(Reading time: 12 - 23 minutes)

ன்று இரவு அரவிந்த் வீட்டு தெருவில் இருந்த அந்த  கருப்பு நாய் மெல்ல நடந்து வந்தது. அதே நேரம் குப்பை வண்டியும் தெருவில் குப்பை அள்ள வந்து கொண்டிருந்தது. அந்த நாய் அரவிந்தின் வீட்டை பார்த்தபடி தெருவை கடக்கும் போது அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் எதோ சத்தம் கேட்டு நின்றது. குப்பை தொட்டியில் ஏதோ அசைவு தெரிந்தது.

Bommuvin Thedal“லொள்..லொள்...” என்று நாய் குரைத்தவுடன் குப்பை தோட்டியின் அசைவு நின்றது. அந்த நாய் மெல்ல குப்பை தொட்டிப் பக்கம் சென்று அந்த தொட்டியில் குப்பையை ஆராய்ந்தது. நன்கு அது ஆராய்ந்த போது அரவிந்தின் பொம்மையை அது கவ்வியது. அந்த பொம்மை எந்த அசைவில்லாமல் இருந்தது. குப்பை வண்டி நாயின் பக்கம் இருக்கும்  குப்பை தொட்டியை நெருங்கிக் கொண்டிருந்தது.

 சிறிது நேரம் பொம்மையை கண்ட நாய் பொம்மையை தூக்கி கொண்டு மெல்ல அரவிந்தின் வீட்டினுள் நுழைந்தது. வீட்டின் பின் பக்கம் பொம்மையை போட்டுவிட்டு  அங்கிருந்து கிளம்பியது நாய்.

றுநாள் காலை அரவிந்த் அறை தூக்கத்தில் இருக்கும் போது அவன் அம்மா தேவி எங்கோ தன் தம்பி சஞ்சயுடன் கிளம்புவதை கண்டான்.

“அரவிந்த்...நானும் சஞ்சயும் கோவிலுக்கு போயிட்டு வரோம்! நான் போயிட்டு வந்து உனக்கு கஷாயம் வச்சு குடுக்கறேன். சரியா? அதுவரைக்கும் நிம்மதியா தூங்கு என்ன?” என்று தேவி குரல் குடுத்து விட்டு சஞ்சையுடன் வீட்டை வீடு வெளியேறினார். அரவிந்த் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

வீடே அமைதியாய் இருந்த அந்த சமயத்தில் “கடக் தடக் “ என சத்தம் கேட்டு கண்விழித்தான் அரவிந்த் .

அது சமையல் அறையில் இருந்து வரும் பாத்திரங்களின் சத்தம். அரவிந்த் நன்கு உறங்கி கொண்டிருந்தான். சிறிது நேரம் ஆனது.

“அரவிந்த்...அரவிந்த்..” என்று யாரோ அவனை எழுப்பினர். அரவிந்த் கண் விழித்து பார்த்த போது அதிர்ச்சி. பொம்மு அவன் பக்கம் அமர்திருந்தது.

“அம்மா அம்மா “ என்று பதறினான் அரவிந்த்.

“கத்தாதே கத்தாதே “ என்று பொம்மு அவன் அவன் வாயை தன் கைகளால் மூடியது.

“என்ன பார்த்து பயப்படாத! நான் எதுவும் பண்ணமாட்டேன். நான் பேய் இல்ல...தயவு செஞ்சு என்ன நம்பு!” என்று பொம்மு கெஞ்சியது.

அரவிந்த் சற்று அமைதி காத்தான். ஆனால் அவன் கண்ணில் நடுக்கம் இருந்தது. ஒரு பொம்மை மனிதனை போல நடந்து கொள்வது அவனுக்கு நம்பிக்கையை கொடுக்க வில்லை.

“இங்க வந்ததுக்கு காரணம் உனக்கு நான் யார்னு புரிய வைக்கத்தான்!” என்று வருத்ததுடன் கூறியது பொம்மு.

“நீ...நீ யாரு?” என்று மெல்ல கேட்டான் அரவிந்த்.

“சொல்றேன்! முதல்ல இந்த காஷயத்த குடி! உனக்காக நானே இத போட்டேன்.” என்று தன் கையில் வைத்திருந்த டம்பளரை அரவிந்திடம் நீட்டியது பொம்மு.

இப்போது அரவிந்துக்கு பயம் குறைந்தது. எதுவும் பேசாமல் அந்த டம்ளரை வாங்கி குடிக்க ஆரம்பித்தான். பொம்மு செய்யும் எல்லாம் விஷயமும் ஒரு சிறுமியை போல அரவிந்துக்கு தெரிந்தது.

“நான் ஒரு பொம்மைனு எனக்கே கொஞ்ச நாள் முன்னாடி தெரிஞ்சுது. அதை தவிர வேற எதுவும் எனக்கு நியாபகம் இல்ல!” – பொம்மு

“என்ன சொல்ற நீ யார்னு உனக்கே நியாபகம் இல்லையா?” – அரவிந்த் தயக்கத்துடன்.

