(Reading time: 12 - 23 minutes)

02. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

ரவிந்த் நடக்கும் குழப்பங்களை நினைத்தபடியே தன் அறைக்கு சென்றான். அங்கே முதலில் அவன் கண்ணில் பட்டது கட்டில் மீது இருந்த அந்த பொம்மை தான்.  அரவிந்த் தன் பையை ஜன்னல் வைத்தான். அப்போது ஜன்னல் வெளியே அவன் வீட்டு தெருவில் இருந்த ஒரு கருப்பு நாய் அவனையே கவனிப்பதை கண்டான். பிறகு பொம்மை பக்கம் திரும்பினான். 

Bommuvin Thedal

“ஹலோ....பொம்மு” என்று புன்னகைத்தான். அரவிந்த்.

பொம்மையோ அதே சிரிப்பை காட்டியபடி இருந்தது.

“என்ன பாக்குற? இனிமே உன்ன நான் பொம்முனு தான் கூப்பிட போறேன்... அதவிடு.....உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும்.” என்று பொம்மையின் அருகில் அமர்தான் அரவிந்த்.“

“இனிக்கு நான் ஹால் டிக்கெட்ட கொண்டு போக மறந்துட்டேன்...ஆனா யாரோ ஹால் டிக்கெட்ட கொண்டு வந்து குடுத்திட்டு போயிருக்காங்க..”

“அது மட்டும் இல்ல....என் பேக்ல யாரோ...சாக்லேட்டும் வச்சிருக்காங்க!”

“இதெல்லாம் யாரு பண்ணிருப்பாங்க பொம்மு?”

பதிலில்லை ஆனால் அரவிந்த் பொம்முவையே பார்த்தான்.

“நீ மட்டும் பேசற பொம்மையா இருந்தா எப்படி இருக்கும்.” என்று பெருமூச்சு விட்டு எழுந்து சென்ற அரவிந்த் அலமாரியை திறந்தான்.

“அரவிந்த்!......” - ஒரு இனிமையான பெண் குரல் கேட்டு திரும்பினான் அரவிந்த்.

யாரும் இல்லை கட்டிலில் அந்த பொம்மையை தவிர.

“அரவிந்த்......” என்று மீண்டும் கேட்கும் போது அரவிந்த் மனதில் பயம் எழுந்தது.

“ய..யாரது? சஞ்சய்?” என்று தன் அறையை சுற்றி தேடியபடி கேட்டான் அரவிந்த்.

“நான் பொம்மு....அரவிந்த்.” என்றது குரல்.

அரவிந்தின் பயம் அதிகமானது. மெல்ல அந்த பொம்மையின் அருகில் சென்று அதன் முகத்தை பார்த்தான். பொம்மை எப்போதும் போல தான் இருந்தது.

“நீ... நீதான பேசினது?” என்று பயத்துடன் அரவிந்த் கேட்டான்.

திடிரென பொம்மையின் முகத்தில் அசைவு தெரிந்தது. கண்கள் சிமிட்டியது. அதன் தலையும் அசைந்தது.

அரவிந்த் இதயம் வேகாமாக அடித்தது. பயத்தின் உச்சிக்கு சென்ற அரவிந்த்.

“ஆஆஆஆஆஆஆ!” என்று கத்தியபடி அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்.

“அரவிந்த்..பயப்படாத!...அரவிந்த்!” என்று பொம்மு குரல் கொடுத்தது.

“அம்மா! பேய்! பேய்! “ என்று கத்தியபடி அறையை விட்டு ஓடிய அரவிந்த் கால் தவறி சுவற்றில் தலையில் மோதி கிழே விழுந்தான். அவன் குரல் கேட்டு அங்கே பதறி ஓடிவந்தனர் அவன் அம்மா தேவியும் சஞ்சயும்.

“அம்மா அந்த பொம்ம...பொம்ம...”என்று அரவிந்த் மெல்ல மயக்கத்துக்கு சென்றான்.

ரவு ஆனது. அரவிந்த் கண் விழித்த போது அவன் அறையில் படுக்கையில் கிடந்தான். அவன் அருகில் அவன் அப்பா விஷ்ணு மருத்துவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். பாகம் அமர்திருந்த அம்மா தேவி அரவிந்தை வருத்ததுடன் பார்த்துக்கொண்டு இருந்தார். சஞ்சய் தான் அப்பாவின் கைகளை பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தான்.

அரவிந்த் தனக்கு காய்ச்சல் இருப்பதை உணர்ந்தான். அவன் உடல் இன்னும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.

“ஒன்னும் இல்ல... எதையோ பார்த்து பயந்திருக்கான்..ஒருநாள் ரெஸ்ட் எடுக்கணும்...நாளைக்கு எக்ஸாம் இருக்கா?” என்றார் மருத்துவர்.

“இல்ல ...அடுத்த எக்ஸாம்க்கு இன்னும் கொஞ்ச நாள் ஸ்டடி ஹாலிடேஸ் இருக்கு.” என்றார் விஷ்ணு.

“ஓகே...அப்ப கிளம்புறேன்! அரவிந்த் ஒன்னும் பயப்படாத...சீக்கிரம் உடம்பு சரியாகிடும்..” என்று மருத்துவர் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். விஷ்ணு அவரை வழியனுப்ப மருத்துவர் பின்னே சென்றார்.

“என்னாச்சு? அரவிந்த்....” என்று வருத்தமாக தேவி கேட்க அரவிந்த் பார்வையால் அந்த பொம்மையை தேடினான்.

“அந்த பொம்மையா..நான் வெளிய தூக்கி போட்டுடேன்....அத பார்த்துதான் பயந்தியா?” – தேவி.

அரவிந்த் எதையும் சொல்லவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.