” என்று கேட்டான்.

“ஆமாம் குட்டியா அழகாய் வசிகரமா இருக்கு” என்று பிற்பாதி பேச்சு குழைந்தது... அவள் குரல் அவனை கிறங்க செய்ய, “உன்னுடைய கண்ணுதாண்டி அழகு பெருசா ஆளையே மயக்குகிற மாதிரி எப்பா.....” நினைத்துபார்த்து ரசித்தான் அர்ஜுன்.

“என்னை சந்தையில் இருக்கும் போது பார்த்தியேடி ஒரு பார்வை ஹ்ம்ம் அப்படியே விழுந்திட்டேன்” என்று கனவுலகில் மிதந்தான். தனக்கு பிடித்தவன் தன்னை ரசிப்பதை கேட்பதும் ஒரு சுகம் அல்லவோ அதை அவள் உணர்ந்தாள் சிலிர்த்தாள்...கண்மூடி வெட்கப்பட்டு சிரித்தாள், வெட்கப்பட்டு அவன் இதயத்தில் சாய்ந்துகொள்வது போல் நினைத்துக்கொண்டாள். இரவு நேர காற்று அர்ஜுனின் ஏக்கம் மிகுந்த ஆசையை ஏந்தி வந்து அவனது லியாவிடம் தந்தது. கிறக்கத்துடன் கிறங்கிப்போன இருவரும் சந்திரனை போகவிடாமல் இழுத்துபிடித்து இரவு நேரத்தை மெதுவாக நகர்த்தினர். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.