“ஆமா. உன்னோட பிறந்த நாள் பரிசா என்னை பார்த்த முதல் தடவை தான் நான் சுய நினைவுக்கு வந்தேன். நான் யார்னு தெரிஞ்சுக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவப்பட்டுச்சு. அதனால தான் உன்கிட்ட இத்தனை நாள் பேசாம இருந்தேன்.” – பொம்மு

“இப்போ மட்டும் என்கிட்டே பேசுறியே?” – அரவிந்த்.

“நீதான நேத்து சொன்ன?...நான் மட்டும் பேசுற பொம்மையா இருந்தா நல்லாருக்கும்னு...அதான் பேசினேன். ஆனா நீ பயந்து என்னையே பயமுறுத்தவனு நான் நினைக்கிலை ” என்று பொம்மு கூறியவுடன் அரவிந்த் மெல்ல சிரித்தான். சட்டென அவனுக்கு எதோ நினைவுக்கு வந்தவுடன்.

“அப்படினா ...என் ரூமை ஒருநாள் சுத்தம் பண்ணது....என் ஹால் டிக்கெட்டை ஸ்கூல்ல  கொண்டு வது கொடுத்தது...என் பேக்ல சாக்லேட்டை வச்சது.. நீதானா?” – அரவிந்த்.

“ஆமா”  என்றது பொம்மு. அரவிந்த் இப்போது போம்முவை நம்ப ஆரம்பித்தான்.

“ஆனா சாக்லேட் வாங்க  உனக்கு ஏது காசு?” – அரவிந்த்.

“உன் தம்பி உண்டியலை உடைச்சுதான் காசு எடுத்தேன்! அந்த சாக்லேட் வாங்கி வர்றதுக்குள்ள நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். உன்னை புரிஞ்சிகிட்டதால தான் இதெல்லாம் செஞ்சேன்! ” – பொம்மு.

“என்னை மன்னிச்சுடு....நானும் உன்னை இப்போ புரிஞ்சுகிட்டேன் ! இனிமே நாம வழக்கம் போல நண்பர்களா இருக்கலாம்!” என்று அரவிந்த் தன் கையை நீட்ட பொம்மு அழகான சிரிப்புடன் அவனுடன் கைக்குலுக்கினாள்

“ஆமா.... குப்பை தொட்டியில்தான எங்க அம்மா உன்னை போட்டதா சொன்னாங்க?” – அரவிந்த்.

“ஆமா...ஆனா நல்ல வேலைய என்னை ஒரு நாய் காப்பாத்தி உங்க வீட்டு பின்னாடி போட்டுடுச்சு...இல்லனா என்னை குப்பை வண்டி கொண்டு போயிருக்கும்.” – பொம்மு.

“நாய் காபாத்துச்சா? “ – அரவிந்த் வியப்புடன்.

“ஆமாம்....சரி..நீ படுத்துக்கோ..நல்லா ஓய்வு எடுக்கணும்” என்று படுக்கை விட்டு கிழே குதித்தது பொம்மு.

“பொம்மு...எனக்கு தூக்கம் வரல..அந்த டிவி பட்டனை அமுக்கு..டிவி பாக்கலாம்.” என்று அரவிந்த் டிவியை பார்க்க அமர்ந்தான். பொம்மு டிவியை ஆன் செய்ய நெருங்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

“அட ச்சே...இந்த கரெண்ட்டு  இப்பதான் போகனுமா?” என்று அரவிந்த் வெறுப்பாக கூறினான்.

“அரவிந்த்..இந்த டிவி பட்டனை அமுக்குனா என்ன தெரியும்?” - பொம்மு.

“நிறைய நிகழ்சிகள் பாக்கலாம்...பாடுவாங்க..ஆடுவாங்க!” – அரவிந்த்.

“ஓ...இதுதானா?...இதுக்கு எதுக்கு டிவி? நானே இதை நடத்தி காட்டுவேனே...” – பொம்மு.

“ஓ...சரி சரி...இப்ப பாட போறியா? இல்ல ஆட போறியா?” – அரவிந்த் உற்சாகமா.

“நான் பாட போறேன்....அவங்க ஆடுவாங்க....”என்றது  பொம்மு சிரித்தபடி.

“என்ன சொல்ற புரியலேயே?” – அரவிந்த்.

“இப்போ பார்” என்று பொம்மு ஜன்னல் பக்கம் அமர்ந்து பாட ஆரம்பித்தாள். அவள் பாட்டுக்கு அந்த அறையில் இருந்த எல்லா பொருட்களும் ஆட ஆரம்பித்தன. இந்த மாயாஜாலத்தை கண்டு அரவிந்த் வாயை பிளந்தான். சிறிது நேரம் அவள் பாட்டை கேட்ட அவனும் உடனே ஆட ஆரம்பித்தான். வீடே சந்தோஷமாக தெரிந்தது. அப்போது அருகில் இருக்கும் ஜன்னல் பக்கம் வெளியே பொம்மு பார்த்தபோது தெருவில்  அந்த கருப்பு  நாய் அவளையே கவனித்து கொண்டிருந்தது. பொம்மு மனதில் எதோ ஒரு நியாபகம் மின்னலாக வந்து மறைந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.